Saturday, 30 May 2020

ரமளான் இரவு துஆ

அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய சிறப்பான ரமளான் மாத அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே  உனக்கே புகழ் அனைத்தும் !
   யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும்  உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!
   யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!
   யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!
     யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!
  யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து  அருள் புரிவாயாக!
     எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத்  தருவாயாக! 
    ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!
    யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிராயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!
    யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள்  பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக 
   கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!
    யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக! எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !
    என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக 
சல்லல்லாஹு அலா முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் 
ஆமீன்

Friday, 29 May 2020

என்னைப் படைத்த என் ரப்பே!



என்னைப் படைத்த என் ரப்பே!
என் மீது நீ விதித்த விதி துஆ வினால் மாறுமென்றால்
என் இரு கரங்கள் ஏந்தி உன்னிடம் மன்றாடுகிறேன்
அதனை என் விருப்பங்கள்,கனவுகள் நிறைவேறும் வண்ணம் மாற்றி அமைப்பாயாக!
என் மீது நீ திருப்தி கொண்டவனாக உன் பால் என்னை அழைத்துக் கொள்வாயாக!
ஆமீன்

காலையும் மாலையும் ஓதவேண்டிய துஆ

காலையும் மாலையும் ஓதவேண்டிய துஆ
----------------///--
யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக!
யா அல்லாஹ்! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் ஆரோக்கியத்தைத் தருவாயாக!
உன்னை அன்றி வேறு இறைவனில்லை.
இந்த துஆவைநபிபெருமான்ﷺ அவர்கள் ஓதுவார்கள். நூல்.அபூதாவூது 5090

#இப்தார்_நேரப்_பிரார்த்தனை

ரஹ்மானே!
அல்லாஹ்வே!
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இவ்வேளையில்
நாங்கள் எதிர்பார்ப்பதை விட
அதிகமான நன்மைகளைத்
தருவாயாக!
நாங்கள் அஞ்சுவதை விட
அதிகமான தீங்குகளை எங்களை
விட்டும் நீக்குவாயாக!
எப்போதும் உன்பக்கமே
எங்கள் உள்ளத்தை இணைப்பாயாக!
உன்னையல்லால் பிறரின் பால்
எங்கள் உள்ளத்தை இணைத்து விடாதே!
எங்களின் குறைகளை அறிந்துள்ளாய்
அவைகளை மறைப்பாயாக!
எங்களின் தேவைகளை அறிந்துள்ளாய்
அவைகளை நிறைவேற்றுவாயாக!
எங்களின் பாதுகாவலன் நீ மட்டுமே
உன்னையையே வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவியையும்
தேடுகிறோம்.
ஆமீன்.

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

வாருங்கள் இன்று நாம் செய்த தவறுகளுக்காக தவ்பா செய்து தூங்குவோம்.
**************************************
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த
பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி

தராவீஹ் தொழுகைக்குப் பின் இமாம்கள் கேட்கும் துஆ

தராவீஹ் தொழுகைக்குப் பின் இமாம்கள் கேட்கும் துஆ
_____==_____=======_
الّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத்தின்
யா அல்லாஹ்!
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக,
நீ விதித்த கடமைமைகளை
நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளைப் பேணுபவர்களாக,
ஜகாத்தை கொடுப்பவர்களாக,
உன்னிடம் இருப்பவைகளைத் தேடுபவர்களாக,
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக ,
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக,
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக,
இவ்வுலகின் மீது பற்றற்வர்களாக,
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக,
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக,
அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக,
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக,
மறுமை நாளில் உன்னுடைய நபியும்,தூதரும்,தூய்மையான நண்பரும்,உன் நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம்வருபவர்களாக,
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக,
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக,
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக,
பாலையும் , சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்)ஆகியோருடன்
இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பவர்களாக
எங்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! சங்கைமிகு இம்மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாக்கியவான்களாக எங்களை ஆக்குவாயாக!
எங்களை யாஅல்லாஹ்,யாஅல்லாஹ்,யாஅல்லாஹ் நிராகரிக்கப்பட்ட கெடுவாய்ப்பு பெற்றவர்களாக ஆக்கிவிடாதே!
யா அல்லாஹ்! ,ரமளானுடைய இரவுகளில் ஒவ்வொருஇரவிலும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற்றவர்கள், பாதுகாப்பு பெற்றவர்கள்,நரகில் நுழையாமல் தடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் எங்கள் இரட்சகனே! நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட, அதிலிருந்து விடுதலை பெற்றவர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!
கேள்வி கணக்கு நாளில் எங்களை மன்னிப்பாயாக!
ஸல்லல்லாஹு வ ஸல்லம அலா கைர கல்கி ஸய்யித்னா முஹம்மதின் வ ஆலிஹி , வ ஸஹ்பிஹி அஜ்மயீன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

நண்பர்களுக்காக துஆ

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இந்த அதி காலைவேளையில் உங்களுக்காக இந்த சகோதரன் துஆ செய்கிறேன்
அல்லாஹ்உங்கள் உள்ளங்களை குர்ஆனின் ஒளியால் பிரகாசிக்க செய்வானாக!
என்றென்றும் அவனுடைய கட்டளைக்கு அடிபணியும் நல்லோர் கூட்டத்தில் உங்களை என்னையையும் ஆக்குவானாக!
உங்கள் உள்ளத்தில் அமைதியையும் உடலில் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பானாக!
உங்கள் இல்லங்களில் அல்லாஹ்வின அருள் இறங்கட்டுமாக!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் உங்கள் உறவினர்களுக்கிடையே உள்ள உறவு நல்லுறவாக அல்லாஹ்ஆக்குவானாக!
இம்மை யின் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் செய்யும் ஹலாலான பணிகளில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!
நீங்கள் உங்கள் இல்லத்திலிருந்து பணிக்கு வெளியே சென்று மீண்டும் இல்லம் திரும்பும் வரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பாதுகாவலனாக இருப்பானாக!
உங்கள் குலக்கொழுந்துகள் இம்மை மறுமைக்கான நல்லறிவு பெற்று சிறப்புடன் வாழ்வார்களாக!
இதை படிக்கும் நீங்கள் வலக ஆமீன் உனக்கும் அவ்வாறே ஆகட்டும என் எனக்கு துஆ செய்வீர்களாக !
இஸ்லாத்தால் ஒன்றிணைந்த நம்மிடையே அல்லாஹ்பாசத்தையும் ஒற்றுமையையும் அதிகப்படுத்துவானாக!
நம்முடைய இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!ஆமீன்

குனூத் துஆ

குனூத் துஆ
اللَّهُمَّ لاَ تَدَعْ لَنا ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ،
وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ،
وَلاَ كَرْباً إِلاَّ نَفَّسْتَهُ
، وَلاَ مَيْتاً إِلاَّ رَحِمْتَهُ
، وَلاَ مَرِيضاً إِلاَّ شَفَيْتَهُ
، وَلاَ دَيْناً إِلاَّ قَضَيْتَهُ
، وَلاَ غَائِباً إِلاَّ حَفِظْتَهُ وَرَدَدْتَّهُ،
وَلاَ مُجَاهِداً فِي سَبِيلِكَ إِلاَّ نَصَرْتَهُ
، وَلاَ عَدُوّاً إِلاَّ أَهْلَكْتَهُ
، وَلاَ طَاغِيَةً إِلاَّ قَصَمْتَهُ،
ولاَ ضَالاًّ إِلاَّ هَدَيْتَهُ،
وَلاَ مَظْلُوماً إِلاَّ أَيَّدْتَهُ،
وَلاَ ظَالِماً إِلاَّ خَذَلْتَهُ،
وَلاَ عَسِيراً إِلاَّ يَسَّرْتَهُ،
وَلاَ وَلَداً إِلاَّ أَصْلَحْتَهُ،
وَلاَ عَيْباً إِلاَّ سَتَرْتَهُ،
وَلاَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيا وَالآخِرَةِ
هِيَ لَكَ رِضاً وَلَنا فِيها صَلاَحٌ
إِلاَّ أَعَنْتَنا عَلَى قَضَائِهَا وَيَسَّرْتَهَا لَنا
، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
எங்களைப் படைத்தவனே!
எங்களைக் காத்து வருபவனே!
எங்களது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டு விடாதே!
எங்களது எந்த ஒரு கவலையையும் மகிழ்வானதாக ஆக்காமால் எங்களை விட்டு விடாதே!
எந்த ஒரு துன்பத்தையும் நீக்காமல் எங்களை விட்டு விடாதே!
எந்த ஒரு நோயாளியையும் குணப்படுத்தாமல் விட்டு விடாதே!
எந்த ஒரு கடனையும் நிறைவேற்றாமல் விட்டு விடாதே!
எங்களை விட்டும் பிரிந்திருப்போரை பாதுகாத்து எங்களிடம் திரும்ப ஒப்படைக்காமல் விட்டுவிடாதே!
உனது பாதையில் போராடுகின்ற எந்த ஒரு போராளியையும் அவர்களுக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதே!
எங்களை அழிக்க துடிக்கும் எந்த ஒரு விரோதியையும் அழிக்காமல் விட்டு விடாதே!
எங்களில் யார் யாரெல்லாம் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டாமல் விட்டு விடாதே!
யாரெல்லாம் அநீதம் இழைக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்குரிய நீதி கிடைக்காமல் விட்டு விடாதே!
யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை தண்டிக்காமல் விட்டு விடாதே!
எங்களுக்கு எதெல்லாம் சிரமமாக இருக்கிறதோ அதையெல்லாம் லேசாக்காமல் விட்டு விடாதே!
எங்கள் குழந்தை செல்வங்களை நெறி படுத்தாமல் விட்டு விடாதே!
எங்களின் பெற்றோரின் பாவங்களை மன்னித்து அவர்கள் மீது கருணை காட்டாமல் விட்டு விடாதே!
எங்களையும் எங்களது குடும்பத்தாரையும் தொழுகையை நிலை நாட்டுபவர்களாக ஆக்காமல் விட்டு விடாதே!
எங்களது எந்த ஒரு குறையையும் பிறருக்கு மறைத்து அதை முறைப்படுத்தாமல் விட்டு விடாதே!
இம்மை மறுமைக்கான எங்களது தேவைகளில் எவை உனக்கு திருப்தியாக இருக்கிறதோ எவை எங்களுக்கு அவசியமாக இருக்கிறதோ அவைகளை நிறைவேற்றாமல் விட்டு விடாதே!
அவைகளை எங்களுக்கு லேசாக்கி தருவாயாக!
கருணையாளர்களுக் கெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே உனது கருணையினால் இவைகளை நிறைவேற்றுவாயாக!
---------------
யா அல்லாஹ்! உன்னிடம் துஆ கேட்டு அவைகளை ஏற்று கொண்ட கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக!
உன்னிடம் பணிந்து மன்றாடி உன்னுடைய கருணைக்கு ஆளானவர்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக!
உன் மீது தவக்கல் வைத்து நீ பொறுப்பேற்று கொண்டவர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!
எங்களை படைத்த ரப்பே! எங்களின் நல்அமல்களை ஏற்று கொள்வாயாக!
நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்கள் உன்னுடைய திருப்தி பெறுகின்ற நோக்கத்திற்காகவே செய்பவைகளாக ஆக்குவாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

துஆ; நபிசுலைமான்(அலை)அவர்கள் காட்டும் வழி

#துஆ; நபிசுலைமான்(அலை)அவர்கள் காட்டும் வழி
********************
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
“என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
(அல்குர்ஆன் : 38:35).
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட இந்த துஆவை சற்று ஆழமாக சிந்தியுங்கள்.
முதலாவதாக,ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் தன் தேவையை கேட்பதற்கு முன் எனது "பாவத்தை மன்னிப்பாயாக" என்று ஆரம்பிக்கிறார்கள்.
நாமும் இறைவனிடம் கையேந்தும் போது முதலில் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
இரண்டாவதாக, நாம் விரும்பும் நம்முடைய தேவைகள் கிடைப்பது நடைமுறையில் சாத்தியமானதா, அது கிடைக்குமா, என்று சிந்திக்காமல் அல்லாஹ்வின் ஆற்றல் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நம்முடைய பிரார்த்தனையை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற நல்லெண்ணம் கொண்டவர்களாக மனம் ஓர்மையுடன் கேட்க வேண்டும்.
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த உலகம் அழியும் வரை யாருக்கும் கிடைக்காத ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இது நடைமுறையில் சாத்தியமா?
அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானா?
என்றெல்லாம் சந்தேகப்படாமல் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
நபி அவர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்த அல்லாஹு தலா நபிஅவர்கள் கேட்டதையும் கொடுத்தான். அவர்கள் கேட்காததையும் மேலதிகமாகக் கொடுத்தான்.
அல்லாஹ் சொல்கிறான்;
فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ‏
அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
(அல்குர்ஆன் : 38:36)
وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ‏
கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும்,
(அல்குர்ஆன் : 38:37)
وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِىْ الْاَصْفَادِ‏
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 38:38)
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ‏
(நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
(அல்குர்ஆன் : 38:39)
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ
திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 38:40).
ஆம் சகோதரர்களே!!!
நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் இது நடக்குமா? என்று ஐயப்படாமல் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு நிச்சயம் அல்லாஹ் நமக்கு தருவான் என்ற மன உறுதியுடன் கேட்போமாக.
---------மீள் கணியூர் இஸ்மாயில் நாஜி

காலை நேர துஆ

யா அல்லாஹ்! துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இந்நேரத்தில் கேட்கிறேன் என் பாவங்களை மன்னிப்பாயாக!
கடந்த காலங்களில் என் திறமைக் குறைவின் காரணமாக நான் செய்த செயல்களினால் ஏற்பட்ட வேதனையும் அதன் எதிர் வினையாக எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய கவலையும் என்னை நிலைகுலையச் செய்கிறது.
தண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் உனக்கு கோடிக்கான அடியார்கள் உண்டு
ஆனால் என்னை ஆதரிப்பதற்கும் ஆறுதல் தருவதற்கும் என் நிலைமையை சீர் செய்வதற்கும் ஆற்றல் வாய்ந்த ஏக இறைவன் நீ ஒருவன் மட்டுமே!
யா அல்லாஹ்!
என் நிலைமைகளை சீர் செய்வாயாக! என் கவலையை போக்குவாயாக ! என் மீது கருணை காட்டுவாயாக !
ஆமீன்

பிள்ளைகளுக்காக ஓரு தந்தை யின் துஆ

பிள்ளைகளுக்காக ஓரு தந்தை யின் துஆ
___________
அல்லாஹும்ம லக ல் ஹம்து வலகஷ் ஷுக்ர்
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
ஏக இறைவா!
உனக்கே எல்லாப்புகழும்.
உனது அளவில்லா கருணையினால் எங்களுக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த வல்லவனே!உனக்கே எல்லாப் புகழும்.
எங்கள் பிள்ளைகளை உடல் நோய் , மன நோய்களை விட்டும் காப்பாயாக!
எங்களின் ஆண் பிள்ளைகளும்,பெண்பிள்ளைகளும் இம்மை மறுமைக்கான கல்விகளை கற்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களை த் தருவாயாக!
வழி கெடுக்கும் தோழர்களை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக!
திருமண வயதை அடைந்து விட்ட எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்துத் தருவாயாக!
பள்ளிகளுக்கும் பணியிடங்களுக்கும் செல்லும் எங்கள் செல்வங்கள் எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்ப நீ பாதுகாவலானக இருப்பாயாக!
எங்களின் ரப்பே! எங்களின் பிள்ளைகளை எங்களுக்கு சோதனையாக ஆக்கிவிடாதே!
எங்கள் பிள்ளைகள் நாங்கள் வாழும் காலமெல்லாம் தங்களின் சொல்லாலும் செயலாலும் எங்களின் மனம் குளிரச்செய்வாயாக!
அவர்கள் நல்ல அமலுடன் யாரிடமும் கையேந்தாமல் ஹலாலான வருமானத்துடன் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிவாயாக!
அவர்கள் தொழுபவர்களாகவும்,ஜக்காத் கொடுப்பவர்களாகவும். சமுயதாய பணிகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் ஆக்குவாயாக!
எங்களின் மரணத்திற்கு பிறகும் அவர்கள் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
கருணையுள்ள ரஹ்மானே! எங்களுக்கு நீ கருணை காட்டி குழந்தை செல்வத்தைக் கொடுத்தது போல் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் யார் யாருக்கெல்லாம் குழந்தை செல்வம் இல்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத தருவாயாக!
வயது முதிர்ந்த இப்ராஹீம் நபிக்கு இஸ்மாயீல் நபியை கொடுத்த ஏக இறைவா! குழந்தைக்காக ஏங்கித்தவிக்கும் எங்கள் சகோதரிகளுக்கு அவர்கள் மனம் குளிர குழந்தை செல்வத்தை அருள்வாயாக!
அல்லாஹும்ம ஸல்லிஅலா ஸய்யித்னா முஹம்மத் வலா ஆலி முஹம்மத் வாபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்