Tuesday, 9 May 2017

காலை துஆ

*اللَّهُــــــــــــــــــــــــــمَّ​ :*
  أنت العالم بالسرائر فأصلحها
وأنت العالم بالحوائج فاقضها
وأنت العالم بالذنوب فاغفرها
وأنت العالم بالعيوب فاسترها 

*اللَّهُــــــــــــــــــــــــــمَّ​ :*
أكرمنا بعظيم غفرانك
ويسر لنا طريق جناتك
.. آمين يارب العالمين.

              யாஅல்லாஹ்! எங்களின் அந்தரங்கங்ளை நீ நன்கறிந்தவன். அதை சீராக்குவாயாக!
எங்களின் தேவைகளை நன்கறிந்தவன்
அவைகளை நிறைவேற்றுவாயாக!
    எங்களின் பாவங்களை நன்கறிந்தவன் அவைகளை மன்னிப்பாயாக!
  எங்களின் குறைகளை நன்கறிந்தவன்
அவைகளை மறைப்பாயாக!
யா அல்லாஹ்! உன்னுடைய  மகத்தான மன்னிக்கும் தன்மையினால் எங்களை கண்ணியப்படுத்துவாயாக!
சொர்கத்தின் பாதை லேசாக்குவாயாக!
ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

Thursday, 4 May 2017

துஆ

அல்லாஹ்வே !என் எஜமானே !படைத்தவனே !ரிஜ்க் அளிப்பவனே !மன்னிப்பவனே !

அருட் கொடையாளனே !
நீ தான் என் பாதுகாவலன் !
நீ தான் வணக்கத்துக்குரியவன்

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!
என்னுடைய தவறுகளை
பொருட்படுத்தாமல்
விட்டுவிடு வாயாக !

குறைவாக இருந்தாலும் உன் மார்க்க சேவையில் ஈடுபட தவ்பீக்
செய்வாயாக !

நீ என்னை படைத்தவன் !நான் படைக்கப்பட்டவன்

நீ ரிஜ்க் அளிப்பவன் ,நான் ரிஜ்க் அளிக்கப்படுபவன்

நீ மன்னிப்பவன் நான் உன்னிடம் மன்னிப்பை தேடுபவன் .

நீ அருட்கொடையாளன் ,
நான் உன்னிடம் யாசிப்பவன்

இந்த ஏழை.உன்னுடைய தர்பாரில் கை யேந்தி நிற்கிறேன்

நாங்கள் எந்த நிலையிலும் நீ மட்டுமே எங்களின் வணக்கத்துக்குரியவன் ,
என உன்னை மட்டுமே
வணங்கிவருபவர்கள்

எங்கள் பாவங்களை மன்னித்து எங்களின் இம்மை மறுமை தேவைகளை நிறைவேற்று வாயாக !
ஆமீன்