يالله,يا احد يا واحد يا موجود يا جواد يا باسط يا كريم ياوهاب ياذا القوة ياغني يا مغني ي
ا فتاح يا رزاق يا عليم يا حكيم يا حي ياقيوم يارحمن يا
رحيم يا بديع السموات والارض.يا ذا الجلال والاكرام ,ياحنان يا منان انفحني منك بنفحة خير تغنني بها عمن سواك
(وان تستفتحو فقد جاءكم الفتح)
(انا فتحنا لك فتحا مبينا)
(نصر من الله زفتح قريب)
اللهم يا غني ياحميد,يامبدىء يامعيد ياودود يا فعال لما يريد
اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك واحفظني بما حفظت به الذكر وانصرني بما نصرت به الرسل انك على كل شيء قدير.
சிறப்பான ஜும்ஆ நாளின் அதிகாலை தொழுகையை தொழ தவ்ஃபீக் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !
யா அல்லாஹ்! இன்று அரஃபா மைதானத்தில் லட்சக்கணக்கான உன் அருள் பெற்ற அடியார்கள், ஜும்ஆவும் அரஃபா நாளும் இணைந்த மிக சிறப்பான நன்னாளில் உன் கருணை வேண்டி துஆ செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய துஆவை ஏற்று கொள்வாயாக!
இவ்வாண்டு அந்த பாக்கியம் பெறாத பாவிகளான எங்களின் பாவத்தை மன்னிப்பாயாக!
நாங்கள் இவ்வுலகத்தை விட்டு மரணிக்கும் முன் அரஃபா நாளும் ஜும்ஆ நாளும் இணைகின்ற ஆண்டில் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா ரப்! இந்த அருள் இறங்கும் நேரத்தில் நான் கேட்கும் துஆவை ஏற்று கொள்வாயாக!
யா அல்லாஹ்! யா அஹது ! யா வாஹித்! யா மவ்ஜூத்! யா ஜவ்வாது! யா பாஸித்! யா கரீம்! யா வஹ்ஹாப்! யா தல் குவ்வத்தி! யா கனி! யாமுக்னி! யா ஃபத்தாஹ்! யா ரஜ்ஜாக்! யா அளீம்! யா ஹக்கீம்! யா ஹய்யு! யா கய்யூம்! யா ரஹ்மான்! யா ரஹீம்! யா பதியுஸ் ஸமாவாத்தி வல் அர்ள்! யா தல் ஜலாலி வல் இக்ராம்! யா ஹன்னான்! யா மன்னான்! இன்ஃபhஹ்னி மின்க பிநஃபஹத்தின் ஹைரின் துக்னியனி பிஹா அம்மன் ஸிவாக்!
யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே! உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே! விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே! சக்தியுடையவனே! தேவையற்றவனே! பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே! வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே! அனைத்தையும் அறிந்தவனே! நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே! வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே! சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக!
நீ சொல்லியிருக்கிறாய் :
“நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.
மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:
“உனக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.”
“நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.
அல்லாஹும்ம யா கனி! யா ஹமீது! யா முப்தியு! யா முயீது! யா வதூத்! யா فعال லிமா யுரியீத்! இக்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக! வ واغنني பிஃவள்லிக அம்மன் ஸிவாக்! வஹ்ஃபள்னி பிமா ஹஃபிள்த பிஹி திக்ர! வன்ஸுர்னி பிமா நசர்த பிஹி ரஸுல இன்னக்க அலா குல்லி ஷைய்யின் கதீர்!
யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே! உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக! உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக! உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
வ சல்லல் லாஹு அலா முஹம்மத் வ சல்லல் லாஹு அலை ஹி வசல்லம்