Thursday, 31 December 2020

துஆ

காலை நேரத்தை உதிக்கச் செய்யும் நாயகனே! இரவை அமைதியாக்கும் ரஹ்மானே! சூரியனையும், சந்திரனையும் காலக் கணக்கிற்கு ஏற்பச் சுழலச் செய்பவனே!  ஆதியும், அந்தமும் இல்லாத ஏக இறைவனே! உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்! எங்களைப் படைத்த ரப்பே! உனக்கே புகழனைத்தும்! உன்னையே வணங்குகிறோம். உன்னையே சரணடைந்தோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

கருணையாளனே! நேற்றைய நாளை விட இன்றைய நாளைச் சிறப்பாக்குவாயாக! இன்றைய நாளில் எங்கள் காரியங்களை இலேசாக்குவாயாக! உன்னிடம் இருந்தோ அல்லது பிறரிடம் இருந்தோ வருபவை எவையானாலும், அவை உன் அருளால் மட்டுமே கிடைக்கின்றன என நாங்கள் நம்புகிறோம். எங்கள் தேவை அறிந்து உதவிடுவாயாக! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் இல்லங்களில் உன் அருளை விரிவாக்குவாயாக! எங்களின் ரிஜ்குகளில் பரக்கத் செய்வாயாக! எங்களின் நிலைமைகளை மிக அழகான, மன அமைதி தரும் நிலைமைக்கு மாற்றுவாயாக! எங்களின் நோய்களைக் குணப்படுத்துவாயாக! எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக! எங்களின் ஈமானை வலுப்படுத்துவாயாக. துன்பங்களை எதிர் கொள்ளும் ஆற்றலைத் தருவாயாக!

("என்) இறைவனே! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும், என் சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"  (அல்குர்ஆன் : 14:40)

"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து, எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! (அல்குர்ஆன் : 25:74)

"இவ்வுலகிலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் : 7:156)

அனைத்து உலகிற்கும் அதிபதியே! உன்னிடமிருந்து எங்களின் எல்லா நோய்களும் நீங்கிடும் ஷிபாவைத் தருவாயாக! எங்களுக்கு நலன் தருபவற்றைப் பெறுகின்ற ஆற்றலைத் தருவாயாக! உன் அருளை விரிவாக்குவாயாக! துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் மன வலிமையைத் தருவாயாக. நீ அருள்வதைக் கொண்டு திருப்தி கொள்ளும் உள்ளத்தைத் தருவாயாக! உன் படைப்புகளுடன், பெருந்தன்மையுடன் பழகும் வகையில் எங்கள் உள்ளத்தை விரிவாக்குவாயாக.

காலம் கடக்கு முன் பாவமன்னிப்பின் பால் விரையும் மனோபாவத்தைத் தருவாயாக! நாங்கள் வாழ்கின்ற காலத்திலும், எங்கள் மரணத்திலும், எங்கள் அந்தரங்கங்களை அழகாக ஆக்குவாயாக! மரணத்திற்குப் பின் எங்கள் கப்ரை விசாலமாக ஆக்குவாயாக!

'இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!""பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!"

எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவற்றின் காரணமாக, உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்து விடாதே! எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக, உன்னிடம் உள்ள அபரிதமான நலன்களைத் தடுத்து விடாதே! எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக, கேள்விக் கணக்குக் கேட்கும் நாளில் எங்களைத் தண்டித்து விடாதே! எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக, எங்களுக்கு எந்த இழப்பையும்  செய்து விடாதே! நீ சங்கைக்குரியவன்! உன் கருணை அனைத்துப் பொருட்களின் மீதும் பரவி இருக்கிறது!

காரணங்களுக்கெல்லாம் காரணமானவனே! அனைத்து வாசல்களையும் திறப்பவனே! சப்தங்களைக் கேட்பவனே! அழைப்பவர்களுக்குப் பதிலளிப்பவனே! தேவைகளை நிறைவேற்றுபவனே! நீ அளிக்கும் ஹலாலானவற்றைக் கொண்டு, ஹராமானவற்றிலிருந்து எங்களுக்குப் போதுமாக்குவாயாக! உன் மேலருளால்,  உன்னை அல்லாத பிறரை விட்டும், எங்களைத் தேவையற்றவவர்களாக ஆக்குவாயாக! உன் நிஃமத்களை எங்களுக்கு நிரந்தரமாக்குவாயாக! எங்கள் மீது எவற்றை விதித்துள்ளாயோ, அவற்றில் உன்  மேலதிகக் கருணையைக் காட்டுவாயாக! 

நோய்களைக் குணப்படுத்துபவனே! உன் ஷிபா அன்றி வேறெந்த மருந்தும் பலனளிக்காது. உன்னை நின்று வணங்க இயலாத அளவு எங்களின் உடலில், உன் சோதனையை ஏற்படுத்தி விடாதே!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம். உறுதியான, அதன் பின் குப்ரு ஏற்படாத ஈமானை எங்களுக்கு அருள்வாயாக! இவ்வுலகிலும், மறுமையிலும் உன் சங்கையான அற்புதங்களை அடையும் ரஹ்மத்தை அருள்வாயாக!

யா அல்லாஹ்! விதியில் வெற்றியைக் கேட்கிறோம். ஷுஹதாக்களுக்கான இடத்தைக் கேட்கிறோம். ஷுஹதாக்களின் வாழ்க்கையைக் கேட்கிறோம். எங்களின் எதிரிகளுக்கு எதிரான உதவியைக் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! எங்களைப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கண்ணியப்படுத்துவாயாக!  எங்களை வழி கேட்டில் இழுத்துச் செல்லாத செல்வத்தைக் கொடுப்பாயாக! பலனுள்ள கல்வியைக் கொடுப்பாயாக. பொறுமையான உள்ளத்தைக் கொடுப்பாயாக. கடனில்லா வாழ்வைக் கொடுப்பாயாக. எங்கள் ஆலிம் பெருமக்களுக்கும், செல்வர்களுக்கும் சமுதாயச் சிந்தனையைக் கொடுப்பாயாக. எங்கள் அரசியல் தலைவர்களுக்குத் தூய எண்ணத்தைக் கொடுப்பாயாக. எங்கள் இளைஞர்களுக்கு மார்க்கப் பற்றைக் கொடுப்பாயாக. எங்கள் பெண்களுக்கு இம்மை, மறுமைக்கான நல்லறிவைக் கொடுப்பாயாக. எங்கள் குழந்தைகள் இம்மையிலும், மறுமையிலும் சிறந்து விளங்க, நல்ல கல்வி ஞானத்தைக் கொடுப்பாயாக. எங்கள் அனைவருக்கும் உன்னை மட்டுமே வணங்கி, உன்னிடம் மட்டுமே உதவி கேட்கும் ஈமானைக் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! உன்னிடம் எங்களின் தேவைகளை முன் வைக்கிறோம். எங்களின் சிந்தனை, குறைவாக இருந்தாலும், எங்களின் அமல்கள் குறைவாக இருந்தாலும், உன் கருணையின் பால் தேவை உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்துவாயாக! எங்கள் நோய்களைக் குணப்படுத்துவாயாக! எங்கள் நிலைமைகளைச் சீர்படுத்துவாயாக! என்றும் உன்னை வணங்கி, உன்னிடமே உதவி கேட்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!

"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"  (அல்குர்ஆன் 2:201)

"பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸ்தாரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!"

''இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்கு உள்ளாக்காது இருப்பாயாக!"

''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா."

''எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ, அவர் (கண்ணியம் அடைவார்)." (அல்குர்ஆன் 26: 83-89)

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

*ஆமீன்*

Friday, 18 December 2020

குழந்தைக்காக துஆ

அல்ஹம்துலில்லாஹ்! மீண்டும் உயிர் கொடுத்து  காலைத் தொழுகை யை நிறைவேற்ற தவ்பீக் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் 

  யா அல்லாஹ்! இந்த காலை நேரத்தில் நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆவை நன் கேட்கிறேன்.

 குழந்தை பாக்கியம் இல்லாத ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “என இறைவா! நீ என்னை சந்ததி இல்லாமல் ஒற்றையாக விட்டு விடாதே. நீ வாரிசுதாரர்களில் மிகவும் மேலானவன்.” 

என உன்னிடத்தில் பிரார்த்தனை செய்த போது
 “நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; 

நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். 

 அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்”.

 என்று அவர்களுடைய துஆவை ஏற்றுக் கொண்டாய்.

யா அல்லாஹ்! எங்களில் யாருக்கு வாரிசு இல்லையோ அவர்களுக்கு வாரிசை கொடுப்பாயாக.

 எங்கள் சகோதரிகளில் யாருக்கு குழந்தை பாக்கியம் இல்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பாயாக.

 எங்களில் யாருக்கு வாரிசுகளை கொடுத்தாயோ அந்த வாரிசுகள் உறுதியான ஈமானுடன் நல்ல அமல்களுடன் வாழையடி வாழையாக வாழ அருள்புரிவாயாக.

 நாங்களும் எங்கள் வாரிசுகளும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாகவும் 
 உன்னை ஆசை கொண்டும் பயத்தோடும் பிரார்த்திப்பவர்களாகவும் உன்னிடம் உள்ளச்சம் கொண்டவர்களாகவும் ஆக்குவாயாக.

அவர்களையும் எங்களையும்
தீய நோக்கோடு யாரும் அணுகாமல் பாதுகாப்பாயாக!

எதிர்பாரா இடர்பாடுகள் ஏற்படாமல் பாதுகாப்பாயாக!

எங்களின் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கவலை களைப் போக்குவயாக 

ஆமீன்

Tuesday, 15 December 2020

துஆ

தினந்தோறும் பஜ்ரு தொழுகைக்குப் பின் இமாம்கள் இறைஞ்சிக் கேட்கும் துஆ
----
اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ
. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا

. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا

. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِ يَاكَرِيْمُ يَارَحِيْمُ.
 اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ.
 وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ.

 وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.
    இரட்சகனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

  எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

   சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

அல்லாஹ்வின் சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! 

சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.
 (ஆமீன்)

துஆ

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ  

   யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.  

(அபூதாவூத்,அஹ்மத்)

اللهم اجعلني ممن نظرت اليه فرحمته , وسمعت دعائه فأجبتــه

யா அல்லாஹ்! யாரின்பக்கம் உன் பார்வையை செலுத்தி கருணை காட்டி,அவர்களின் துஆவை கேட்டு அதற்கு பதில் சொன்னாயோ அவர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
اللهم اني اسالك من فجاءة الخير و اعوذ بك من فجاءة الشر
யா அல்லாஹ்!உன்னிடத்தில் எதிர்பாரவிதத்தில் வரும் நன்மையை  கேட்கிறேன்.எதிர்பாராவிதமாக வரும் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்
ஆமீன்

துஆ

யா அல்லாஹ்! 
உன்னுடைய சிறப்புகள்
 உன்னுடைய கண்ணியம்,
உன்னுடைய மேன்மை,
உன்னுடைய வல்லமை,
உன்னுடைய ஆற்றல்,
உன்னுடைய அழகிய பெயர்கள்,
உன்னுடைய சிபத்துகள் 
ஆகியவைகள முன்னிறுத்தி
உன்னிடம் கேட்கிறேன்...

இப்பொழுது நாங்கள் இருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து 
 எங்களை விடுவிப்பாயாக!

رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ 
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்,

 அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும்

 எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

 எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

 எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! 

எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!

 எங்களை மன்னித்தருள் செய்வாயாக!

 எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; ஏக இறைவனை நிராகரிக்கும்  கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
அல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.

இறைவா! எங்கள் அதிபதியே!

 இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! 
மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. 

நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!

Saturday, 5 December 2020

காலை துஆ

என் ரப்பே! இந்த பஜ்ருடைய நேரத்தில் 
எங்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவாயாக!

எங்கள் உள்ளங்களை நல்லவற்றை விரும்பும் உள்ளமாக ஆக்குவாயாக!

எங்களுக்கு உதவிசெய்பவனாக நீ
ஆகுவாயாக!

நல்வாய்ப்பை, குதுகாலத்தை,மன்னிப்பை
எங்களின் மீது விதிப்பாயாக!

எங்களின் துக்கங்களை போக்குவாயாக!

உன்னை அஞ்சிவாழ்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! உன்னுடைய அருட்கொடையைப் பெற்ற ஆனந்தத்தில் அழுத வண்ணம்  நன்றி பெருக்கால் சஜ்தாவில் விழவைக்கும் மகிழ்ச்சியை ரிஜ்காக எனக்கு அருள்வாயாக!

அத்தகைய மகிழ்ச்சியின் பால் நான் மிகவும் தேவையுடையவனாக இருக்கிறேன்
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இந்த துவை) ஏற்றுக் கொள்வாயாக;

 நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”.

 எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக;

 நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

ஆமீன்

Saturday, 28 November 2020

நபிகளாரின் துஆ

நபிகள் நாயகம்ﷺ அவர்கள் கேட்ட துஆ

اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ لَهَا، وَأَتِمِمْهَا عَلَيْنَا))

([1]) أخرجه أبو داود، كتاب الصلاة، باب التشهد، برقم 969، 

அல்லாஹ்வே!
எங்களின் உள்ளங்களை அன்பினால் இணைப்பாயாக!
எங்களுக்கிடையை இணக்கத்தை ஏற்படுத்துவாயாக!
 சாந்திக்கான பாதையை எங்களுக்குக் காட்டுவாயாக! 
இருளிலிருந்து ஒளியின் பால் எங்களைக் காப்பாயாக!
பகிரங்கமாகவும்,இரகசியமாகவும்வெளிப்படும் அனைத்து வெருக்கத்தக்கவைகளிலிருந்து
எங்களைப் பாது காப்பாயாக!
எங்களின் செவிகளிலும்,எங்களின் பார்வையிலும்,எங்களின் உள்ளங்களிலும்,எங்களின் மனைவிமார்களிடமும்,எங்களின் சந்ததினர்களிடமும் பரக்கத்தை பொழிவாயாக!
எங்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக நீ கருணையுள்ள மன்னிப்பவனாக இருக்கிறாய்.
நீ அளிக்கும் நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக,
அவற்றைக் கொண்டு உன்னை புகழ்பவர்களாக,
அதற்கு தகுதியானவர்களாக,
அவற்றை எங்களின் மீது 
முழுமைப்படுத்தப்படுபவர்களாக
எங்களை ஆக்குவாயாக!
   ------அண்ணல்நபிﷺ அவர்கள் கேட்ட துஆ

Saturday, 21 November 2020

ஏக இறைவா

எங்களை படைத்த ஏக இறைவா! 
இந்த அதிகாலை நேரத்தில் நபி யாக்கூப் (அலை) அவர்கள் சொன்னது போல என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் உன்னிடத்தில் முறையிடுகிறேன்
.நீ தான் எங்களை படைத்தவன் என்பதிலும் நீ மட்டும் தான் எங்களைக் காப்பவன் என்பதிலும் எங்களுக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.
அதே போன்று அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்பதிலும் அவர்கள் காட்டிய வழி நடந்தால் தான் எங்கள் மறுமை வாழ்வு சிறக்கும் என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
உன் மீதும் உந்தன் நபி மீதும் எங்களுக்கு அளவுகடந்த முஹப்பத் இருக்கிறது.தேவைப்படுமாயின் இஸ்லாத்திற்காக ஷஹிதாக வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது.
     ஆனால் எங்கள் ரப்பே நாங்கள் வாழுகின்ற இடம் குஃப்ரியத்தாலும் ஜாஹிலியத்தாலும் வழிகேட்டாலும் சூழ்ந்திருக்கிறது.அவைகள் எங்கள் ஈமானைப் பதம் பார்க்கின்றன.எங்கள் உள்ளம் மக்களிடம் கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர் பார்க்கிறது.
பெருஞ்செல்வம் இருந்தால் தான் கண்ணியம் என நினைத்து எங்களில் பலர் செல்வத்தை தேடி ஓடுகிறார்கள்.
அரசியல் அதிகாரம் இருந்தால் தான் நமக்கு மரியாதை என எண்ணி சிலர் அரசியல் நோக்கி ஓடுகிறார்கள்.

ஆபாசங்களும் அனாச்சாரங்களும் தலை விரித்து ஆடுகின்றன. அதில் எங்களின் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கி சீர் அழிகின்றனர்.அதனை தடுக்க வழி இன்றி எங்களைப் போன்றோர் தடுமாறுகின்றனர்.
நாங்கள் எங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்றோமோ என்ற குற்ற உணர்ச்சி எங்களை வாட்டுகிறது.
      யா அல்லாஹ்!இந்த நேரத்தில் தாயிஃப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திய பொழுது,நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆவை தான் உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
      “யா அல்லாஹ்!என் பலவீனத்தையும் மக்கள் என்னை லேசாக கருதுவதையும் உன்னிடம் முறையிடுகிறேன்! கிருபையாளர்களில் மிகப்பெரும் கிருபையாளனே!நீ கிருபையாளர்களில் மிகக் கிருபையனவனாக இருக்கிறாய்.நீ என்னை யாரிடத்தில் ஒப்படைக்கிறாய்? என்னிடம் கடுகடுக்கும் எதிரியிடமா? அல்லது என் மீது நீ ஆதிக்கத்தை வழங்கிய உறவினரிடமா?
   யா அல்லாஹ்!நீ என் மீது கோபப்படவில்லையானால் அதுவே போதும்.நான் எதையும் பொருட்படுத்தவில்லை.உன் பாதுகாப்பே எனக்கு போதுமானது.”
  யா ரஹ்மானே! நபி கேட்ட துஆவுடன் நானும் என் கோரிக்கையை முன் வைக்கிறேன்.எங்களுக்கு ஹஜ்ரத் அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களைப் போல் உண்மை பேசும் நாவைக் கொடு. ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களைப் போல் தவறுகளைத் தட்டி கேட்கும் தைரியத்தைக் கொடு. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களைப் போல் பாவம் செய்யாமல் இருக்கும் வெட்கத்தைக் கொடு.ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் போல் அறிவு ஞானத்தைக் கொடு.ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு வழங்கியதைப் போன்று மார்க்கத்திற்கு செலவு செய்யும் பொருளாதாரத்தைக் கொடு.யாரிடமும் கை ஏந்தாமல் மார்க்கத்தை சொல்லும் நாவைக் கொடு.எங்களுடைய செயல்களில் இஹ்லாஸ் எண்ணும் தூய எண்ணத்தைக் கொடு.வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து, மரணிக்கின்ற பொழுதும் உனக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே மரணிக்கும் பாக்கியத்தை தருவாயாக.ஆமீன்.

Sunday, 4 October 2020

காலை துஆ

الحمدلله والصلاة والسلام علي محمد وعلى آله وأصحابه أجمعين 
யா அல்லாஹ்! என்னை பொறுமையாளாக ஆக்கு!
என்னை உனக்கு நன்றி செலுத்துபவனாக ஆக்கு!
என்னை என் பார்வையில் சிறியோனாகவும்,மற்றவர்களது பார்வையில் மதிப்புமிக்கவனாகவும் ஆக்கி அருள்புரி!
எங்களது பூமியிலே பரக்கத்தையும்,செழிப்பையும்,நிம்மதியான சூழ்நிலையையும் அருள்வாயாக!
நீ அளித்த அருட்கொடைகளில் உள்ள பரக்கத்தை அடையாதவனாக என்னை ஆக்கிவிடாதே!
எவற்றை எனக்கு அருளவில்லையோ அவற்றை எனக்கு சோதனையாக ஆக்காதே!
யா அல்லாஹ்! எனது புற உருவை நீ அழகாக்கினாய்.அதைப்போன்றே என் அக உருவத்தை-என் குணங்களையும் அழகுமிக்கதாய் ஆக்குவாயாக!
என் உள்ளத்தின் உள்ள வஞ்சகத் தன்மையை நீக்குவாயாக!
எங்களை உயிர் வாழச் செய்யும் காலமெல்லாம் வழிகெடுக்கும் சோதனைகளை விட்டும் எங்களை காத்தருள் ரப்பே!

Friday, 2 October 2020

ஜும்மா வின் காலை நேர துஆ

يالله,يا احد يا واحد يا موجود يا جواد يا باسط يا كريم ياوهاب ياذا القوة ياغني يا مغني ي
ا فتاح يا رزاق يا عليم يا حكيم يا حي ياقيوم يارحمن يا
رحيم يا بديع السموات والارض.يا ذا الجلال والاكرام ,ياحنان يا منان انفحني منك بنفحة خير تغنني بها عمن سواك
(وان تستفتحو فقد جاءكم الفتح)
(انا فتحنا لك فتحا مبينا)
(نصر من الله زفتح قريب)
اللهم يا غني ياحميد,يامبدىء يامعيد ياودود يا فعال لما يريد
اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك واحفظني بما حفظت به الذكر وانصرني بما نصرت به الرسل انك على كل شيء قدير.

சிறப்பான ஜும்ஆ நாளின்  அதிகாலை தொழுகையை தொழ தவ்ஃபீக் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !
யா அல்லாஹ்! இன்று அரஃபா மைதானத்தில் லட்சக்கணக்கான உன் அருள் பெற்ற அடியார்கள், ஜும்ஆவும் அரஃபா நாளும் இணைந்த மிக சிறப்பான நன்னாளில் உன் கருணை வேண்டி துஆ செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய துஆவை ஏற்று கொள்வாயாக!
இவ்வாண்டு அந்த பாக்கியம் பெறாத பாவிகளான எங்களின் பாவத்தை மன்னிப்பாயாக!
நாங்கள் இவ்வுலகத்தை விட்டு மரணிக்கும் முன் அரஃபா நாளும் ஜும்ஆ நாளும் இணைகின்ற ஆண்டில் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா ரப்! இந்த அருள் இறங்கும் நேரத்தில் நான் கேட்கும் துஆவை ஏற்று கொள்வாயாக!

யா அல்லாஹ்! யா அஹது ! யா வாஹித்! யா மவ்ஜூத்! யா ஜவ்வாது! யா பாஸித்! யா கரீம்! யா வஹ்ஹாப்! யா தல் குவ்வத்தி! யா கனி! யாமுக்னி! யா ஃபத்தாஹ்! யா ரஜ்ஜாக்! யா அளீம்! யா ஹக்கீம்! யா ஹய்யு! யா கய்யூம்! யா ரஹ்மான்! யா ரஹீம்! யா பதியுஸ் ஸமாவாத்தி வல் அர்ள்! யா தல் ஜலாலி வல் இக்ராம்! யா ஹன்னான்! யா மன்னான்! இன்ஃபhஹ்னி மின்க பிநஃபஹத்தின் ஹைரின் துக்னியனி பிஹா அம்மன் ஸிவாக்!
யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே! உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே! விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே! சக்தியுடையவனே! தேவையற்றவனே! பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே! வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே! அனைத்தையும் அறிந்தவனே! நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே! வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே! சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க  இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக! 
நீ சொல்லியிருக்கிறாய் : 
“நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.

மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:
“உனக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.” 
“நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.
அல்லாஹும்ம யா கனி! யா ஹமீது! யா முப்தியு! யா முயீது! யா வதூத்! யா فعال லிமா யுரியீத்! இக்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக! வ واغنني பிஃவள்லிக அம்மன் ஸிவாக்! வஹ்ஃபள்னி பிமா ஹஃபிள்த பிஹி திக்ர! வன்ஸுர்னி பிமா நசர்த பிஹி ரஸுல இன்னக்க அலா குல்லி ஷைய்யின் கதீர்!
யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே! உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து  நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக! உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக! உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ 
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
 யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். 

 رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 

வ சல்லல் லாஹு அலா முஹம்மத் வ சல்லல் லாஹு அலை ஹி வசல்லம்

Friday, 25 September 2020

காலை நேரப் பிரார்த்தனை

மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலையில் திக்ர்  செய்யும் வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் தனிப் பெருங் கருணை உண்டாவதாக

اللهم إني أسألك في صلاتي ودعائي . بركة تطهر بها قلبي، وتكشف بها كربي ، وتغفر بها ذنبي ، وتصلح بها أمري ، وتغني بها فقري ، وتذهب بها شري

யா அல்லாஹ்! என்னுடைய தொழுகையிலும்,என்னுடையதுஆ விலும்
பரக்கத்தைக் கேட்கிறேன் .

அதன் மூலம் என் உள்ளம் பரிசுத்தமடைய வேண்டும். 

என்னுடைய துன்பங்கள் நீங்க வேண்டும்

,என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்,

'என் ஏழ்மை நீங்கி நான்  தன்னிறைவு அடைய வேண்டும்'

என்னுடைய காரியங்கள் சீரமைக்கப்படவேண்டும்,

என்னுடைய தீமைகள் போக்கப்படவேண்டும்,

என்னுடைய கவலைகள்,துக்கங்கள் மகிழ்ச்சியாக மாற்றப்படவேண்டும்,

என்னுடை நோய் குணமாக வேண்டும்,

என்னுடைய கடன்கள் நிறைவேறவேண்டும்,

என்னுடைய முகம் பிரகாசமாக வேண்டும்.

யா அல்லாஹ்! யாரஹ்மான்!
என்னுடைய தொழுகை உன்னுடைய பரக்கத்தை கொண்டு வரும் வகையில் முழுமையாக அமைய தவ்பீக் செய்வாயாக!

ஸல்லல்லாஹு அலா கைர கல்கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வ ஸல்லிம் அலைஹி.
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஆமீன்

Monday, 31 August 2020

காருண்ய நபி அவர்கள் கேட்ட துஆ

காருண்யநபி ﷺ அவர்கள் தினந்தோறும் கேட்ட துஆ
**************------*************----***-----------------

: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ القَبْرِ، وَعَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغرب

,

அல்லாஹ்வே! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இரட்சகனே உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, பெருங்குழப்பவாதியானமஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.

ஏகஇறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என்னிலிருந்து என் தவறுகளைக் கழுவிடுவாயாக!

, வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக!.)'

அறிவிப்பாளர்:அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்

Sunday, 26 July 2020

காலை நேர துஆ

صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِيَاكَرِيْمُ يَارَحِيْمُ. اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ. وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ. وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.

யா அல்லாஹ் உனக்கே அனைத்து புகழும் நன்றியும்.
 எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக! 

இரட்சகனே!! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு வளத்தை பெருக்கும் காலைநேரமாக ஆக்கிஅருள்வாயாக! நன்மையில் சமீபத்ததாகவும், ;தீமையை விட்டு தூரமானதாகவும், தீங்கற்றதாகவும் நஷ்டமற்றதாகவும்,நலன்கள் தடுக்கப்படாததாகவும்(எங்களுக்கு அதை)ஆக்கி வைப்பாயாக! 

யா அல்லாஹ்! எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமாகவும் சௌக்கியமானதாகவும் ஆக்கி வைப்பாயாக! 
இறைவனே !உன்னிடமிருந்து எங்களுடைய காலை நேரத்தை திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக! கடந்'து போன காரியங்களின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 
ஏ சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இறைவனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை உத்தமர்களுடைய காலை நேரமாக்கியருள்வாயாக! மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக! இன்னும் எங்கள் இருதயங்களை அச்சமுள்ள ஹிருதயங்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் சரீரங்களை  வழிப்பட்டவர்களின் சரீரங்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்கி வைப்பாயாக! எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்கி வைப்பாயாக! மறதியாளர்களின் தூக்கத்தை விட்டும் எங்களை எழுப்பி வைப்பாயாக! உத்தமர்களுடைய பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக! இன்னும் ஏ சர்வலோகங்களின் இரட்சகனே சுவர்க்கத்தை எங்களுக்கு சாதனமாக்கித் தருவாயாக! அல்லாஹ்வுடைய சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும். சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். (ஆமீன்)

Saturday, 30 May 2020

ரமளான் இரவு துஆ

அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய சிறப்பான ரமளான் மாத அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே  உனக்கே புகழ் அனைத்தும் !
   யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும்  உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!
   யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!
   யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!
     யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!
  யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து  அருள் புரிவாயாக!
     எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத்  தருவாயாக! 
    ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!
    யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிராயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!
    யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள்  பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக 
   கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!
    யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக! எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !
    என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக 
சல்லல்லாஹு அலா முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் 
ஆமீன்

Friday, 29 May 2020

என்னைப் படைத்த என் ரப்பே!



என்னைப் படைத்த என் ரப்பே!
என் மீது நீ விதித்த விதி துஆ வினால் மாறுமென்றால்
என் இரு கரங்கள் ஏந்தி உன்னிடம் மன்றாடுகிறேன்
அதனை என் விருப்பங்கள்,கனவுகள் நிறைவேறும் வண்ணம் மாற்றி அமைப்பாயாக!
என் மீது நீ திருப்தி கொண்டவனாக உன் பால் என்னை அழைத்துக் கொள்வாயாக!
ஆமீன்

காலையும் மாலையும் ஓதவேண்டிய துஆ

காலையும் மாலையும் ஓதவேண்டிய துஆ
----------------///--
யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக!
யா அல்லாஹ்! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் ஆரோக்கியத்தைத் தருவாயாக!
உன்னை அன்றி வேறு இறைவனில்லை.
இந்த துஆவைநபிபெருமான்ﷺ அவர்கள் ஓதுவார்கள். நூல்.அபூதாவூது 5090

#இப்தார்_நேரப்_பிரார்த்தனை

ரஹ்மானே!
அல்லாஹ்வே!
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இவ்வேளையில்
நாங்கள் எதிர்பார்ப்பதை விட
அதிகமான நன்மைகளைத்
தருவாயாக!
நாங்கள் அஞ்சுவதை விட
அதிகமான தீங்குகளை எங்களை
விட்டும் நீக்குவாயாக!
எப்போதும் உன்பக்கமே
எங்கள் உள்ளத்தை இணைப்பாயாக!
உன்னையல்லால் பிறரின் பால்
எங்கள் உள்ளத்தை இணைத்து விடாதே!
எங்களின் குறைகளை அறிந்துள்ளாய்
அவைகளை மறைப்பாயாக!
எங்களின் தேவைகளை அறிந்துள்ளாய்
அவைகளை நிறைவேற்றுவாயாக!
எங்களின் பாதுகாவலன் நீ மட்டுமே
உன்னையையே வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவியையும்
தேடுகிறோம்.
ஆமீன்.

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

வாருங்கள் இன்று நாம் செய்த தவறுகளுக்காக தவ்பா செய்து தூங்குவோம்.
**************************************
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த
பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி

தராவீஹ் தொழுகைக்குப் பின் இமாம்கள் கேட்கும் துஆ

தராவீஹ் தொழுகைக்குப் பின் இமாம்கள் கேட்கும் துஆ
_____==_____=======_
الّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத்தின்
யா அல்லாஹ்!
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக,
நீ விதித்த கடமைமைகளை
நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளைப் பேணுபவர்களாக,
ஜகாத்தை கொடுப்பவர்களாக,
உன்னிடம் இருப்பவைகளைத் தேடுபவர்களாக,
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக ,
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக,
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக,
இவ்வுலகின் மீது பற்றற்வர்களாக,
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக,
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக,
அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக,
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக,
மறுமை நாளில் உன்னுடைய நபியும்,தூதரும்,தூய்மையான நண்பரும்,உன் நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம்வருபவர்களாக,
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக,
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக,
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக,
பாலையும் , சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்)ஆகியோருடன்
இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பவர்களாக
எங்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! சங்கைமிகு இம்மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாக்கியவான்களாக எங்களை ஆக்குவாயாக!
எங்களை யாஅல்லாஹ்,யாஅல்லாஹ்,யாஅல்லாஹ் நிராகரிக்கப்பட்ட கெடுவாய்ப்பு பெற்றவர்களாக ஆக்கிவிடாதே!
யா அல்லாஹ்! ,ரமளானுடைய இரவுகளில் ஒவ்வொருஇரவிலும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற்றவர்கள், பாதுகாப்பு பெற்றவர்கள்,நரகில் நுழையாமல் தடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் எங்கள் இரட்சகனே! நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட, அதிலிருந்து விடுதலை பெற்றவர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!
கேள்வி கணக்கு நாளில் எங்களை மன்னிப்பாயாக!
ஸல்லல்லாஹு வ ஸல்லம அலா கைர கல்கி ஸய்யித்னா முஹம்மதின் வ ஆலிஹி , வ ஸஹ்பிஹி அஜ்மயீன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

நண்பர்களுக்காக துஆ

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இந்த அதி காலைவேளையில் உங்களுக்காக இந்த சகோதரன் துஆ செய்கிறேன்
அல்லாஹ்உங்கள் உள்ளங்களை குர்ஆனின் ஒளியால் பிரகாசிக்க செய்வானாக!
என்றென்றும் அவனுடைய கட்டளைக்கு அடிபணியும் நல்லோர் கூட்டத்தில் உங்களை என்னையையும் ஆக்குவானாக!
உங்கள் உள்ளத்தில் அமைதியையும் உடலில் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பானாக!
உங்கள் இல்லங்களில் அல்லாஹ்வின அருள் இறங்கட்டுமாக!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் உங்கள் உறவினர்களுக்கிடையே உள்ள உறவு நல்லுறவாக அல்லாஹ்ஆக்குவானாக!
இம்மை யின் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் செய்யும் ஹலாலான பணிகளில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!
நீங்கள் உங்கள் இல்லத்திலிருந்து பணிக்கு வெளியே சென்று மீண்டும் இல்லம் திரும்பும் வரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பாதுகாவலனாக இருப்பானாக!
உங்கள் குலக்கொழுந்துகள் இம்மை மறுமைக்கான நல்லறிவு பெற்று சிறப்புடன் வாழ்வார்களாக!
இதை படிக்கும் நீங்கள் வலக ஆமீன் உனக்கும் அவ்வாறே ஆகட்டும என் எனக்கு துஆ செய்வீர்களாக !
இஸ்லாத்தால் ஒன்றிணைந்த நம்மிடையே அல்லாஹ்பாசத்தையும் ஒற்றுமையையும் அதிகப்படுத்துவானாக!
நம்முடைய இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!ஆமீன்

குனூத் துஆ

குனூத் துஆ
اللَّهُمَّ لاَ تَدَعْ لَنا ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ،
وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ،
وَلاَ كَرْباً إِلاَّ نَفَّسْتَهُ
، وَلاَ مَيْتاً إِلاَّ رَحِمْتَهُ
، وَلاَ مَرِيضاً إِلاَّ شَفَيْتَهُ
، وَلاَ دَيْناً إِلاَّ قَضَيْتَهُ
، وَلاَ غَائِباً إِلاَّ حَفِظْتَهُ وَرَدَدْتَّهُ،
وَلاَ مُجَاهِداً فِي سَبِيلِكَ إِلاَّ نَصَرْتَهُ
، وَلاَ عَدُوّاً إِلاَّ أَهْلَكْتَهُ
، وَلاَ طَاغِيَةً إِلاَّ قَصَمْتَهُ،
ولاَ ضَالاًّ إِلاَّ هَدَيْتَهُ،
وَلاَ مَظْلُوماً إِلاَّ أَيَّدْتَهُ،
وَلاَ ظَالِماً إِلاَّ خَذَلْتَهُ،
وَلاَ عَسِيراً إِلاَّ يَسَّرْتَهُ،
وَلاَ وَلَداً إِلاَّ أَصْلَحْتَهُ،
وَلاَ عَيْباً إِلاَّ سَتَرْتَهُ،
وَلاَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيا وَالآخِرَةِ
هِيَ لَكَ رِضاً وَلَنا فِيها صَلاَحٌ
إِلاَّ أَعَنْتَنا عَلَى قَضَائِهَا وَيَسَّرْتَهَا لَنا
، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
எங்களைப் படைத்தவனே!
எங்களைக் காத்து வருபவனே!
எங்களது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டு விடாதே!
எங்களது எந்த ஒரு கவலையையும் மகிழ்வானதாக ஆக்காமால் எங்களை விட்டு விடாதே!
எந்த ஒரு துன்பத்தையும் நீக்காமல் எங்களை விட்டு விடாதே!
எந்த ஒரு நோயாளியையும் குணப்படுத்தாமல் விட்டு விடாதே!
எந்த ஒரு கடனையும் நிறைவேற்றாமல் விட்டு விடாதே!
எங்களை விட்டும் பிரிந்திருப்போரை பாதுகாத்து எங்களிடம் திரும்ப ஒப்படைக்காமல் விட்டுவிடாதே!
உனது பாதையில் போராடுகின்ற எந்த ஒரு போராளியையும் அவர்களுக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதே!
எங்களை அழிக்க துடிக்கும் எந்த ஒரு விரோதியையும் அழிக்காமல் விட்டு விடாதே!
எங்களில் யார் யாரெல்லாம் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டாமல் விட்டு விடாதே!
யாரெல்லாம் அநீதம் இழைக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்குரிய நீதி கிடைக்காமல் விட்டு விடாதே!
யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை தண்டிக்காமல் விட்டு விடாதே!
எங்களுக்கு எதெல்லாம் சிரமமாக இருக்கிறதோ அதையெல்லாம் லேசாக்காமல் விட்டு விடாதே!
எங்கள் குழந்தை செல்வங்களை நெறி படுத்தாமல் விட்டு விடாதே!
எங்களின் பெற்றோரின் பாவங்களை மன்னித்து அவர்கள் மீது கருணை காட்டாமல் விட்டு விடாதே!
எங்களையும் எங்களது குடும்பத்தாரையும் தொழுகையை நிலை நாட்டுபவர்களாக ஆக்காமல் விட்டு விடாதே!
எங்களது எந்த ஒரு குறையையும் பிறருக்கு மறைத்து அதை முறைப்படுத்தாமல் விட்டு விடாதே!
இம்மை மறுமைக்கான எங்களது தேவைகளில் எவை உனக்கு திருப்தியாக இருக்கிறதோ எவை எங்களுக்கு அவசியமாக இருக்கிறதோ அவைகளை நிறைவேற்றாமல் விட்டு விடாதே!
அவைகளை எங்களுக்கு லேசாக்கி தருவாயாக!
கருணையாளர்களுக் கெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே உனது கருணையினால் இவைகளை நிறைவேற்றுவாயாக!
---------------
யா அல்லாஹ்! உன்னிடம் துஆ கேட்டு அவைகளை ஏற்று கொண்ட கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக!
உன்னிடம் பணிந்து மன்றாடி உன்னுடைய கருணைக்கு ஆளானவர்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக!
உன் மீது தவக்கல் வைத்து நீ பொறுப்பேற்று கொண்டவர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!
எங்களை படைத்த ரப்பே! எங்களின் நல்அமல்களை ஏற்று கொள்வாயாக!
நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்கள் உன்னுடைய திருப்தி பெறுகின்ற நோக்கத்திற்காகவே செய்பவைகளாக ஆக்குவாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

துஆ; நபிசுலைமான்(அலை)அவர்கள் காட்டும் வழி

#துஆ; நபிசுலைமான்(அலை)அவர்கள் காட்டும் வழி
********************
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
“என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
(அல்குர்ஆன் : 38:35).
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட இந்த துஆவை சற்று ஆழமாக சிந்தியுங்கள்.
முதலாவதாக,ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் தன் தேவையை கேட்பதற்கு முன் எனது "பாவத்தை மன்னிப்பாயாக" என்று ஆரம்பிக்கிறார்கள்.
நாமும் இறைவனிடம் கையேந்தும் போது முதலில் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
இரண்டாவதாக, நாம் விரும்பும் நம்முடைய தேவைகள் கிடைப்பது நடைமுறையில் சாத்தியமானதா, அது கிடைக்குமா, என்று சிந்திக்காமல் அல்லாஹ்வின் ஆற்றல் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நம்முடைய பிரார்த்தனையை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற நல்லெண்ணம் கொண்டவர்களாக மனம் ஓர்மையுடன் கேட்க வேண்டும்.
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த உலகம் அழியும் வரை யாருக்கும் கிடைக்காத ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இது நடைமுறையில் சாத்தியமா?
அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானா?
என்றெல்லாம் சந்தேகப்படாமல் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
நபி அவர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்த அல்லாஹு தலா நபிஅவர்கள் கேட்டதையும் கொடுத்தான். அவர்கள் கேட்காததையும் மேலதிகமாகக் கொடுத்தான்.
அல்லாஹ் சொல்கிறான்;
فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ‏
அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
(அல்குர்ஆன் : 38:36)
وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ‏
கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும்,
(அல்குர்ஆன் : 38:37)
وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِىْ الْاَصْفَادِ‏
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 38:38)
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ‏
(நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
(அல்குர்ஆன் : 38:39)
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ
திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 38:40).
ஆம் சகோதரர்களே!!!
நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் இது நடக்குமா? என்று ஐயப்படாமல் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு நிச்சயம் அல்லாஹ் நமக்கு தருவான் என்ற மன உறுதியுடன் கேட்போமாக.
---------மீள் கணியூர் இஸ்மாயில் நாஜி

காலை நேர துஆ

யா அல்லாஹ்! துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இந்நேரத்தில் கேட்கிறேன் என் பாவங்களை மன்னிப்பாயாக!
கடந்த காலங்களில் என் திறமைக் குறைவின் காரணமாக நான் செய்த செயல்களினால் ஏற்பட்ட வேதனையும் அதன் எதிர் வினையாக எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய கவலையும் என்னை நிலைகுலையச் செய்கிறது.
தண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் உனக்கு கோடிக்கான அடியார்கள் உண்டு
ஆனால் என்னை ஆதரிப்பதற்கும் ஆறுதல் தருவதற்கும் என் நிலைமையை சீர் செய்வதற்கும் ஆற்றல் வாய்ந்த ஏக இறைவன் நீ ஒருவன் மட்டுமே!
யா அல்லாஹ்!
என் நிலைமைகளை சீர் செய்வாயாக! என் கவலையை போக்குவாயாக ! என் மீது கருணை காட்டுவாயாக !
ஆமீன்

பிள்ளைகளுக்காக ஓரு தந்தை யின் துஆ

பிள்ளைகளுக்காக ஓரு தந்தை யின் துஆ
___________
அல்லாஹும்ம லக ல் ஹம்து வலகஷ் ஷுக்ர்
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
ஏக இறைவா!
உனக்கே எல்லாப்புகழும்.
உனது அளவில்லா கருணையினால் எங்களுக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த வல்லவனே!உனக்கே எல்லாப் புகழும்.
எங்கள் பிள்ளைகளை உடல் நோய் , மன நோய்களை விட்டும் காப்பாயாக!
எங்களின் ஆண் பிள்ளைகளும்,பெண்பிள்ளைகளும் இம்மை மறுமைக்கான கல்விகளை கற்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களை த் தருவாயாக!
வழி கெடுக்கும் தோழர்களை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக!
திருமண வயதை அடைந்து விட்ட எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்துத் தருவாயாக!
பள்ளிகளுக்கும் பணியிடங்களுக்கும் செல்லும் எங்கள் செல்வங்கள் எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்ப நீ பாதுகாவலானக இருப்பாயாக!
எங்களின் ரப்பே! எங்களின் பிள்ளைகளை எங்களுக்கு சோதனையாக ஆக்கிவிடாதே!
எங்கள் பிள்ளைகள் நாங்கள் வாழும் காலமெல்லாம் தங்களின் சொல்லாலும் செயலாலும் எங்களின் மனம் குளிரச்செய்வாயாக!
அவர்கள் நல்ல அமலுடன் யாரிடமும் கையேந்தாமல் ஹலாலான வருமானத்துடன் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிவாயாக!
அவர்கள் தொழுபவர்களாகவும்,ஜக்காத் கொடுப்பவர்களாகவும். சமுயதாய பணிகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் ஆக்குவாயாக!
எங்களின் மரணத்திற்கு பிறகும் அவர்கள் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
கருணையுள்ள ரஹ்மானே! எங்களுக்கு நீ கருணை காட்டி குழந்தை செல்வத்தைக் கொடுத்தது போல் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் யார் யாருக்கெல்லாம் குழந்தை செல்வம் இல்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத தருவாயாக!
வயது முதிர்ந்த இப்ராஹீம் நபிக்கு இஸ்மாயீல் நபியை கொடுத்த ஏக இறைவா! குழந்தைக்காக ஏங்கித்தவிக்கும் எங்கள் சகோதரிகளுக்கு அவர்கள் மனம் குளிர குழந்தை செல்வத்தை அருள்வாயாக!
அல்லாஹும்ம ஸல்லிஅலா ஸய்யித்னா முஹம்மத் வலா ஆலி முஹம்மத் வாபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்