புதிய ஹிஜ்ரி ஆண்டில் உயிர் தந்து
விழிக்கச் செய்து புதிய நாளைத் தந்த வல்லோனே அல்லாஹ்வே உன்னைப் போற்றிப்புகழ்கிறோம்
பிறந்த நாட்டிலிருந்து ஹிஜ்ரத் செய்து உலகத்தில் தீனை நிலைநிறுத்திய அண்ணல் நபிபெருமானார் மீதும்
அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்களின் மீதும் உன் அருளைப் பொழிவாயாக!
இரட்சகனே இந்த புதிய ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கத்தில், எங்கள் கவலைகள் அனைத்திலிருந்தும் விடுபடவும், எங்கள் நம்பிக்கைகள் நிறைவேறவும், எங்கள் எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதில் அளிக்கப்படவும், எங்கள் நோயாளிகள் குணமடையவும், எங்கள் குடும்பத்தில் மறைந்தவர்கள் மீது கருணை காட்டவும் நாங்கள் உன்னிடம் கேட்கிறோம்
.
மன்னிப்பவனே கடந்த ஆண்டில் நாங்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக! எங்களை நல்வழிப்படுத்துவாயாக!, எங்கள் குற்றம் குறைகளை மூடிமறைப்பாயாக, புத்தாண்டில் எங்களை கௌரவ ப்படுத்துவாயாக
இந்த ஆண்டு முழுவதும்
எங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் நிகழச்செய்வாயாக!
இவ்வாண்டில் எதிர்பாராத விபத்துகள்,ஆபத்துகள் துர்மரணங்கள் போன்ற மனம்பதைபதைக்கும் எந்த நிகழ்வும் எங்கள் குடும்பத்தில் நிகழாமல் பாதுகாப்பாயாக
அருளாளனே!
நாங்களும் எங்கள் குடும்பத்தாரும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களாக உன்னுடைய திருப்தியைப் பெறும் அனைத்து நல்லமல்களையும் குறையின்றி நிறைவேற்ற நல்லருள் புரிவாயாக
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
ரBப்Bபனா ஆத்தின Fபித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி ஹஸனத(ன்)வ் வ ق
கினா அதாBபன் னார்
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”
(அல்குர்ஆன் : 2:201)
ஆமீன்
.