Sunday, 29 August 2021

துஆ

 அளவற்ற அருளானே! நிகரற்ற அன்புடையோனே! உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும்உன் அருள் மழையைப் பொழிவாயாக!
"ரப்பே!நான் தோற்கடிக்கபட்டுவிட்டேன்
எனக்கு உதவுவாயாக" என்ற நூஹ்நபியின் அழைப்பை ஏற்று நபி அவர்களையும் அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றிய கருணையாளனே!
"எனக்கு அல்லாஹ் போதுமானவன்.அவன் பொருப்போற்றுக் கொள்வதில் சிறந்தவன்" என்ற இப்ராஹீம் நபியின் அழைப்பால் சுட்டெரிக்கும் நெருப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியவனே!
"நாம் மாட்டிக்கொண்டோமே! என்று மூஸாநபியின் உம்மத்தவர்கள் அஞ்சியபோது "என் ரப் என்னுடன் இருக்கிறான் அவன் எனக்கு வழிகாட்டுவான்" என நம்பிக்கையுடன் சொன்ன மூஸாநபிக்காக ஆர்பரிக்கும் கடலைப் பிளந்தவனே!
"ரப்பே!நான் அநியாயக்கார்களில் ஒருவனாக ஆகிவிட்டேன் என்னை மன்னித்து விடு"என இறைஞ்சிக் கேட்ட யூனுஸ் நபியை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றியவனே!
"என் ரப்பே ! என்னை நோய் கடுமையாக பீடித்திருக்கிறது நீ கருணையாளர்களில் மிகச் சிறந்த கருணையாளன் என உன்னை அழைத்த அய்யூப் நபியை துன்பத்திலிருந்து காப்பாற்றியவனே!
"என் ரப்பே ! எனக்கு உதவி அளி! எனக்கெதிராக யாருக்கும் உதவியளிக்காதே !
எனக்காக திட்டமிடு என்க்கெதிராக யாருக்காகவும் திட்ட மிடாதே" என்று உன்னிடம் இறைஞ்சிய எங்கள் கண்மணி நபிகள் பெருமானார் அவர்களை
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ‏
இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்.
(அல்குர்ஆன் : 54:45) என நபித் தோழர்களுக்கு முன் அறிவிப்பு செய்யவைத்து பத்ரு களத்தில் வெற்றியை அளித்தவனே!
அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்த வல்லவனே!
அல்லாஹ்வே! இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம்.
உலகமெங்கும் பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி இருக்கும் முஸ்லிம்களைக் காப்பாற்றி அருள்வாயாக!
எங்கள் நாட்டில் எங்களை அழித்திட திட்டமிடுவோர்களிடமிருந்து எங்களைக் காப்பாயாக!
எங்களில் சிறையில் வாடுவோர் விரைந்து விடுதலை யாக அருள் புரிவாயாக!
எங்களின் ஈமானை உறுதிப்படுத்துவாயாக!
துன்பங்களைத் தாங்கிடவும் எதிர்த்துக் களம் காணவும் எங்களின் உள்ளங்களுக்கு ஆற்றலைத் தருவாயாக!
கொடிய நோய்களிலிருந்து எங்களையும் எங்கள் நாட்டினரையும் உலக மக்களையும் காப்பாற்றுவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து அந்நிலையிலேயே எங்களின் ஆன்மாவைக் கைப்பற்றுவாயாக
இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்.

Sunday, 22 August 2021

அண்ணல் நபி அவர்களின் பிரார்த்தனை

இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட பிரார்த்தனை.
____________

اللَّهُمَّ أَعْطِنِي إِيمَانًا صَادِقًا ، وَيَقِينًا لَيْسَ بَعْدَهُ كُفْرٌ ، وَرَحْمَةً أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ عِنْدَ الْقَضَاءِ ، وَنُزُلَ الشُّهَدَاءِ ، وَعَيْشَ السُّعَدَاءِ ، وَمُرَافَقَةَ الأَنْبِيَاءِ ، وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ ، اللَّهُمَّ أُنْزِلُ بِكَ حَاجَتِي ، وَإِنْ قَصُرَ رَأْيِي ، وَضَعُفَ عَمَلِي ، وَافْتَقَرْتُ إِلَى رَحْمَتِكَ ، فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الأُمُورِ ، وَيَا شَافِيَ الصُّدُورِ ، كَمَا تُجِيرُ بَيْنَ الْبُحُورِ أَنْ تُجِيرَنِي مِنْ عَذَابِ السَّعِيرِ ، وَمِنْ دَعْوَةِ الثُّبُورِ ، وَمَنْ فِتْنَةِ الْقُبُورِ ،
الكتب » صحيح ابن خزيمة » كِتَابُ الصَّلاةِ
யா அல்லாஹ்!உண்மையான ஈமானையும், 
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்,
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்,
நல்வாய்ப்பைப் பெற்றோர்களின் நல்வாழ்க்கையையும்,
 நபிமார்களின் நல் நேசத்தையும்,
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்.

யா அல்லாஹ்! எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது,
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது,
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்.
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல் எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே,எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே,எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக!-

Thursday, 12 August 2021

துஆ

அல்லாஹும்ம லகல் ஹம்த் 
வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி

யாஅல்லாஹ்! உனக்கே புகழ் அனைத்தும் .
யா ரஹ்மான்! நா வரட்சியால் தவித்த அண்ணை ஹாஜிராவிற்கும் இஸ்மாயில் நபிக்கும் ஜம்ஜம் தண்ணீரை உருவாக்கி மகிழ்வைத் தந்தவனே!
இன்றைய நாளை மகிழ்வானதாகவும, பரக்கதானதாகவும. அதன்பின் துன்பமே வராத பாக்கியமிக்க தாகவும் ஆக்குவாயாக!
சிக்கலாகியிருக்கும் எங்கள் காரியங்களை சீர்திருத்துவாயாக
பரக்கத்தான பெருநாள் காலை வேளையில் உன்னிடம் கையேந்திக் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!

உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!

அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்.

அப் பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்.

அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்.

அப்பார்வையினால் எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்.

அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்.

அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் இம்மை,மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்

அப்பார்வையினால் எம் மக்களை அடக்கி ஆழ நினைப்போரை அவர்கள் புறப்படும் இடத்திலேயே தடுத்து நிருத்தப்படவேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் சிறை வாசிகள் விடுவிக்கப்படவேண்டும். அவர்களின் குடும்பங்களில் மகிழ்சியும், குதூகலமும் நிலவ வேண்டும்.

ஆமீன். யாரப்பல் ஆலமீன்.