Thursday, 30 March 2017

உடைந்த உள்ளத்தை ஒன்றினை ரப்பே

الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَـلَمِينَ
ؤيارب إن كان في نفسي انكساراً فلا جابر له سواك، وإن لامس قلبي شي فإنه لا يعلم بحالي إلا أنت، فاجعل لي من كل ضيق مخرجا.
யாஅல்லாஹ்!
உடைந்து போன என் உள்ளத்தை சீர்செய்ய உன்னையன்றி எனக்கு யாருமில்லை.
என்னுள்ளத்தை ஏதாவது  துன்பமோ நெருக்கடியோ தீண்டினால்
என் நிலைமையை உன்னையன்றி யாரும் அறிய முடியாது.
ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் நான் வெளியேறும் வழியை உருவாக்குவாயாக!
என் இரட்சகனே!
நீ பங்கீடு செய்யும் ஒவ்வொரு பேறுகளிலும்.நீ பரப்பும் ஒவ்வொரு ஒளிகளிலும், நீ விசாலப்படுத்தும் ஒவ்வொரு ரிஐ்குகளிலும்,நீ நீக்கும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும், நீ சீராக்கும் ஒவ்வொரு சோதனைகளிலிருந்தும் பங்களிப்புச் செய்யப்பட்ட மகத்தான மனிதனாக என்னை ஆக்குவாயாக!
ஆமீன்.

Tuesday, 21 March 2017

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.
இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமின் மீது தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள் கடமையாவதற்கும், திருட்டு, விபச்சாரம், கொலை மற்றும் மோசடி போன்ற குற்றங்களுக்கான தண்டனை விதிக்கப்படுவதற்கும் இரண்டு நிபந்தனைகள் உண்டு.
ஒன்று, அவன் புத்தி சுவாதீனம் உள்ளவனாக இருக்க வேண்டும்.
அதாவது, பைத்தியக்காரனாகவோ, மூளை வளர்ச்சி குன்றியவனாக இல்லாமல் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிபவனாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, பாலிஹஃ( major ) ஆனவனாக இருக்க வேண்டும்.
அதாவது, வயதிற்கு வந்தவராக இருக்க வேண்டும்.
பெண்ணாக இருந்தால் அவளுக்கு எப்போது மாதவிடாய் வரத் துவங்கு கிறதோ அப்பொழுது அவள் வயதுக்கு வந்தவராக கருதப்படுவாள்
இது, ஒரு பெண்ணின் குடும்ப பாரம்பரியத்தை பொருத்து, உடல்வாகை பொருத்து, அந்த நாட்டின் சீதோஷ நிலையை பொருத்து, ஒன்பது வயதிலிருந்தே துவங்கலாம்.
ஆணாக இருந்தால், அவனுக்கு எப்பொழுது ஸ்கலிதம் ஏற்படுகிறதோ அப்பொழுது அவன் வயதிற்கு வந்தவனாக கருதப்படுவான்.
இஸ்லாம் ஆண் 15 வயதில் மேஜர் ஆவதாக குறிப்பிடுகிறது.
முறை தவறி ஆண் பெண்ணிடம் உடலுறவு கொண்டாலோ குற்றம் புரிந்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கடும் தண்டனை விதிக்கிறது.
அதாவது. அவ்விதம் உறவு கொள்பவர் திருமணம் ஆகாதவராக இருந்தால் 100 கசையடியும் திருமணம் ஆனவராக இருந்தால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
இந்த கடுமையான தண்டனை சில நிபந்தனைகளின் அடிப்படையில் நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.
ஒருவர் தவறான முறையில் உடலுறவு (விபச்சாரம்) செய்தார் என்பதை 4 சாட்சிகள் உறுதிபடுத்த வேண்டும்.
அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் அவர்கள் உடலுறவு ஈடுபடுவதை பார்த்திருக்க வேண்டும்.
அவ்வாறின்றி, நான்கு சாட்சிகள் தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் பார்த்ததாக கூறினாலோ அல்லது, அவர்கள் சந்தேகத்திற்கு இடமாக இருந்தார்கள் என்று கூறினாலோ இருவரும் கட்டியணைத்து கொண்டிருந்தார்கள் என்று சொன்னாலோ மேலே குறிப்பிட்ட தண்டனை வழங்கப்பட மாட்டாது.
பாலிஃஹ்ஆகாத அதாவது வயதிற்கு வராத சிறுவனோ சிறுமியோ கொலை திருட்டு கடுமையான முறையில் தாக்குதல் போன்ற குற்ற செயல் செய்தால், அவனை முறையாக வளர்க்காத அவர்களுடைய பொறுப்பாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
என்ன தண்டனை என்பதை காஜி முடிவு செய்வார்.

Wednesday, 15 March 2017

இமாம் ஜஃபர் ஸாதிக் ரழி அவர்களின் துஆ

اَللّـهُمَّ اِنَّهُ لَيْسَ لي عِلْمٌ بِمَوْضِعِ رِزْقي وَاِنَّما اَطْلُبُهُ بِخَطَرات تَخْطُرُ عَلى قَلْبي فَاَجُولُ فى طَلَبِهِ الْبُلْدانَ فَاَنَا فيما اَنَا طالِبٌ كَالْحَيْرانِ لا اَدْري اَفى سَهْل هَوُ اَمْ في جَبَل اَمْ في اَرْض اَمْ في سَماء اَمْ في بَرٍّ اَمْ في بَحْر وَعَلى يَدَيْ مَنْ وَمِنْ قِبَلِ مَنْ وَقَدْ عَلِمْتُ اَنَّ عِلْمَهُ عِنْدَكَ وَاَسْبابَهُ بِيَدِكَ وَاَنْتَ الَّذي تَقْسِمُهُ بِلُطْفِكَ وَتُسَبِّبُهُ بِرَحْمَتِكَ اَللّـهُمَّ فَصَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ وَاجْعَلْ يا رَبِّ رِزْقَكَ لي واسِعاً وَمَطْلَبَهُ سَهْلاً وَمَأخَذَهُ قَريباً وَلا تُعَنِّني بِطَلَبِ ما لَمْ تُقَدِّرْ لي فيهِ رِزْقاً فَاِنَّكَ غَنِىٌّ عَنْ عَذابي وَاَنَا فَقيرٌ اِلى رَحْمَتِكَ فَصَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ وَجُدْ عَلى عَبْدِكَ بِفَضْلِكَ اِنَّكَ ذُو فَضْل عَظيم.

அல்ஹம்துலில்லாஹ்!
யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் என்னுடைய ரிஜ்க் எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை .என்னுடைய உள்ளத்தில் தோன்று கின்ற இடங்களிலெல்லாம் தேடிப் பார்க்கிறேன்.அது கடலிலிருக்கிறதா?
கரையிலிருக்கிறதா?
அது வானத்திலிருக்கிறதா?பூமிலிருக்கிறதா? யாரிடமிருக்கிறது ? எந்த திசையிலிருக்கிறது?
எதுவும் எனக்குத் தெரியாது,

     ஆனால் என் ரப்பே!
ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்
ரிஜ்க்கைப் பற்றி ஞானம் உனக்குமட்டுமே தெரியும்
அது உண்டாகும் காரணகாரியங்கள்
உன் கரங்களில் தான் இருக்கின்றன.
நீ தான் உன் கருணாயினால் அதை பங்கீடு செய்கிறாய்.
உன்னுடைய இரக்கமிகு குணத்தால் எங்களுக்கு அது கிடைக்கும் காரண காரியங்களை உருவாக்குகிறாய்.
  என் ரப்பே!
உன்னுடைய ரிஜ்க்கை எனக்கு விசாலமாக அருள்வாயாக!
அது கிடைக்கின்ற வழியை லேசாக்குவாயாக!
அதை அண்மையில் எனக்குக் கிடைக்கச் செய்வாயாக!
எனக்கு விதிக்கப்படாத ரிஜ்கை நான் தேடாமல் என்னைக் காப்பாயாக!
  என் இறைவா!
என்னைத் தண்டிப்பதை விட்டும் நீ தேவையற்றவன்
ஆனால் என் ரப்பே!
உன் கருணையின் பால் நான் மிகவும் தேவையானவன்
நான் செய்த தீய காரியங்களால்
நீ எனக்கு அளிக்க இருக்கும் ரிஜ்க்கைத் தடுத்துவிடாதே!
என்னை மன்னித்து எனக்கு நேர்வழி காட்டு!
உன்னையையே வணங்குகிறேன்
உன்னிடமே அழுது மன்றாடி உதவி கேட்கிறேன்
     என்னுடைய இம்மை மறுமைக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி அருள்புரிவாயாக!
    அல்லாஹும்ம ஸல்லிஅலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

Thursday, 9 March 2017