Tuesday, 16 February 2021

دعاء ‏لاولاد

هذا الدعاء لأبنائك و سيبقون بحفظ الله .... ورعايته
🚩
إلى كل أب ،، وأم 
رددوا هذا الدعاء في هذه الأيام :

🔸اللهم إنك وهبت لي
(( و قل أسماء البنات و الأولاد)).. من غير حولٍ مني و لا قوة فاحفظهم بحفظك بلا حولٍ مني ولاقوة
🔸اللهم أحفظهم من أي مكروه يصيبهم و من كل شرٍ و ضرر
🔸اللهم أحفظهم من الأسقام والأمراض
🔸اللهم لا تجعل ابتلائي فيهم
🔸اللهم أجرهم من الفتن ما ظهر منها وما بطن
🔸اللهم أجعلهم من صالح عبادك وحفظة كتابك ومن أحسن الناس ديناً و عبادة و أخلاقاً ومن أسعدهم حياةً و أرغدهم عيشة.ً
🔸اللهم أغنهم بحلالك عن حرامك وبفضلك عمّـن سواك ،،
🔸ربي كما حفظت كتابك إلى يوم الدين، احفظهم من الشيطان الرجيم ،،
🔸ربي أرزقهم صحبة الأخيار وخصال الأطهار و التوكل عليك يا قادر يا جبار،،
🔸ربي أبعد عنهم أمراض القلوب و الأبدان، و بلغني فيهم غاية أملي بحولك و قوتك يا كريم يا منان..
🔸ربي متعني ببرهم في حياتي و أسعدني بدعائهم بعد مماتي.
و صل اللهم و سلم وبارك على خير الأنام وخاتم المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين

( إلهي استودعتُك أبنائي قطعةً من قلبي ، في مكانٍ غابت عنهُم عيني، و عينُك لم تغِب، فاحفظهم حفظاً يليقُ بعظمتك)
وفرج هم من ارسل لي هذه الرساله
وارزقه ما يتمنى
 آمْيِــن ..

دعاء للأبناء، فالرجاء من كل من يصله الدعاء أن يهديه للغالين على قلبه
😍😍

Sunday, 7 February 2021

காலை துஆ

யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே!

 உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே!

 விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே!

 சக்தியுடையவனே! தேவையற்றவனே!

 பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே!

 வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே! 

அனைத்தையும் அறிந்தவனே! 

நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே!

 வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே! 

சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக! 

நீ சொல்லியிருக்கிறாய் : 
“நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.
மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:
“உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.” 
“நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.

யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே!

 உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக! 

உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக
 ஆக்குவாயாக!

 உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!