Wednesday, 26 May 2021

இப்தார் நேர துஆ

இப்தார் நேரத்தில் இறைவனிடம் வேண்டுதல்
_:__
اللهم اجعل ابنائنا حراس الدين ومن الذاكرين والمذكورين والطف بهم اللهم علق قلوبهم بالمساجد وبطاعتك واجعلهم من اوجه من توجه اليك واحبك

யா அல்லாஹ்! எங்கள் பிள்ளைகளை மார்க்கத்தின் பாதுகாவலர்களாகஆக்குவாயாக!
உன்னை நினைப்பவர்களாக, 
நல்ல விஷயங்களில் நினைவூட்டப்படுபவர்களாக ஆக்குவாயாக!
 எங்கள் பிள்ளைகளுக்கிடையை உள் அன்பை உறுதிபடுத்துவாயாக!

அவர்களின் உள்ளங்களை மஸ்ஜிதுடனும்,வணக்கவழிபாடுகளுடனும் தொடர்புடையாதாக ஆக்குவாயாக!
உன்பால் முன்னோக்குபவர்களில்,
உன்னைநேசிப்பவர்களில் முதலாம் வரிசையில் நிற்பவர்களாக ஆக்குவாயாக!

  அவர்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்குவாயாக!
 பெற்றோர்களான நாங்கள் செய்யும் தவறுகளால் எங்கள் பிள்ளைகளின்  இவ்வுலக,மறுஉலக வாழ்க்கையை பாதிக்காமல்  பாதுகாப்பாயாக!
   எங்கள் பிள்ளைகளும் நாங்களும் செய்த பாவங்களை அருள்கூர்ந்து மன்னித்து சொர்கத்திலும் எங்களை ஒன்றினைப்பாயாக!
ஆமீன்.

Tuesday, 25 May 2021

துஆ

: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ 
 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ التَّوْفِيقَ لِمَحَابِّكَ مِنَ الأَعْمَالِ ، وَصِدْقَ التَّوَكُّلِ عَلَيْكَ ، وَحُسْنَ الظَّنِّ
யா அல்லாஹ்!
நிச்சயமாக நான் பூரண ஆரோக்கியத்தையும்,கற்பொழுக்கத்தையும்,அமானிதத்தைப் பேணுவதையும்,நற்குணங்களையும், விதியை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதையும் உன்னிடம் கேட்கிறேன்.
யா அல்லாஹ்! அமல்களில் நீ விரும்புகின்றவைகளின் பாலும்,உன்னின் மீது உண்மையான தவக்குலின் பாலும்,உன்னைப்பற்றிய நல்லெண்ணத்தின் பாலும் எனக்கு நல்லுதவி புரிவாயாக!
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156

Monday, 24 May 2021

ரமளான் மாத துஆ

அல்ஹம்துலில்லாஹில்லதீ ஹதானா லிஹாதா வமா குன்னா நஹ்ததீ லவ்லா அன் ஹதானல்லாஹ்

நாங்கள் இந்த நல்லமல்கள் செய்ய நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
அவன் நேர்வழி காட்டியிராவிட்டால் நாங்கள் நேர்வழியை அடைந்திருக்க முடியாது.

ஏகனே! யாரிடமும் எத்தேவையுமற்றவனே!
உனக்காக,உன் மீதுள்ள விசுவாசத்தால்,உன் நன்மைகளை எதிர் பார்த்தவர்களாக 
முப்பது நாட்கள் நோன்பு நோற்றோம்
முப்பது இரவுகள் நின்று வணங்கினோம்
எங்கள் அமல்களில் எவ்வளவு குறைபாடுகள்  இருந்தாலும் ஏற்றுக் கொண்டு எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

யா அல்லாஹ்! 
பரக்கத்தான இம் மாதத்தில் 
 நீ மன்னிப்பளித்தவர்களில்
ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!பரக்கத்தான  இம்மாதத்தில்  உன் திருப்தியை பெற்றவர்களில் ஒருவனாக என்னையையும்
ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!  இப்புனித மாதத்தில் உன் மன்னிப்பைப் பெற்று நரகம் ஹராமாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக
என்னையையும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
மறுமையில் வலது கையில் குறிப்பேடு அளிக்கப்பட்டு,கேள்விகணக்கும்
லேசாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!மறுமையில் உன் முன்னால் நான் நிற்பதை சிறப்பாக்குவாயாக!!

உன் அழகு முகத்தை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கும் அளிப்பாயாக!

கண்மணி நாயகம் ﷺ அவர்களுடன் சொர்கத்தில் அருகே இருக்கும் பாக்கியத்தை நல்கு வாயாக!
வரும் ரமளான் மாதத்திலும் நோன்பு 
நோற்கும் வாய்ப்பை நல்குவாயாக!

எங்களுக்கு நல்ல உடல்நலத்தையும்,உடல்,மன ராஹத்தையும்,நல்லமல்களுடன் நீண்ட ஆயுளையும் தந்தருள்வாயாக!

எங்கள் பெற்றோர் பாவங்களை மன்னிப்பாயாக!
ரமளான் மாதத்தில் நாங்கள் கேட்ட அனைத்து துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்.

Wednesday, 5 May 2021

துஆ

رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ 
“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” .
 “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ ،رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. 

“எங்கள் இறைவா! ஏக இறைவனை நிராகரிப்பவர்களுக்கு  எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! 

எங்கள் இரட்சகனே!!
 எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5

  யா அல்லாஹ்!உன்னிடம் மன்றாடிக் கேட்கிறேன்

 நீ ஒருவன் ஏகன் யாரிடமும் எத்தேவையும் இல்லாதவன் 

நீ யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெற்றெடுக்கப் படவும் இல்லை 
அத்தகைய என் ரப்பே !என்னுடை பாவங்களை மன்னிப்பாயாக!
நீ மன்னிப்பவன்் கருணையாளன்

اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها
யா அல்லாஹ்! 
பலனில்லாத கல்வியிலிருந்து உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன்

உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்து உன்னிடம்
பாதுகாவல் தேடுகிறேன்

நிறைவுபெறாத மன இச்சைகளைலிருந்து
உன்னிடம் பாது காவல் தேடுகிறேன்

நீ ஏற்றுக் கொள்ளாத துஆக்களிலிருந்து
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

கருணையாளனே! 
அனைத்து முஸ்லிம்களின் துன்பங்களையும்  நீக்குவாயாக!
ஆமீன்

இப்தார் துஆ

யா அல்லாஹ்!
மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்

#இந்நோய்   

நீ நாடியவர்களைத் தொற்றிக் கொள்ளும்,

நீ நாடியவர்களை விட்டும் விலகி ஓடும்

 உனது படைகளில் ஒன்றாக இருக்குமேயானால்

எங்கள் இரட்சகனே!
எங்களின் இல்லங்களை விட்டும்,
எங்களின் குடும்பத்தாரைவிட்டும்,
எங்களின் பிள்ளைகளை விட்டும்,
எங்களின் நேசத்திற்குறியவர்களை விட்டும் 

இந்நோய் அணுகாமல் 
விலக்கிவிடுவாயாக!

உன் உள்ளார்ந்த கருணையினால்
நோயின் தீங்கிலிருந்து எங்களைப்
பாதுகாப்பாயாக!

துன்பங்கள்,சோதனைகளிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!
நீ அனைத்துப் பொருட்களின் மீதும்
ஆற்றல் படைத்தவன்
#இப்தார்பிரார்த்தனை