Thursday, 22 November 2018

என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் உன்னிடத்தில் முறையிடுகிறேன்

எங்களை படைத்த ஏக இறைவா!
இந்த அதிகாலை நேரத்தில் நபி யாக்கூப் (அலை) அவர்கள் சொன்னது போல என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் உன்னிடத்தில் முறையிடுகிறேன்
.நீ தான் எங்களை படைத்தவன் என்பதிலும் நீ மட்டும் தான் எங்களைக் காப்பவன் என்பதிலும் எங்களுக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.
அதே போன்று அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்பதிலும் அவர்கள் காட்டிய வழி நடந்தால் தான் எங்கள் மறுமை வாழ்வு சிறக்கும் என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
உன் மீதும் உந்தன் நபி மீதும் எங்களுக்கு அளவுகடந்த முஹப்பத் இருக்கிறது.தேவைப்படுமாயின் இஸ்லாத்திற்காக ஷஹிதாக வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது.
ஆனால் எங்கள் ரப்பே நாங்கள் வாழுகின்ற இடம் குஃப்ரியத்தாலும் ஜாஹிலியத்தாலும் வழிகேட்டாலும் சூழ்ந்திருக்கிறது.அவைகள் எங்கள் ஈமானைப் பதம் பார்க்கின்றன.எங்கள் உள்ளம் மக்களிடம் கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர் பார்க்கிறது.
பெருஞ்செல்வம் இருந்தால் தான் கண்ணியம் என நினைத்து எங்களில் பலர் செல்வத்தை தேடி ஓடுகிறார்கள்.
அரசியல் அதிகாரம் இருந்தால் தான் நமக்கு மரியாதை என எண்ணி சிலர் அரசியல் நோக்கி ஓடுகிறார்கள்.
ஆபாசங்களும் அனாச்சாரங்களும் தலை விரித்து ஆடுகின்றன. அதில் எங்களின் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கி சீர் அழிகின்றனர்.அதனை தடுக்க வழி இன்றி எங்களைப் போன்றோர் தடுமாறுகின்றனர்.
நாங்கள் எங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்றோமோ என்ற குற்ற உணர்ச்சி எங்களை வாட்டுகிறது.
யா அல்லாஹ்!இந்த நேரத்தில் தாயிஃப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திய பொழுது,நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆவை தான் உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
“யா அல்லாஹ்!என் பலவீனத்தையும் மக்கள் என்னை லேசாக கருதுவதையும் உன்னிடம் முறையிடுகிறேன்! கிருபையாளர்களில் மிகப்பெரும் கிருபையாளனே!நீ கிருபையாளர்களில் மிகக் கிருபையனவனாக இருக்கிறாய்.நீ என்னை யாரிடத்தில் ஒப்படைக்கிறாய்? என்னிடம் கடுகடுக்கும் எதிரியிடமா? அல்லது என் மீது நீ ஆதிக்கத்தை வழங்கிய உறவினரிடமா?
யா அல்லாஹ்!நீ என் மீது கோபப்படவில்லையானால் அதுவே போதும்.நான் எதையும் பொருட்படுத்தவில்லை.உன் பாதுகாப்பே எனக்கு போதுமானது.”
யா ரஹ்மானே! நபி கேட்ட துஆவுடன் நானும் என் கோரிக்கையை முன் வைக்கிறேன்.எங்களுக்கு ஹஜ்ரத் அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களைப் போல் உண்மை பேசும் நாவைக் கொடு. ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களைப் போல் தவறுகளைத் தட்டி கேட்கும் தைரியத்தைக் கொடு. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களைப் போல் பாவம் செய்யாமல் இருக்கும் வெட்கத்தைக் கொடு.ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் போல் அறிவு ஞானத்தைக் கொடு.ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு வழங்கியதைப் போன்று மார்க்கத்திற்கு செலவு செய்யும் பொருளாதாரத்தைக் கொடு.யாரிடமும் கை ஏந்தாமல் மார்க்கத்தை சொல்லும் நாவைக் கொடு.எங்களுடைய செயல்களில் இஹ்லாஸ் எண்ணும் தூய எண்ணத்தைக் கொடு.வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து, மரணிக்கின்ற பொழுதும் உனக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே மரணிக்கும் பாக்கியத்தை தருவாயாக.ஆமீன்.எங்களை படைத்த ஏக இறைவா!
இந்த அதிகாலை நேரத்தில் நபி யாக்கூப் (அலை) அவர்கள் சொன்னது போல என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் உன்னிடத்தில் முறையிடுகிறேன்
.நீ தான் எங்களை படைத்தவன் என்பதிலும் நீ மட்டும் தான் எங்களைக் காப்பவன் என்பதிலும் எங்களுக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.
அதே போன்று அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்பதிலும் அவர்கள் காட்டிய வழி நடந்தால் தான் எங்கள் மறுமை வாழ்வு சிறக்கும் என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
உன் மீதும் உந்தன் நபி மீதும் எங்களுக்கு அளவுகடந்த முஹப்பத் இருக்கிறது.தேவைப்படுமாயின் இஸ்லாத்திற்காக ஷஹிதாக வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது.
ஆனால் எங்கள் ரப்பே நாங்கள் வாழுகின்ற இடம் குஃப்ரியத்தாலும் ஜாஹிலியத்தாலும் வழிகேட்டாலும் சூழ்ந்திருக்கிறது.அவைகள் எங்கள் ஈமானைப் பதம் பார்க்கின்றன.எங்கள் உள்ளம் மக்களிடம் கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர் பார்க்கிறது.
பெருஞ்செல்வம் இருந்தால் தான் கண்ணியம் என நினைத்து எங்களில் பலர் செல்வத்தை தேடி ஓடுகிறார்கள்.
அரசியல் அதிகாரம் இருந்தால் தான் நமக்கு மரியாதை என எண்ணி சிலர் அரசியல் நோக்கி ஓடுகிறார்கள்.
ஆபாசங்களும் அனாச்சாரங்களும் தலை விரித்து ஆடுகின்றன. அதில் எங்களின் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கி சீர் அழிகின்றனர்.அதனை தடுக்க வழி இன்றி எங்களைப் போன்றோர் தடுமாறுகின்றனர்.
நாங்கள் எங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்றோமோ என்ற குற்ற உணர்ச்சி எங்களை வாட்டுகிறது.
யா அல்லாஹ்!இந்த நேரத்தில் தாயிஃப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திய பொழுது,நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆவை தான் உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
“யா அல்லாஹ்!என் பலவீனத்தையும் மக்கள் என்னை லேசாக கருதுவதையும் உன்னிடம் முறையிடுகிறேன்! கிருபையாளர்களில் மிகப்பெரும் கிருபையாளனே!நீ கிருபையாளர்களில் மிகக் கிருபையனவனாக இருக்கிறாய்.நீ என்னை யாரிடத்தில் ஒப்படைக்கிறாய்? என்னிடம் கடுகடுக்கும் எதிரியிடமா? அல்லது என் மீது நீ ஆதிக்கத்தை வழங்கிய உறவினரிடமா?
யா அல்லாஹ்!நீ என் மீது கோபப்படவில்லையானால் அதுவே போதும்.நான் எதையும் பொருட்படுத்தவில்லை.உன் பாதுகாப்பே எனக்கு போதுமானது.”
யா ரஹ்மானே! நபி கேட்ட துஆவுடன் நானும் என் கோரிக்கையை முன் வைக்கிறேன்.எங்களுக்கு ஹஜ்ரத் அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களைப் போல் உண்மை பேசும் நாவைக் கொடு. ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களைப் போல் தவறுகளைத் தட்டி கேட்கும் தைரியத்தைக் கொடு. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களைப் போல் பாவம் செய்யாமல் இருக்கும் வெட்கத்தைக் கொடு.ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் போல் அறிவு ஞானத்தைக் கொடு.ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு வழங்கியதைப் போன்று மார்க்கத்திற்கு செலவு செய்யும் பொருளாதாரத்தைக் கொடு.யாரிடமும் கை ஏந்தாமல் மார்க்கத்தை சொல்லும் நாவைக் கொடு.எங்களுடைய செயல்களில் இஹ்லாஸ் எண்ணும் தூய எண்ணத்தைக் கொடு.வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து, மரணிக்கின்ற பொழுதும் உனக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே மரணிக்கும் பாக்கியத்தை தருவாயாக.ஆமீன்.

Thursday, 8 November 2018

ஆயிரம் சொற்பொழிவுகள் நிகழ்த்தமுடியாத மனமாற்றத்தை ஒரு முஸ்லிமின் நற்செயல்கள் நிகழ்த்தும்

ஆயிரம் சொற்பொழிவுகள் நிகழ்த்தமுடியாத மனமாற்றத்தை ஒரு முஸ்லிமின் நற்செயல்கள் நிகழ்த்தும்
*******************************************
ஒரு முஸ்லிமா தன் வீட்டருகே இருந்த ஒரு கிருஸ்துவ பெண் உடல் நலம் குன்றியிருப்பதை அறிந்து அவரை காணச் சென்றார். படுத்த படுகையாக இருந்த அவர் அருகே சென்று எங்களது அருள்மறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதவா?...
நாங்கள் உடல்நலம் குறைவின் போது அவற்றை ஓதி குணமடைவோம் என்றார்.
அந்நோயாளி எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் தர முடியுமா? என்றார்.
படுத்தபடியே தண்ணீர் அருந்திய பின் என்னை தூக்கி உட்கார வையுங்கள் என்றவர்
"சாப்பிட்டு இரண்டு நாளாகிறது,உணவு ஏதேனும் கிடைக்குமா?"என்றார்.
பதறிபோன முஸ்லிமா ஓடோடி வீட்டிற்குச்சென்று நோயாளிகள் உண்ணும் உணவை தயாரித்து எடுத்துவந்து அவருக்கு
பரிமாறினார்.
அவர் சற்று தெளிவடைந்தபின் இப்பொழுது குர்ஆன் வசனங்களை ஓதவா என முஸ்லிமா கேட்டார்.
அந்த கிருஸ்துவ பெண்மனி சொன்னார்:
#தங்கையே! உன் பண்பான நடவடிக்கைகளை கண்ட பின்னும் உன்னை பக்குவபடுத்திய #குர்ஆனின் மீது எனக்கு #நம்பிக்கை வராமல் இருக்குமா?

#ஆயிரம்_சொற்பொழிவுகள்_ஏற்படுத்தாத_
#மனமாற்றத்தை
#ஒருமுஸ்லிமின்_நன்நடத்தை_ஏற்படுத்தும் .
கவிஞர் அல்லாமா,இக்பால் ஒருமுறை சொன்னார்:
இஸ்லாமிய வரலாற்றை நன்கு படித்துப்பாருங்கள்
அறிவார்ந்த விவாதங்களால்,சொற்பொழிவுகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற வர்களை விட முஸ்லிம்களின் நற்செயல்களால் மனமாற்றம் அடைந்தவர்கள் தான் அதிகம்.
--------கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி

Monday, 6 August 2018


ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?
---------------------------------------------
ஆசிரியருக்கும் (இமாம் மாலிக்(ரஹ்))
மாணவருக்கும் (இமாம் ஷாபிஈ (ரஹ்))
இடையே நடைபெற்ற ருசிகர சம்பவம்!!
அல்லாஹ் எவ்வித காரணமுமின்றி
ஓர் அடியானுக்கு அவனுக்குரிய உணவை அளிப்பான் என்பது இமாம் மாலிக் (ரஹ்)அவர்களின் கருத்து.
இல்லை!ஒருவன் சிறிதளவேனும் முயற்சி செய்தாலேயே தவிர
அவனுக்கு அவனின் வாழ்வாதாரங்கள் கிடைக்காது என்பது
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் ஷாபிஈ (ரஹ்)
அவர்களின் நிலைப்பாடு.
: "لو توكلتم على الله حق توكله، لرزقكم كما يرزق الطير، تغدو خِماصاً وتروح بِطاناً
நீங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் -நம்பிக்கையை வைக்கவேண்டிய முறையில் வைத்தால் பறவைகளுக்கு அல்லாஹ் உணவு அளிப்பதைப்போல் உங்களுக்கும் அளிப்பான்.
பறவைகள் காலை கூட்டை விட்டு பசியோடு வெளியே பறக்கின்றன. மாலை வயிறு நிரம்பிய நிலையில் தனது இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன" எனும் நபிமொழியை அதற்கு ஆதரமாக முன் வைத்தார்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.
பறவைகள் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே செல்வதினால் தானே அவைகளுக்கு உணவு கிடைக்கிறது.
அதே போல் மனிதன் வெளியே வந்து தேடினால் தான் அவனுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கும் என அதே நபிமொழியிலிருந்தே ஆதாரத்தைக்காட்டினார்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள்.
இருப்பினும் இமாம் மாலிக் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்கள்.
எப்படியாவது தனது கருத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரத்தை தனது ஆசிரியப்பெருந்தகைக்கு முன் வைக்கவேண்டும் என எண்ணிய வண்ணம் இமாம்ஷாபிஈ (ரஹ்)
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு முதியவர் பழக்கூடை ஒன்றை சுமக்கமுடியாமல் சுமந்து செல்வதைக் கண்டார்கள்.
அருகே சென்று அந்தக் கூடையை வாங்கி தன் தோளில் சுமந்து கொண்டு அந்த முதியவரின் இருப்பிடத்திற்குச் சென்று இறக்கிவைத்தார்கள்.
இமாம் அவர்களின் பண்பை கண்டு மகிழ்ந்த அம்முதியவர் கை நிறைய பழங்களை அன்பளிப்பாகத் தந்தார்.
தாம் அவருக்கு உதவிய காரணத்தினாலேதானே அம்முதியவர் இந்தப் பழங்களைத் தந்தார்.
அவருக்கு நாம் உதவாவிட்டால் இப்பழங்கள் கிடைத்திருக்காதே!
இதை தன்னுடைய கருத்திற்கு சரியான ஆதாரம் எனக் கருதிய இமாம் ஷாபி ரஹ் அப்பழங்களை எடுத்துக்கொண்டு
இமாம் மாலிக்(ரஹ்)அவர்களின் முன் வைத்து
ஆசிரியப் பெருந்தகையே! இதோ பாருங்கள் நான் ஒருவருக்கு உதவி செய்தேன் அல்லாஹ் எனக்கு இந்த ரிஜ்கை வழங்கினான் என்றார்கள் பணிவுடன்.
புன்னகை புரிந்த வண்ணம் இமாம் மாலிக்(ரஹ்) அப்பழங்களில் ஒன்றை எடுத்து சாப்பிட்டார்கள்
பின் சொன்னார்கள்:பார்த்தீரா முஹம்மது பின் இத்ரீஸ்! நான் எந்தவொரு முயற்சியும் செய்யாமல் சிரமத்தையும் அனுபவிக்கமலேயே என்னைத்தேடி இந்த ரிஜ்க் வந்திருக்கிறது என்றார்கள்.
இரண்டு அறிஞர் பெருமக்களும் குர்ஆனின் வசனங்களிலிருந்து தான் ஆய்வு செய்து கூறுகிறார்கள்.
#அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காதவகையில் ரிஜ்க் அளிப்பான் என்று குர்ஆன் கூறுகிறது. وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ ا‏
65:3. அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான்.
அதே குர்ஆன் மனிதன் முயற்சித்தளவே தவிர அவனுக்குக்கிடைக்காது எனவும் கூறுகிறது.
53:39 وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰى
ۙமனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா
மனிதன் முயற்சிக்காமல் தானாக வரும் என அமர்ந்திருந்தால் இறைவன் நாடினால் கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம்.
ஆனால் ஒருமனிதன் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து முயற்சித்தால் நிச்சயமாக அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
#இமாம்களின் கருத்துவேற்றுமை பாமரமக்களுக்கு அல்லாஹ் அருளிய வழிகாட்டல் .
ஏதோ காரணத்தால் வாழ்வாதரங்களை போதுமான அளவு பெறமுடியாமல் சிரமப்படுபவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் கருத்தின் படி
ஏதோ ஒரு வழியில் அல்லாஹ் நமக்கு உதவிடுவான்" என நம்பிக்கை யுடன் வாழவேண்டும்,மனம் தளர்ந்து விடக்கூடாது.
ஆனால் ஒருவன் தனது வாழ்வாதரங்களை முயற்சி செய்து பெற இயலுமென்ற நிலையில் அவன் சோம்பலின் காரணமாக முயற்சி செய்யாமலிருந்தால் அவனுக்கு அல்லாஹ் உதவிசெய்யமாட்டான்" என்பதுதான் இமாம்ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கருத்து.
-
----ஷேய்க் Kaniyur Ismail Najee Manbayee
பொறாமைக்காரனே ஆபத்தானவன்
*********************
இப்லீஸ் ,பிர்அவ்ன்
இருவரின் முடிவு
=================
அரபியில் இஸ்ராயிலியத் கதைகள் எனப்படும் இலக்கியம் உண்டு.
பனு இஸ்ரவேலர்கள் தவ்ராதிலும்,இன்ஜீலிலும் இருப்பதாக பல சுவராசியமான பல கதைகளை பரப்பியுள்ளனர்....
நபிபெருமான் ﷺ அவர்கள் அக்கதைகளை உண்மையென்றோ பொய்யென்றோ கூறாதீர்கள் என்றார்கள்.
அக்கதைகளில் ஒன்றுதான் இது .

ஒருநாள் இப்லீஸ் பிர்அவ்ன் வீட்டின் கதவைத் தட்டினான்.
யாரென்றான்" பிர்அவ்ன்
நான்தான் பெரிய கடவுள் என்று சொல்ற
கதவிற்கு இந்தப்பக்கம் இருப்பது யாரென்று தெரியாதா? என்றான் இப்லீஸ்.

இந்த மாதிரி பேசற நீ சபிக்கப்பட்ட இப்லீஸாக த்தான் இருப்ப உள்ளே வா என்றான்
பிர்அவ்ன்.

நீயும் சபிக்கப்பட்டவன் தானே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்
இப்லீஸ்.

பிர்அவ்ன்: ஆமா, ஏன் ஆதம்நபிக்கு ஸஜ்தா செய்ய மறுத்தாய்?

இப்லீஸ் கிண்டலாக,அவரின் முதுகு தண்டில் நீ இருக்கிறாய் எனத் தெரிந்துதான் மறுத்தேன்.

நான்தான் உயரந்த கடவுள் என அகம்பாவம் கொண்டவன் நான், ஆதம்நபியை விட நான் தான் சிறந்தவன் என கர்வம் புடுச்சவன் நீ
நம்மிருவரையும் விட தீயவன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டான் பிர்அவ்ன்.

அடுத்தவனைப் பார்த்து பொறாமைப் படுபவன் நம்மைவிட மோசமானவன்
ஆபத்தானவன் என்றான் இப்லீஸ்.
ஆமாம்,ஆமாம் என்றான் பிர்அவ்ன்.
-------------------------------------------------------------------------
இந்த கதை உண்மையோ,பொய்யோ அதில் சொல்லப்பட்டிருக்கும் பொறாமைக்காரனை பற்றிய செய்தி உண்மை.
தலைக்கனம்மிக்கவனால் ஏற்படும் ஆபத்தைவிட. பொறாமைக்காரனால் ஏற்படும் எதிர்விளைவு மிக ஆபத்தானது


“”உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்” (அல்குர்ஆன் 3:119-120)
என குர்ஆன் பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)

என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொளவேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது

தன்னிடமில்லாத சிறப்பான ஒன்று மற்றவர்களிடத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுதான் பொறாமை.

அல்லது தன்னிடம் இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.
இந்த பொறாமையினால் ஏற்படும் விளைவு என்ன?

பொறாமைக்காரன் தனக்கு கிடைக்காவிட்டாலும் பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் அழிய வேண்டும் என்று விரும்புவான்

பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடை நீங்கி தனக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவான்

பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் போன்று தனக்கும் இருக்க வேண்டும். ஆனால், அவன் தரத்தால் உயர்ந்துவிடக்கூடாது என்று பொறாமைக்காரன் விரும்புவான்

இக்குணம் அவனை பல தவறுகளை செய்ய தூண்டுகோலாகிவிடுகிறது

அதேநேரததில் யாரின் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவருடைய அருட்கொடைகள் நீங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றி அவரைப் போன்றது தனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இது விரும்பத்தக்க நற்குணமாகும். இதற்கு அறபியில் حسدالغبطة என்று சொல்லப்படும்.

இரண்டு விடயங்களில் தவிர பொறாமை கூடாது
– ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறான். அவன் அவ்வேதத்தை இரவும் பகலும் ஓதிவருகிறான் இதனை அண்டை வீட்டுக்காரன் கேட்டுவிடுகிறான். அப்போது அம்மனிதன் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவது
இன்னும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவன் சத்தியத்திற்காக – தாராளமாக – செலவு செய்கின்றான். அப்பொழுது ஒரு மனிதன் கூறுகின்றான் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவதாகும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ

நூல் : புகாரி

அல்லாஹ் நம்மனைவரையும் அழிவின் பால் இழுத்துச் செல்லும் பொறாமையிலிருந்து காப்பானாக!
-------கணியூர் நாஜி

Wednesday, 4 July 2018

அண்ணல் நபிﷺ அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி)அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த துஆ


அண்ணல் நபிﷺ அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி)அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த துஆ
*********************************************
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّه ، عَاجِلِهِ وَآجِلِه ،
مَا عَلِمْتُ مِنهُ وَمَا لَمْ أَعْلَم ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّه ، عَاجِلِهِ وَآجِلِه ،
مَا عَلِمْتُ مِنهُ وَمَا لَمْ أَعْلَم ، وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَل ،
وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَل ، وَأَسْأَلُكَ مِمَّا سَأَلَكَ عَبْدُكَ مُحَمَّد ،
وَأَعُوذُ بِكَ مِمَّا تَعَوَّذَ مِنهُ مُحَمَّد ،
யா அல்லாஹ்! உன்னிடம் நன்மைகள் அனைத்தையும் உடனே கிடைக்கின்ற
,தாமதமாக கிடைக்கின்ற அவைகளில்,நான் அறிந்த ,அறியாத அனைத்து நன்மைகளையும்
கேட்கிறேன்
உன்னிடம் அனைத்து தீங்குகளிலிருந்தும் உடனே வருகின்ற,தாமதமாக வருகின்ற,அவைகளில் நான் அறிந்த ,அறியாத அனைத்து தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்
உன்னிடம் சொர்க்கத்தையும்,சொல்லாலும்,செயலாலும் அதன் பால் சேர்க்கும் அனைத்தையும் கேட்கிறேன்
நரகத்தைவிட்டும்,,சொல்லாலும்,செயலாலும் அதன் பால் சேர்க்கும் அனைத்தையும் விட்டும் உன்னிடம் பாது காப்பு தேடுகிறேன்
உன்னிடம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் கேட்ட அனைத்து நன்மைகளையும் கேட்கிறேன்
யா அல்லாஹ்!
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம்அவர்கள் எவற்றைபற்றி உன்னிடம் பாதுகாவல் தேடினார்களோ அவற்றையிலிருந்து நானும் பாதுகாவல் தேடுகிறேன்.
(நபிﷺ அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ .நூல்; இப்னு மாஜா)

Thursday, 31 May 2018

دعا

அல்ஹம்துலில்லாஹ்!
இன்றைய பரக்கத்தான ரமளான் மாதத்தின் மூன்றாவது ஜும்மா நாளில்  நோன்பு நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்வே  உனக்கே புகழ் அனைத்தும் !

   யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும்  உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!

   யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!

   யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!

     யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!

  யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து  அருள் புரிவாயாக!

     எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத்  தருவாயாக!

    ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!

    யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிறாயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!

    யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள்  பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக !

   கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!

    யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக! எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !

    என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக !

ஆமீன்.

Monday, 26 March 2018

காலை துஆ

காருண்யநபி ﷺ அவர்கள் தினந்தோறும் கேட்ட துஆ
**************------*************----***-----------------

: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ القَبْرِ، وَعَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغرب

, 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃக்ரமி, வல்மஃஸம். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபிந் நாரி, வ ஃபித்னத்திந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். வபாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷரிக்கீ வல்மஃக்ரிப்'

அல்லாஹ்வே! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, பெருங்குழப்பவாதியானமஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.
ஏகஇறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என்னிலிருந்தும் என் தவறுகளைக் கழுவிடுவாயாக!மேலும், வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக!.)'
அறிவிப்பாளர்:அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்

Saturday, 3 March 2018

தேர்வெழுதும் மாணவ,மாணவிகளுக்காக

اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ولك الحمد اذا رضيت.

யா அல்லாஹ்!யா ரஹ்மான்!யாரஹீம்!
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இவ்வேளையில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தொழ வாய்ப்பளித்த உனக்கே  எல்லாப்புகழும்
 
எங்கள் இறைவா! எங்களுக்கு நீ அளித்துள்ள மக்கள் செல்வத்திற்கு எத்துனை கோடிமுறை உனக்கு நன்றி செலுத்தினாலும் அவை உனது இந்த கொடைக்கு ஈடாகாது.
உனக்கு எங்களால் இதற்கு இணையான நன்றி செலுத்தவே முடியாது !
   அனைத்தையும் அறிந்தவனே!
இன்று எங்கள் பிள்ளைகள் இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியமான தேர்வு எழுத இருக்கின்றனர்.
    இரட்சகனே! அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தருவாயாக!
நல்ல நினைவாற்றலைத் தருவாயாக!
பதட்டமில்லாமல் தேர்வெழுதும் மன உறுதியைத் தருவாயாக!
  உயர் கல்வியைக் கற்கும் அளவிற்கு நல்ல மதிப்பெண்கள் பெற அருள் புரிவாயாக!
   எங்கள் ரப்பே! எங்கள் பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக,உனக்கு நன்றி உள்ள அடியார்களாக வாழ வைப்பாயாக!
அவர்கள் பெறும் கல்வி இம்மைக்கும்,மறுமைக்கும்,நாட்டிற்கும்,வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பலனுள்ளதாக ஆக்குவாயாக!
  யா அல்லாஹ்!நீ அளித்த இந்த பிள்ளைகள் பெற்றோர்களான நாங்கள் வாழும் காலமெல்லாம் எங்கள் கண்களையும்,உள்ளங்களையும் குளிரச்செய்யும் வகையில் நற்செயல்கள் செய்பவர்களாக ஆக்குவாயாக!
எங்கள் மறைவிற்குப் பிறகும் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களைத் தருவாயாக!
   எதிர்பாரமல் வரும் ஆபத்துகளிலிருந்து எங்களையும் அவர்களையும் காப்பாயாக!

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்

Sunday, 11 February 2018

துஆ

الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَـلَمِينَ 
االهم لا أعلم أمراً اختاره لنفسي وقد فوضت إليك أمرى ورجوتك لفاقتى وفقرى فأرشدنى إلى أحب الأمور إليك وأرضاها عندك وأحمدها عاقبة لديك فى خير وعافية إنك تفعل ما تشاء وإنك على كل شئ قدير. اللهم اشرح صدرى بنور الاستبصار وأخرجنى من دائرة الحيرة والتدبير والاختيار. اللهم خر لى واختر لى ولا تكلنى إلى نفسى طرفة عين
.
யா அல்லாஹ்! எனக்காக நான் தேர்ந்தெடுத்த காரியங்கள் எனக்கு நன்மை தருமா  என்பது எனக்குத் தெரியாது.
என்னுடைய காரியங்களை உன்னிடமே ஒப்படைத்துவிட்டேன்.

என்னுடைய தேவைகளுக்கும்,பற்றாக்குறைகளுக்கும் உன்னிடமே ஆதரவு வைத்துள்ளேன்.

நீ விரும்புகின்ற, திருப்தி அடைகின்ற, உன்னிடம் புகழப்படுகின்ற காரியங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக!
நீ நாடியதை செய்பவன் அனைத்தின் மீதும் சக்தி படைத்தவன்

திக்குத் தெரியாமல் திகைப்படைந்து நிற்பது, திட்டமிடுவதில் தடுமாறு வது போன்ற செயல்களிலிருந்து என்னை வெளியாக்குவாயாக!

எனக்காக என்னுடைய காரியங்களை நீயேதேர்ந்தெடுப்பாயாக!

ஒரு கணமேனும் என் நப்ஸின் பால்என்னை  தள்ளிவிட்டு விடாதே என் ரப்பே!
உன்னையே வணங்குகிறேன்.
உன்னிடமே உதவியயையும் கேட்கிறேன்.