அல்ஹம்துலில்லாஹ்! மீண்டும் உயிர் கொடுத்து காலைத் தொழுகை யை நிறைவேற்ற தவ்பீக் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்
யா அல்லாஹ்! இந்த காலை நேரத்தில் நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆவை நன் கேட்கிறேன்.
குழந்தை பாக்கியம் இல்லாத ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “என இறைவா! நீ என்னை சந்ததி இல்லாமல் ஒற்றையாக விட்டு விடாதே. நீ வாரிசுதாரர்களில் மிகவும் மேலானவன்.”
என உன்னிடத்தில் பிரார்த்தனை செய்த போது
“நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்;
நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள்.
அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்”.
என்று அவர்களுடைய துஆவை ஏற்றுக் கொண்டாய்.
யா அல்லாஹ்! எங்களில் யாருக்கு வாரிசு இல்லையோ அவர்களுக்கு வாரிசை கொடுப்பாயாக.
எங்கள் சகோதரிகளில் யாருக்கு குழந்தை பாக்கியம் இல்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பாயாக.
எங்களில் யாருக்கு வாரிசுகளை கொடுத்தாயோ அந்த வாரிசுகள் உறுதியான ஈமானுடன் நல்ல அமல்களுடன் வாழையடி வாழையாக வாழ அருள்புரிவாயாக.
நாங்களும் எங்கள் வாரிசுகளும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாகவும்
உன்னை ஆசை கொண்டும் பயத்தோடும் பிரார்த்திப்பவர்களாகவும் உன்னிடம் உள்ளச்சம் கொண்டவர்களாகவும் ஆக்குவாயாக.
அவர்களையும் எங்களையும்
தீய நோக்கோடு யாரும் அணுகாமல் பாதுகாப்பாயாக!
எதிர்பாரா இடர்பாடுகள் ஏற்படாமல் பாதுகாப்பாயாக!
எங்களின் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கவலை களைப் போக்குவயாக
ஆமீன்
No comments:
Post a Comment