Wednesday, 11 September 2019

முஹர்ரம் மாத துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.

புனிதமான முஹர்ரம் மாத  அதிகாலைநேர  தொழுகையை  நிறைவேற்ற அருள் புரிந்த அல்லாஹ்வே உனக்கே அனைத்து புகழும்.

யா அல்லாஹ்! எந்த நோக்கத்திற்காக எங்கள் கண்மனி நாயகம் ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்தார்களோ அந்த நோக்கமான இஸ்லாத்தின் கொள்கைகளை மேலங்கச் செய்வோர்களாக எங்களை ஆக்குவாயாக!
தீமையை எதிர்த்து போராடும் மன வலிமையை எங்களுக்கருள்வாயாக!

யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்! நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே! நீ அதை வாழ செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.
 

யா அல்லாஹ்! இல்மைக் கொண்டு எங்களுக்கு உதவி செய்வாயாக!. சகிப்புத்தன்மையைக் கொண்டு எங்களுக்கு அழகை கொடுப்பாயாக!. தக்வாவைக் கொண்டு எங்களுக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை கொண்டு எங்களைஅலங்கரிப்பாயாக!

யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன். நான், ஒரு மனிதனேயாவேன். எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக! அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர்  உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!

அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக! எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!

என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!

 رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

ஆமீன்

Sunday, 10 February 2019

thuaa

للهم إليك رب فحببنا
وفي أنفسنا فذللنا
وفي أعين الناس فعظمنا
ومن سئ الأخلاق فجنبنا
وعند الموت فثبتنا
وفي الفرع الأكبرفأمنا
وفي جنات الخلد أدخلنا
برحمتك يا إلهنا. وسيدنا
யா அல்லாஹ் !உன் பால் எங்களை அன்புள்ளவர்களாக ஆக்குவாயாக
எங்களின் பார்வையில் எங்களை தாழ்ந்தவர்களாக ஆக்குவாயாக
மக்களின் பார்வையில் எங்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்குவாயாக
தீய குணங்களை எங்களை விட்டும் தூரமாக்குவாயாக
மரண தருவாயில் நாங்கள் ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக!
பெரும் அச்சம் பீடிக்கும் போது
பாதுகாப் பளிப்பாயாக
நிரந்தரமான சுவனத்தில் எங்களை நுழையவைப்பாயாக
உனது கருணையினால்
எங்களது தலைவனே! ஏக இறைவனே!
فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101
رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ  
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41

Wednesday, 16 January 2019

ஜூம்ஆ நாளில் துஆ

அல்ஹம்துல்லில்லாஹ்! இதமான குளிரில் ஆழ்ந்து உறக்கத்தில் இருந்த எனக்கு உயிர் கொடுத்து புனிதமான இந்த ஜூம்ஆ நாளில் அதிகாலை தொழுகையை நிறைவேற்ற அருள் புரிந்த உனக்கே எ...ல்லாப் புகழும்!எப்பொழுதும் உன்னை தொழுகின்ற பாக்கியத்தை எனக்கும் என குடும்பத்தாருக்கும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அருள்வாயாக!
யா அல்லாஹ்! என்னைப் பராமரிப்பவனே !எனது இரட்சகனே! எனது ரப்பே! சக்தியுடைவனே! எக்கருவியுமின்றி கேட்கும் சக்திபடைத்தவனே! ‘இணை’ என்பதே இல்லாதவனே! எவருடைய ஆலோசனைக்கும் தேவையில்லாதவனே! சூரியனையும்,பிரகாசிக்கும் சந்திரனையும் படைத்தவனே! சோதனைகள் சூழ அச்சப்பட்டு அடைக்கலம் தேடுபவனுக்கு அடைக்கலமானவனே! சின்னஞ்சிறு குழந்தைக்கு(ம்) இரணமளிப்பவனே! உடைந்த எலும்பை ஒன்று கூட்டுபவனே! சோதனைகள் சூழப்பட்டு இவ்வேளை உன்னை அழைக்கிறேன். ஆபத்துகள் நிறைய நிலைகுலைந்தவன் அழைப்பது போல அழைக்கிறேன்உனதுகுர்ஆனை எனது இதயத்தின் வசந்தமாகவும்,எனது கவலைகளைப் போக்கும்படியும் கேட்கிறேன்.
எங்கள் ரப்பே! இவ்வுலகில் எங்கள் உள்ளத்தில் சூழ்ந்து இருக்கும் கவலைகளை போக்குவாயாக! நாங்கள் கேட்பதையும் கேட்க நினைப்பதையும் எங்களுக்கு எது நலம் பயக்குமோ அவைகளையும் அளிப்பாயாக! தனித்தோரின் கவலைப் போக்கும் சிறந்த நண்பனே! துணையற்றவரின் துணைவனே! தூரத்திலன்றி அண்மையிலே இருப்பவனே! மறையாமல் முன்னாலேயே இருப்பவனே!
யாராலும் மிகைக்க முடியாதவனே! நித்திய ஜீவனே! நிலையாக இருப்பவனே! கண்ணியமும்,கம்பீரமும் நிறைந்தவனே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளியானவனே! அவற்றை அழகாக அமைந்தவனே! அவற்றை தாங்கி நிற்பவனே! அவற்றை முன்மாதிரி இன்றியே படைத்தவனே! அவற்றை நிலையாய் பராமரித்து வருபவனே!
வலுப்பும் சங்கையும் உடையவனே! முறையிடுவோரின் முறையீட்டை கேட்பவனே! பாதுகாப்பு வேண்டுவோரின் எல்லையானவனே! துன்பப்பட்டோரை விடுவிப்பவனே! கவலை கொண்டோருக்கு நிம்மதியளிப்பவனே! நிலைக்குலைந்தவரின் அழைப்பை ஏற்பவனே! கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை நீக்குபவனே! உலகத்தாரின் இலாஹே! கருணை புரிவோரில் மாபெரும் கருணையாளனே! தேவைகள் அனைத்தும் உன் முன்னாலேயே வைக்கப்படுகின்றன.அவைகளை நிறைவேற்றி அருள் புரிவாயாக! ஆமீ ன்.
أستغفر الله العظيم وأتوب إليه
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحمَّد وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ

Tuesday, 8 January 2019

தூங்கும் முன் அல்லாஹ் விற்கு நன்றியும், வேண்டுகோளும்

தூங்கும் முன் அல்லாஹ் விற்கு நன்றியும், வேண்டுகோளும்
-----------―-------------------------
இன்றைய நாளை ஆபத்தில்லாத சிறந்த நாளாக ஆக்கி தந்த அல்லாஹ்வே உனக்கே எல்லாப் புகழும்!
சூரியன் மறைந்ததைப் போல எங்கள் உள்ளத்தின் கவலைகளை மறைய செய்வாயாக!
...
நாளை காலை சூரியன் உதிப்பதைப் போல எங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை உதிக்க செய்வாயாக!
எங்களின் காரியங்களை உன்னிடம் ஒப்படைக்கின்றோம். அவைகளை திட்டமிட்டு நீ நிறைவேற்றுவாயாக!
ஏனென்றால் நீ திட்டமிடுவதில் சிறந்தவனாக இருக்கின்றாய்!
யா அல்லாஹ்!இந்த இரவின் தீங்கை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன்!
ஸஹர் நேரத்தில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் என்று நீ பாராட்டியவர்களின் கூட்டத்தில் எங்களை சேர்ப்பாயாக!
தூங்கும் முன் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவை நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.ஏற்றுக் கொள்வாயாக!
“அல்லாஹும்ம ஃபவ்வல்து அம்ரி இலைக்க வஅஸ்லம்த்து நஃப்ஸி இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக்க வஆமன்த்து பிகிதாபிக அல்லதி அன்ஜல்த்த வநபியிக்கல்லதி அர்ஸல்த்த”
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா
See More

எங்களின் ஈமானை உறுதி படுத்துவாயாக


رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களின் ஈமானை உறுதி படுத்துவாயாக!
எங்களின் வாழ்நாளை நல்ல ஆரோக்கியத்துடன் நீட்டித்தருவாயாக!
மீதமுள்ள வாழ்நாளில் உன்னை வணங்குவதிலும், உன் திருப்பொருத்தத்தை பெறுவதிலும்
ஈடுபட தவ்பீக் செய்வாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்குக் கட்டுப் பட்டு நடக்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!
எங்களின் நோய்களை நீக்குவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
கடனில்லா வாழ்க்கையாக எங்களின் வாழ்வை ஆக்குவாயாக!
எங்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!
எவரின் மீதும் வன்னெஞ்சமில்லாத இதயத்தைத் தருவாயாக!
ஆமீன்.

இக்கட்டான நிலையிலிருந்து என்னை விடுவிப்பாயாக!


“اللهم إنى أسألك : بفضلك وعظمتك وجلالك وهيبتك وجبروتك وقوتك وبأسمائك الحسنى وصفاتك أن تفرج عني ما أنا فيه وأن تقدر لي الخير فيما أريده وأنويه .. وأن ترزقني من رزقك وأن تظلني بظلك يوم لا ظل إلا ظلك
யா அல்லாஹ்!
உன்னுடைய சிறப்புகள் உன்னுடைய கண்ணியம்,உன்னுடைய மேன்மை,உன்னுடைய வல்லமை,உன்னுடைய ஆற்றல்,உன்னுடைய அழகிய பெயர்கள்,உன்னுடைய சிபத்துகள் ஆகியவைகள முன்னிறுத்தி
உன்னிடம் கேட்கிறேன்...
இப்பொழுது நான் இருக்கும் இக்கட்டான
நிலையிலிருந்து என்னை விடுவிப்பாயாக!
நான் எதை நாடுகிறேனோ, விரும்புகிறேனோ
அவற்றில் நன்மைகளை
ஏற்படுத்துவாயாக!
உன்னுடைய ரிஜ்கிலிருந்து எனக்கு
ரிஜ்களிப்பாயாக!
மறுமை நாளில் உன்னுடைய அர்ஷின்
நிழலில் எனக்கு நிழல் தருவாயாக!

اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
அல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
See More

காலைத் தொழுகைக்குப்பின் துஆ

அல்ஹம்துலில்லாஹ்!
காலைத் தொழுகையை தொழுவதற்கு அருள் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.
யா அல்லாஹ்! உன்னிடம் நிரந்தரமான ஈமானைக் கேட்கிறேன்.
என்றும் உன்னை அஞ்சும் உள்ளத்தைக் கேட்கிறேன்.
இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் கல்வியைக் கேட்கிறேன்....
உண்மையான நம்பிக்கையைக் கேட்கிறேன்.
உறுதியான நேர்வழியைக் கேட்கிறேன்.
ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் சுகத்தைக் கேட்கிறேன்.
எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவைகளின் காரணமாக உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்துவிடாதே!
எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக உன்னிடம் உள்ள அபரிதமான நன்மைகளை தடுத்துவிடாதே!
எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக கேள்விக்கணக்கு கேட்கும் நாளில் எங்களை தண்டித்துவிடாதே!
எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக எங்களுக்கு எந்த இழப்பையும் செய்துவிடாதே!
நீ சங்கைக்குரியவன்! உன்னுடைய கருணை அனைத்துப் பொருட்களின் மீது பரவி இருக்கிறது!
எங்களின் துஆவை ஏற்றுக்கொள்வாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
كنزالعمال

See More

மனனமிட எளிய துஆ

மனனமிட எளிய துஆ
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي))([1]).
مسلم، كتاب الذكر والدعاء والتوبة ...
அல்லாஹ்விடம் என்ன கேட்க ?என ஒருவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்க அதற்கு நபி அவர்கள் கீழ்கண்ட துஆவை கற்று கொடுத்து இவ்வார்த்தைகள்

உன்னுடைய இம்மை மறுமைக்கான தேவைகளை உள்ளடக்கியவை என்று்ம் சொன்னார்கள் என முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில ஹதிஸ் நூல்களில் இந்த துஆவை புதியதாக இஸ்லாத்தை ஏற்போருக்கு கற்று கொடுத்ததாகவும் பதிவு செய்ய்பட்டுள்ளது
See More

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ

ََஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ
இந்த துஆ நம்முடைய இம்மை ,மறுமைக்கான அனைத்து தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது
رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهاً مُنِيبًا، رَبِّ تَقَبَّل...ْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ
ََ([1]) البخاري في الأدب المفرد، برقم 664، و665، وأبو داود، كتاب الوتر، باب ما يقول الرجل إذا سلّم، برقم 1510، و1511،

ரப்பே! எனக்கு உதவுவாயாக!. எனக்கு எதிராக யாருக்கும் உதவி அளிக்காதே !
எனக்கு வெற்றியைக்கொடுப்பாயாக!. எனக்கு எதிராக யாருக்கும் வெற்றியைக் கொடுக்காதே!
எனக்காகத் திட்டமிடுவாயாக! ! எனக்கு எதிராக யாருக்கும் திட்டமிடாதே!
எனக்கு நேர்வழி அருளவாயாக, அதை எனக்கு இலேசாகவும் ஆக்குவாயாக!
என்மீது வரம்பு கடந்தோருக்கு எதிராக எனக்கு உதவி அளித்தருள்வாயாக!
உன்னையே அதிகம் திக்ரு செய்பவனாக,
உனக்கே அதிகம் ஷுக்ரு செய்பவனாக, உன்னையே அதிகம் அஞ்சுபவனாக உனது வழியிலேயே நடப்பவனாக,
உனக்கு வழிபடுபவனாக என்னை ஆக்குவாயாக!
அமைதியை உன்னிடமே அடைபவனாக கவனம் உன்பாலே கொள்பவனாக உன்பாலே மீள்பவனாக என்னை ஆக்குவாயாக!
ரப்பே! எனது தௌபாவை ஏற்பாயாக! எனது பாவக்கறையை கழுவுவாயாக. எனது இறைஞ்சுதலை ஏற்பாயாக. எனது ஆதாரத்தை உறுதி ஆக்குவாயாக, எனது இதயத்தை நேர்வழிப்படுத்துவாயாக! அதிலுள்ள அழுக்கை அகற்றுவாயாக!ஆமீன்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
See More