Sunday, 14 November 2021

தினந்தோறும் ஓதவேண்டிய துஆ

ஆபத்துகள் அணுகாமலிருக்க   
 அனுதினமும் அல்லாஹ் விடம்
உங்கள் காரியங்களை ஒப்படையுங்கள்.
அவனிடமே உங்கள் தேவைகளை முன்வையுங்கள்

حَسْبِىَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ 
“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

யா அல்லாஹ்! 
என் குடும்பத்தை,
என் ஆன்மாவை
என் ஆற்றலை,
என் அறிவை,
என் உள்ளத்தை,
என் கண்ணியத்தை,
என் வாழ்வாதாரங்களை
என் நல்வாய்ப்பை,
என் எதிர்காலத்தை
எனது வாழ்நாளின் இறுதியை
என காரியங்கள்
அனைத்தையும் உன்னிடமே  ஒப்படைக்கிறேன்
அவற்றை ஜின்,மனித ஷைத்தான்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பாயாக!
நீ விரும்பகின்ற வழியில் அவைகளை பயன்படுத்துவாயாக!
எங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாயாக!

 عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏ 
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 
(அல்குர்ஆன் : 10:85)
ஆமீன்.!

Sunday, 29 August 2021

துஆ

 அளவற்ற அருளானே! நிகரற்ற அன்புடையோனே! உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும்உன் அருள் மழையைப் பொழிவாயாக!
"ரப்பே!நான் தோற்கடிக்கபட்டுவிட்டேன்
எனக்கு உதவுவாயாக" என்ற நூஹ்நபியின் அழைப்பை ஏற்று நபி அவர்களையும் அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றிய கருணையாளனே!
"எனக்கு அல்லாஹ் போதுமானவன்.அவன் பொருப்போற்றுக் கொள்வதில் சிறந்தவன்" என்ற இப்ராஹீம் நபியின் அழைப்பால் சுட்டெரிக்கும் நெருப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியவனே!
"நாம் மாட்டிக்கொண்டோமே! என்று மூஸாநபியின் உம்மத்தவர்கள் அஞ்சியபோது "என் ரப் என்னுடன் இருக்கிறான் அவன் எனக்கு வழிகாட்டுவான்" என நம்பிக்கையுடன் சொன்ன மூஸாநபிக்காக ஆர்பரிக்கும் கடலைப் பிளந்தவனே!
"ரப்பே!நான் அநியாயக்கார்களில் ஒருவனாக ஆகிவிட்டேன் என்னை மன்னித்து விடு"என இறைஞ்சிக் கேட்ட யூனுஸ் நபியை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றியவனே!
"என் ரப்பே ! என்னை நோய் கடுமையாக பீடித்திருக்கிறது நீ கருணையாளர்களில் மிகச் சிறந்த கருணையாளன் என உன்னை அழைத்த அய்யூப் நபியை துன்பத்திலிருந்து காப்பாற்றியவனே!
"என் ரப்பே ! எனக்கு உதவி அளி! எனக்கெதிராக யாருக்கும் உதவியளிக்காதே !
எனக்காக திட்டமிடு என்க்கெதிராக யாருக்காகவும் திட்ட மிடாதே" என்று உன்னிடம் இறைஞ்சிய எங்கள் கண்மணி நபிகள் பெருமானார் அவர்களை
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ‏
இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்.
(அல்குர்ஆன் : 54:45) என நபித் தோழர்களுக்கு முன் அறிவிப்பு செய்யவைத்து பத்ரு களத்தில் வெற்றியை அளித்தவனே!
அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்த வல்லவனே!
அல்லாஹ்வே! இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம்.
உலகமெங்கும் பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி இருக்கும் முஸ்லிம்களைக் காப்பாற்றி அருள்வாயாக!
எங்கள் நாட்டில் எங்களை அழித்திட திட்டமிடுவோர்களிடமிருந்து எங்களைக் காப்பாயாக!
எங்களில் சிறையில் வாடுவோர் விரைந்து விடுதலை யாக அருள் புரிவாயாக!
எங்களின் ஈமானை உறுதிப்படுத்துவாயாக!
துன்பங்களைத் தாங்கிடவும் எதிர்த்துக் களம் காணவும் எங்களின் உள்ளங்களுக்கு ஆற்றலைத் தருவாயாக!
கொடிய நோய்களிலிருந்து எங்களையும் எங்கள் நாட்டினரையும் உலக மக்களையும் காப்பாற்றுவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து அந்நிலையிலேயே எங்களின் ஆன்மாவைக் கைப்பற்றுவாயாக
இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்.

Sunday, 22 August 2021

அண்ணல் நபி அவர்களின் பிரார்த்தனை

இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட பிரார்த்தனை.
____________

اللَّهُمَّ أَعْطِنِي إِيمَانًا صَادِقًا ، وَيَقِينًا لَيْسَ بَعْدَهُ كُفْرٌ ، وَرَحْمَةً أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ عِنْدَ الْقَضَاءِ ، وَنُزُلَ الشُّهَدَاءِ ، وَعَيْشَ السُّعَدَاءِ ، وَمُرَافَقَةَ الأَنْبِيَاءِ ، وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ ، اللَّهُمَّ أُنْزِلُ بِكَ حَاجَتِي ، وَإِنْ قَصُرَ رَأْيِي ، وَضَعُفَ عَمَلِي ، وَافْتَقَرْتُ إِلَى رَحْمَتِكَ ، فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الأُمُورِ ، وَيَا شَافِيَ الصُّدُورِ ، كَمَا تُجِيرُ بَيْنَ الْبُحُورِ أَنْ تُجِيرَنِي مِنْ عَذَابِ السَّعِيرِ ، وَمِنْ دَعْوَةِ الثُّبُورِ ، وَمَنْ فِتْنَةِ الْقُبُورِ ،
الكتب » صحيح ابن خزيمة » كِتَابُ الصَّلاةِ
யா அல்லாஹ்!உண்மையான ஈமானையும், 
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்,
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்,
நல்வாய்ப்பைப் பெற்றோர்களின் நல்வாழ்க்கையையும்,
 நபிமார்களின் நல் நேசத்தையும்,
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்.

யா அல்லாஹ்! எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது,
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது,
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்.
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல் எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே,எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே,எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக!-

Thursday, 12 August 2021

துஆ

அல்லாஹும்ம லகல் ஹம்த் 
வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி

யாஅல்லாஹ்! உனக்கே புகழ் அனைத்தும் .
யா ரஹ்மான்! நா வரட்சியால் தவித்த அண்ணை ஹாஜிராவிற்கும் இஸ்மாயில் நபிக்கும் ஜம்ஜம் தண்ணீரை உருவாக்கி மகிழ்வைத் தந்தவனே!
இன்றைய நாளை மகிழ்வானதாகவும, பரக்கதானதாகவும. அதன்பின் துன்பமே வராத பாக்கியமிக்க தாகவும் ஆக்குவாயாக!
சிக்கலாகியிருக்கும் எங்கள் காரியங்களை சீர்திருத்துவாயாக
பரக்கத்தான பெருநாள் காலை வேளையில் உன்னிடம் கையேந்திக் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!

உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!

அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்.

அப் பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்.

அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்.

அப்பார்வையினால் எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்.

அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்.

அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் இம்மை,மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்

அப்பார்வையினால் எம் மக்களை அடக்கி ஆழ நினைப்போரை அவர்கள் புறப்படும் இடத்திலேயே தடுத்து நிருத்தப்படவேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் சிறை வாசிகள் விடுவிக்கப்படவேண்டும். அவர்களின் குடும்பங்களில் மகிழ்சியும், குதூகலமும் நிலவ வேண்டும்.

ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

Friday, 18 June 2021

தந்தைக்காக துஆ

ஜும்மா நாளில் மறைந்த தந்தைக்காக துஆ
----------------------------=-============
என் ரப்பே! என் தந்தையின் கப்ரை ஒளிமயமாக்குவாயாக!
அவருடைய பலவீனத்தின் மீது இரக்கம் கொள்வாயாக!

தனிமையை இனிமையாக ஆக்குவாயாக"
அவருடைய கப்ரை அவர்மீது இரக்கம் கொள்ளச் செய்வாயாக!
மண்ணை அவருக்கு இலேசாக்குவாயாக!

யா அல்லாஹ்! துன்பம் தரும் அனைத்திலிருந்தும் அவரை பாதுகாப்பாயாக!

அவருடைய  கப்ரை சொர்க்கப் பூங்காவின் ஒரு பூங்காவாக மாற்றுவாயாக!
எவ்வித கேள்வி கணக்கின்றி அவரை சுவனத்தில் நுழைய வைப்பாயாக!
  உன் கருணையினால் 
யா அர்ஹமர்ராஹிமீன்.
ஆமீன்

Friday, 11 June 2021

துஆ

الحمد لله الذي رد إلي روحي وعافني في جسدي وأذن لي بذكره ))رواه الترمذي عن أبي هريرة

 எனக்கு உயிரை மீட்டுகொடுத்து எனது உடலில் ஆரோக்கியத்தை அளித்து அவனை  திக்ரு செய்ய அனுமதியளித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
-----


اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ‏"‏ ‏
.‏اخرجه الترمذي

ஏழு வானங்கள் அவை தம் நிழலிருப்பவைகளின் ரப்பே!

ஏழு பூமிகள் அவை சுமந்திருப்பவற்றின்ரப்பே!

ஷைத்தான்களுடையவும்,அவற்றால் வழிகெடுக்கப்பட்டவர்களின் ரப்பே!

  உன்னுடைய படைப்புகள் அனைத்தினுடைய தீங்கை விட்டும், அவற்றில் ஏதாவது ஒன்று என்மீது 
 அநீதி இழைப்பதை விட்டும் எனக்கு பாதுகாவலானக நீ  இருப்பாயாக!

  உன்னால் பாதுகாக்கப்பட்டவனே, உண்மையில் பாதுகாப்படைந்தவன்.

உனது திருநாமமே பரக்கத் பொருந்தியதாகும்.
உன்னையன்றி  வணக்கத்துக்குறிய வேறு இறைவன் இல்லை.
(திர்மதி)

Saturday, 5 June 2021

அண்ணலாரின் அழகிய துஆக்கள்

#அண்ணல் நபிﷺ அவர்களின் அழகிய பிரார்த்தனைகள் (4)
---------

அல்ஹம்துலில்லாஹ.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா
ரசூலில்லாஹ்

     யாஅல்லாஹ்!நிச்சயமாக நான் மார்க்க காரியங்களில் உறுதியோடிருப்பதையும், நேர்வழியில் முனைப்புடன் இருப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.

    உனது கருணையை உறுதிப்படுத்துபவைகளையும்,
உனது பாவமன்னிப்பின் பால் இழுத்துச் செல்பவைகளையும் உன்னிடம் கேட்கிறேன்.

   உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல், உன்னை வணங்குவதுலே நேர்த்தி, உண்மையே உரைக்கும் நாவு, ஸலாமத்துப் பெற்ற இதயம், செவ்வையான குணம் ஆகியவற்றையும் உன்னிடம் கேட்கிறேன்

    நீ அறிந்த நலன்களை வேண்டுகிறேன். நீ அறிந்த ( பாவங்கள்) அனைத்தை விட்டும் மன்னிப்பு தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைந்தவற்றை மிக அறிபவன்.

யா அல்லாஹ்!எங்களுக்கு அதிகரிசெய் குறைத்துவிடாதே! 
எங்களுக்கு கண்ணியத்தை அளி!எங்களை இழிவு படுத்திவிடாதே!

உன அருளை எங்களுக்கு கொடு தடுத்து விடாதே!்
எங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள் ்எங்களுக்கு எதிராக யாரையும் தேர்ந்தெடுத்து விடாதே

எங்களை உன் மீது திருப்தியுள்ளவர்களாகவும நீயும் எங்களின் மீது திருப்தி கொண்டவர்களாகவும்
எங்களை ஆக்குவாயாக!

فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக 
உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101

Wednesday, 26 May 2021

இப்தார் நேர துஆ

இப்தார் நேரத்தில் இறைவனிடம் வேண்டுதல்
_:__
اللهم اجعل ابنائنا حراس الدين ومن الذاكرين والمذكورين والطف بهم اللهم علق قلوبهم بالمساجد وبطاعتك واجعلهم من اوجه من توجه اليك واحبك

யா அல்லாஹ்! எங்கள் பிள்ளைகளை மார்க்கத்தின் பாதுகாவலர்களாகஆக்குவாயாக!
உன்னை நினைப்பவர்களாக, 
நல்ல விஷயங்களில் நினைவூட்டப்படுபவர்களாக ஆக்குவாயாக!
 எங்கள் பிள்ளைகளுக்கிடையை உள் அன்பை உறுதிபடுத்துவாயாக!

அவர்களின் உள்ளங்களை மஸ்ஜிதுடனும்,வணக்கவழிபாடுகளுடனும் தொடர்புடையாதாக ஆக்குவாயாக!
உன்பால் முன்னோக்குபவர்களில்,
உன்னைநேசிப்பவர்களில் முதலாம் வரிசையில் நிற்பவர்களாக ஆக்குவாயாக!

  அவர்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்குவாயாக!
 பெற்றோர்களான நாங்கள் செய்யும் தவறுகளால் எங்கள் பிள்ளைகளின்  இவ்வுலக,மறுஉலக வாழ்க்கையை பாதிக்காமல்  பாதுகாப்பாயாக!
   எங்கள் பிள்ளைகளும் நாங்களும் செய்த பாவங்களை அருள்கூர்ந்து மன்னித்து சொர்கத்திலும் எங்களை ஒன்றினைப்பாயாக!
ஆமீன்.

Tuesday, 25 May 2021

துஆ

: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ 
 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ التَّوْفِيقَ لِمَحَابِّكَ مِنَ الأَعْمَالِ ، وَصِدْقَ التَّوَكُّلِ عَلَيْكَ ، وَحُسْنَ الظَّنِّ
யா அல்லாஹ்!
நிச்சயமாக நான் பூரண ஆரோக்கியத்தையும்,கற்பொழுக்கத்தையும்,அமானிதத்தைப் பேணுவதையும்,நற்குணங்களையும், விதியை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதையும் உன்னிடம் கேட்கிறேன்.
யா அல்லாஹ்! அமல்களில் நீ விரும்புகின்றவைகளின் பாலும்,உன்னின் மீது உண்மையான தவக்குலின் பாலும்,உன்னைப்பற்றிய நல்லெண்ணத்தின் பாலும் எனக்கு நல்லுதவி புரிவாயாக!
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156

Monday, 24 May 2021

ரமளான் மாத துஆ

அல்ஹம்துலில்லாஹில்லதீ ஹதானா லிஹாதா வமா குன்னா நஹ்ததீ லவ்லா அன் ஹதானல்லாஹ்

நாங்கள் இந்த நல்லமல்கள் செய்ய நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
அவன் நேர்வழி காட்டியிராவிட்டால் நாங்கள் நேர்வழியை அடைந்திருக்க முடியாது.

ஏகனே! யாரிடமும் எத்தேவையுமற்றவனே!
உனக்காக,உன் மீதுள்ள விசுவாசத்தால்,உன் நன்மைகளை எதிர் பார்த்தவர்களாக 
முப்பது நாட்கள் நோன்பு நோற்றோம்
முப்பது இரவுகள் நின்று வணங்கினோம்
எங்கள் அமல்களில் எவ்வளவு குறைபாடுகள்  இருந்தாலும் ஏற்றுக் கொண்டு எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

யா அல்லாஹ்! 
பரக்கத்தான இம் மாதத்தில் 
 நீ மன்னிப்பளித்தவர்களில்
ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!பரக்கத்தான  இம்மாதத்தில்  உன் திருப்தியை பெற்றவர்களில் ஒருவனாக என்னையையும்
ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!  இப்புனித மாதத்தில் உன் மன்னிப்பைப் பெற்று நரகம் ஹராமாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக
என்னையையும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
மறுமையில் வலது கையில் குறிப்பேடு அளிக்கப்பட்டு,கேள்விகணக்கும்
லேசாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!மறுமையில் உன் முன்னால் நான் நிற்பதை சிறப்பாக்குவாயாக!!

உன் அழகு முகத்தை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கும் அளிப்பாயாக!

கண்மணி நாயகம் ﷺ அவர்களுடன் சொர்கத்தில் அருகே இருக்கும் பாக்கியத்தை நல்கு வாயாக!
வரும் ரமளான் மாதத்திலும் நோன்பு 
நோற்கும் வாய்ப்பை நல்குவாயாக!

எங்களுக்கு நல்ல உடல்நலத்தையும்,உடல்,மன ராஹத்தையும்,நல்லமல்களுடன் நீண்ட ஆயுளையும் தந்தருள்வாயாக!

எங்கள் பெற்றோர் பாவங்களை மன்னிப்பாயாக!
ரமளான் மாதத்தில் நாங்கள் கேட்ட அனைத்து துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்.

Wednesday, 5 May 2021

துஆ

رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ 
“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” .
 “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ ،رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. 

“எங்கள் இறைவா! ஏக இறைவனை நிராகரிப்பவர்களுக்கு  எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! 

எங்கள் இரட்சகனே!!
 எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5

  யா அல்லாஹ்!உன்னிடம் மன்றாடிக் கேட்கிறேன்

 நீ ஒருவன் ஏகன் யாரிடமும் எத்தேவையும் இல்லாதவன் 

நீ யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெற்றெடுக்கப் படவும் இல்லை 
அத்தகைய என் ரப்பே !என்னுடை பாவங்களை மன்னிப்பாயாக!
நீ மன்னிப்பவன்் கருணையாளன்

اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها
யா அல்லாஹ்! 
பலனில்லாத கல்வியிலிருந்து உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன்

உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்து உன்னிடம்
பாதுகாவல் தேடுகிறேன்

நிறைவுபெறாத மன இச்சைகளைலிருந்து
உன்னிடம் பாது காவல் தேடுகிறேன்

நீ ஏற்றுக் கொள்ளாத துஆக்களிலிருந்து
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

கருணையாளனே! 
அனைத்து முஸ்லிம்களின் துன்பங்களையும்  நீக்குவாயாக!
ஆமீன்

இப்தார் துஆ

யா அல்லாஹ்!
மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்

#இந்நோய்   

நீ நாடியவர்களைத் தொற்றிக் கொள்ளும்,

நீ நாடியவர்களை விட்டும் விலகி ஓடும்

 உனது படைகளில் ஒன்றாக இருக்குமேயானால்

எங்கள் இரட்சகனே!
எங்களின் இல்லங்களை விட்டும்,
எங்களின் குடும்பத்தாரைவிட்டும்,
எங்களின் பிள்ளைகளை விட்டும்,
எங்களின் நேசத்திற்குறியவர்களை விட்டும் 

இந்நோய் அணுகாமல் 
விலக்கிவிடுவாயாக!

உன் உள்ளார்ந்த கருணையினால்
நோயின் தீங்கிலிருந்து எங்களைப்
பாதுகாப்பாயாக!

துன்பங்கள்,சோதனைகளிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!
நீ அனைத்துப் பொருட்களின் மீதும்
ஆற்றல் படைத்தவன்
#இப்தார்பிரார்த்தனை

Thursday, 15 April 2021

எதிரியின் ஏழனச் சிரிப்பிலிருந்து பாதுகாப்பு

اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ))البخاري، كتاب الدعوات، باب التعوذ من جهد البلاء، برقم 6347
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜஹ்தில் பலாயி 
 வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா 
 என் ரப்பே ! தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். 

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆ 
-----------------------------கணியூர் இஸ்மாயில் நாஜி 

ஏகனே! எதிரிகளின் ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து என்னை காப்பாயாக
.
பொது மக்கள் கூடியுள்ள இடத்தில் நாம் ஏதோ ஒரு காரணத்தினால் வழுக்கி விழுந்து விட்டால் உடனடியாக நாம் யாராவது நம்மை பார்த்து கேலியாக சிரிக்கிறார்களா குறிப்பாக நம்முடைய எதிரிகள் நம்மை பார்த்து சிரிக்கிறார்களா என்று பாப்போம்.

அப்படி சிரிப்பதை பார்க்கும் பொழுது விழுந்ததினால் ஏற்படும் வlலியை விட அந்த ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சல் நம்மை மிகவும் பாதிக்கும்.

எதிரிகள் நம்மை பார்த்து ஏளன சிரிப்பு சிரிக்க கூடாது என்று நபிமார்கள் கூட விரும்பியிருக்கிறார்கள். 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்ஸினா மலைக்கு சென்ற போது சமுதாயத்திற்கு வழி நடத்தும் பொறுப்பை தன்னுடைய சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்து சென்றார்கள்.

அவர்கள் திரும்பி வந்த போது அம்மக்கள் காளை மாட்டை வணங்கி இணை வைப்பதை கண்டு மூஸா நபியவர்கள், கோபமுற்று ஹாரூன் நபியின் தலைமுடியையும் தாடியையும் பிடித்து இழுத்தார்கள்.
அப்போது ஹாரூன் நபி சொன்னார்கள்.
7:150  فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ ۖ  قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ 

7:150. ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”

ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் எதிரிகளின் ஏளன சிரிப்பை கண்டு பயந்திருக்கிறார்கள்.
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு குணம் அடைந்த பின் அவரிடம், அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த சோதனைகளில் பெரும் சோதனையாக எதை சொல்வீர்கள்?? என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள். எனக்கு ஏற்பட்ட பெரும் சோதனை எதிரிகள் என்னை பார்த்து ஏளனசிரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என்றார்கள் 

நாம் வாழ்கையில் தோல்வியடைந்து விட கூடாது என்று எண்ணுவதை விட பிறர் நம்மை ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி விட கூடாது என்று தான் நாம் அச்சப்படுவோம்.

இந்த மனித இயல்பை வைத்து தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நமக்கு இந்த துஆ வை கற்றுக் கொடுத்தார்கள். 
6616. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள். 
அறிவிப்பாளர்;அபூஹுரைரா(ரழி)

இன்னொரு ஹதீஸில் 
((اللَّهُمَّ احْفَظنِي بالإِسْلاَمِ قائِماً، واحْفَظْنِي بالإِسْلاَمِ قاعِداً، واحْفَظنِي بالإِسْلاَمِ راقِداً، ولا تُشْمِتْ بِي عَدُوّاً ولا حاسِداً. اللَّهُمَّ إِنِّي أسْألُكَ مِنْ كُلِّ خَيْر خزائِنُهُ بِيَدِكَ، وأعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرَ خَزَائِنُهُ بِيَدِكَ))
 (
 ([1 ([1]) الحاكم، 1/525 وصححه ووافقه الذهبي، وابن حبان، 3/ 214، والدعوات الكبير للبيهقي، ص 165، وحسنه الألباني في صحيح الجامع، 2/398، وفي سلسلة الأحاديث الصحيحة، 4/54، برقم 154])

“அல்லாஹ்வே! நான் நின்ற நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னை பாதுகாப்பாயாக 
 நான் அமர்ந்திருக்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னை பாதுகாப்பாயாக 
 நான் உறங்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னை பாதுகாப்பாயாக 
 என் எதிரி களோ ,பொறாமைக்காரர்களோ என்னைப் பார்த்து நகைக்குமாறு செய்துவிடாதே”
எனும் துஆ வையும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
எனவே நாம் 
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ))
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜஹ்தில் பலாயி 
 வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா 
 என் ரப்பே ! தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். 
என்ற துஆ வை தினந்தோறும் கேட்போம் 
--- நினவூட்டல். 
Kaniyur Ismail Najee Manbayee

فجر ‏دعاء

روى الترمذي (3419) ، وابن خزيمة في "صحيحه" (1119) ، والطبراني في "المعجم الكبير" (10668) ، وأبو نعيم في "حلية الأولياء" (3/ 210)، والبيهقي في "الأسماء والصفات" (105)، من طريق ابنِ أَبِي لَيْلَى، عَنْ دَاوُدَ بْنِ عَلِيٍّ ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْلَةً حِينَ فَرَغَ مِنْ صَلَاتِهِ:

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رَحْمَةً مِنْ عِنْدِكَ تَهْدِي بِهَا قَلْبِي، وَتَجْمَعُ بِهَا أَمْرِي، وَتَلُمُّ بِهَا شَعَثِي، وَتُصْلِحُ بِهَا غَائِبِي، وَتَرْفَعُ بِهَا شَاهِدِي، وَتُزَكِّي بِهَا عَمَلِي، وَتُلْهِمُنِي بِهَا رُشْدِي، وَتَرُدُّ بِهَا أُلْفَتِي، وَتَعْصِمُنِي بِهَا مِنْ كُلِّ سُوءٍ .

اللَّهُمَّ أَعْطِنِي إِيمَانًا وَيَقِينًا لَيْسَ بَعْدَهُ كُفْرٌ، وَرَحْمَةً أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ .

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الفَوْزَ فِي الْقَضَاءِ، وَنُزُلَ الشُّهَدَاءِ، وَعَيْشَ السُّعَدَاءِ، وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ .

اللَّهُمَّ إِنِّي أُنْزِلُ بِكَ حَاجَتِي، وَإِنْ قَصُرَ رَأْيِي وَضَعُفَ عَمَلِي، افْتَقَرْتُ إِلَى رَحْمَتِكَ، فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الأُمُورِ، وَيَا شَافِيَ الصُّدُورِ، كَمَا تُجِيرُ بَيْنَ البُحُورِ، أَنْ تُجِيرَنِي مِنْ عَذَابِ السَّعِيرِ، وَمِنْ دَعْوَةِ الثُّبُورِ، وَمِنْ فِتْنَةِ القُبُورِ .

اللَّهُمَّ مَا قَصُرَ عَنْهُ رَأْيِي، وَلَمْ تَبْلُغْهُ نِيَّتِي، وَلَمْ تَبْلُغْهُ مَسْأَلَتِي مِنْ خَيْرٍ وَعَدْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوْ خَيْرٍ أَنْتَ مُعْطِيهِ أَحَدًا مِنْ عِبَادِكَ، فَإِنِّي أَرْغَبُ إِلَيْكَ فِيهِ، وَأَسْأَلُكَهُ بِرَحْمَتِكَ رَبَّ العَالَمِينَ .

اللَّهُمَّ ذَا الحَبْلِ الشَّدِيدِ، وَالأَمْرِ الرَّشِيدِ، أَسْأَلُكَ الأَمْنَ يَوْمَ الوَعِيدِ، وَالجَنَّةَ يَوْمَ الخُلُودِ، مَعَ المُقَرَّبِينَ الشُّهُودِ الرُّكَّعِ السُّجُودِ ، المُوفِينَ بِالعُهُودِ، إِنَّكَ رَحِيمٌ وَدُودٌ، وإِنَّكَ تَفْعَلُ مَا تُرِيدُ .

اللَّهُمَّ اجْعَلْنَا هَادِينَ مُهْتَدِينَ، غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ، سِلْمًا لِأَوْلِيَائِكَ، وَعَدُوًّا لِأَعْدَائِكَ، نُحِبُّ بِحُبِّكَ مَنْ أَحَبَّكَ، وَنُعَادِي بِعَدَاوَتِكَ مَنْ خَالَفَكَ .

اللَّهُمَّ هَذَا الدُّعَاءُ وَعَلَيْكَ الإِجَابَةُ، وَهَذَا الجُهْدُ وَعَلَيْكَ التُّكْلَانُ .

اللَّهُمَّ اجْعَلْ لِي نُورًا فِي قَلْبِي، وَنُورًا فِي قَبْرِي، وَنُورًا مِنْ بَيْنِ يَدَيَّ، وَنُورًا مِنْ خَلْفِي، وَنُورًا عَنْ يَمِينِي، وَنُورًا عَنْ شِمَالِي، وَنُورًا مِنْ فَوْقِي، وَنُورًا مِنْ تَحْتِي، وَنُورًا فِي سَمْعِي، وَنُورًا فِي بَصَرِي، وَنُورًا فِي شَعْرِي، وَنُورًا فِي بَشَرِي، وَنُورًا فِي لَحْمِي، وَنُورًا فِي دَمِي، وَنُورًا فِي عِظَامِي، اللَّهُمَّ أَعْظِمْ لِي نُورًا، وَأَعْطِنِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًا .

سُبْحَانَ الَّذِي تَعَطَّفَ العِزَّ وَقَالَ بِهِ، سُبْحَانَ الَّذِي لَبِسَ المَجْدَ وَتَكَرَّمَ بِهِ، سُبْحَانَ الَّذِي لَا يَنْبَغِي التَّسْبِيحُ إِلَّا لَهُ، سُبْحَانَ ذِي الفَضْلِ وَالنِّعَمِ، سُبْحَانَ ذِي المَجْدِ وَالكَرَمِ، سُبْحَانَ ذِي الجَلَالِ وَالإِكْرَامِ 

ولفظ ابن خزيمة: بَعَثَنِي الْعَبَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ مُمْسِيًا، وَهُوَ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَلَمَّا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ قَالَ: .. فذكره .

Friday, 19 March 2021

நபிகளாரின் மின்பர்

எங்களின் இரட்சகனே!முடியாததையும் முடித்து வைக்கும் வல்லவனே!"என் வீட்டிற்கும் என் மின்பருக்குமிடையே சொர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா இருப்பதாக எங்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்எந்த இடத்தை   சொன்னார்களோ அந்த இடத்தில் தொழுவதற்கு எங்களுக்கு தவ்பீக் செய்து அருள்புரிவாய்  எங்கள் ரஹ்மானே!
ஆமீன்

Wednesday, 3 March 2021

தேர்வெழுதும் மாணவர்களுக்காக துஆ

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜஅல்த்தஹு ஸஹ்லன் வ அன்த்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்

யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய். 
(ஆதாரம் : இப்னுஹிப்பான்)

பேனாவின் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தவனே! அல்லாஹ்வே!

இன்று தேர்வெழுதும் எங்கள் மாணவச் செல்வங்கள் எவ்வித பதட்டமுமின்றி, நல்ல நினைவாற்றலுடன் தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற உதவி செய்வாயாக!

 எங்கள் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் நீண்ட வாழ் நாட்களைப் பெற்று சிறந்து விளங்க தவ்பீக் செய்வாயாக!

பள்ளிக்கும்,கல்லூரிகளுக்கும் செல்லும் எம் பிள்ளைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் அவர்களைப் பாதுகாப்பாயாக!
கெட்ட நண்பர்களை அணுகாமல் அவர்களை தூரமாக்குவாயாக!

என்றென்றும் எங்களின் கண்குளிர்ச்சியாக அவர்களை ஆக்குவாயாக!
நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் உன்னிடம் இறைஞ்சிய 
  رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌‌ۚ‏ 
“என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89
என்ற  பிரார்த்தனையை உன் முன் வைக்கிறோம்.

எங்களில் யாருக்கும் வாரிசுகள் இல்லாமல் தனியாக விட்டுவிடாதே!
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு உன் பெருங்கருணையினால் அவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை அருள்வாயாக!

எங்களையும்,எங்கள் பிள்ளைகளையும் இம்மையிலும்,மறுமையிலும் இணக்கமாக வாழவைப்பாயாக!
  رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏ 
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14:40
ஆமீன்

Monday, 1 March 2021

நபிகளாரின் அழகிய துஆ

அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை. நீ மடக்கியதை  விரிப்பவர் யாருமில்லை.
நீ வழிகேட்டில்  விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை . நீ நேர்வழி காட்டியவரை  வழி கெடுப்பவர் யாருமில்லை.

நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை 
நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை.

நீ தூரமாக்கியதை  நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை.
நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை.

அல்லாஹ்வே! உனது வளங்களை , உனது கருணையை ,உனது அருட்கொடையை, உனது ரிஜ்குகளை  எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!

 அல்லாஹ்வே! நீங்காத, விலகி விடாத , நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!

அல்லாஹ்வே!  நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்,
அச்சப்படும் நேரத்தில் உனது  பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ்வே! ஈமானை  எங்களுக்கு  பிரியாமானதாக  ஆக்குவாயாக!
அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில்  அழகாக ஆக்குவாயாக!

இறை நிராகரிப்பை, உன்கட்டளைக்கு மாறு செய்வதை, உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதை எங்களுக்கு வெறுப்பாக்கிவைப்பாயாக!

எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கிவிடுவாயாக!
 
அல்லாஹ்வே! எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக!
முஸ்லிமாகவே  வாழ வைப்பாயாக!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைகளுக்கு ஆளாகதவர்களாக,எங்களை நல்லோர்களுடன் சேர்த்துவைப்பாயாக!

அல்லாஹ்வே!  உன் தூதர்களை பொய்யாக்கி  உன் வழியிலிருந்து தடுக்கும் இறை நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடுவாயாக!.
அவர்களின் மீது உனது தண்டனையையும்,வேதனையையும் இறக்கிவைப்பாயாக!

அல்லாஹ்வே! வேதங்கொடுக்கப்பட்டவர்களிலிருக்கும் இறைநிராகரிப்பாளர்களை அழித்தொழிப்பாயாக!
உண்மையான இரட்சகனே!

*****-----*******-*-----

Tuesday, 16 February 2021

دعاء ‏لاولاد

هذا الدعاء لأبنائك و سيبقون بحفظ الله .... ورعايته
🚩
إلى كل أب ،، وأم 
رددوا هذا الدعاء في هذه الأيام :

🔸اللهم إنك وهبت لي
(( و قل أسماء البنات و الأولاد)).. من غير حولٍ مني و لا قوة فاحفظهم بحفظك بلا حولٍ مني ولاقوة
🔸اللهم أحفظهم من أي مكروه يصيبهم و من كل شرٍ و ضرر
🔸اللهم أحفظهم من الأسقام والأمراض
🔸اللهم لا تجعل ابتلائي فيهم
🔸اللهم أجرهم من الفتن ما ظهر منها وما بطن
🔸اللهم أجعلهم من صالح عبادك وحفظة كتابك ومن أحسن الناس ديناً و عبادة و أخلاقاً ومن أسعدهم حياةً و أرغدهم عيشة.ً
🔸اللهم أغنهم بحلالك عن حرامك وبفضلك عمّـن سواك ،،
🔸ربي كما حفظت كتابك إلى يوم الدين، احفظهم من الشيطان الرجيم ،،
🔸ربي أرزقهم صحبة الأخيار وخصال الأطهار و التوكل عليك يا قادر يا جبار،،
🔸ربي أبعد عنهم أمراض القلوب و الأبدان، و بلغني فيهم غاية أملي بحولك و قوتك يا كريم يا منان..
🔸ربي متعني ببرهم في حياتي و أسعدني بدعائهم بعد مماتي.
و صل اللهم و سلم وبارك على خير الأنام وخاتم المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين

( إلهي استودعتُك أبنائي قطعةً من قلبي ، في مكانٍ غابت عنهُم عيني، و عينُك لم تغِب، فاحفظهم حفظاً يليقُ بعظمتك)
وفرج هم من ارسل لي هذه الرساله
وارزقه ما يتمنى
 آمْيِــن ..

دعاء للأبناء، فالرجاء من كل من يصله الدعاء أن يهديه للغالين على قلبه
😍😍

Sunday, 7 February 2021

காலை துஆ

யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே!

 உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே!

 விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே!

 சக்தியுடையவனே! தேவையற்றவனே!

 பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே!

 வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே! 

அனைத்தையும் அறிந்தவனே! 

நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே!

 வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே! 

சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக! 

நீ சொல்லியிருக்கிறாய் : 
“நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.
மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:
“உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.” 
“நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.

யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே!

 உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக! 

உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக
 ஆக்குவாயாக!

 உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!

Tuesday, 26 January 2021

துஆ

அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய சிறப்பான ஜும்மா நாளின்  அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே  உனக்கே புகழ் அனைத்தும் !

யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும்  உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!

யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!

யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!

யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!

யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து  அருள் புரிவாயாக!

எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத்  தருவாயாக! 

ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!

யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிராயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!

யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள்  பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக 

கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!

யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக! 
எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !

என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக, உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக 
சல்லல்லாஹு அலா முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம்
 வல் ஹம்து லில்லாஹி ரப்புல்ஆலமீன்

Sunday, 17 January 2021

‎دعاؤ

اللهم استر بناتنا.. واحفظ أولادنا.. واهد نساءنا.. وارض عن آبائنا.. وأكرم أمهاتنا.. واشف مرضانا.. وارحم موتانا.. وفك أسرنا.. كما نسألك الهدى والتقى والعفاف والغنى.. نسألك العدل عند الغضب والرضا.. والقصد عند الفقر والغنى.. نسألك لذة النظر إلى وجهك الكريم.. وتحية الملائكة المقربين.. وأن نكون من أصحاب عليين.. في روح وريحان.. عند رب راضٍ غير غضبان.. يا ذا الجلال والإكرام.. يا أرحم الراحمين

Friday, 15 January 2021

dua

ربي ، طهر قلبي ، واغفر ذنبي
 استر عيبي ، بارك وقتي
 و “أنر دربي ”

اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب

என் இரட்சகனே!
என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!
என் பாவத்தை மன்னிப்பாயாக!
என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!
என்னுடைய குறையை மறைப்பாயாக!
என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!
எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!
எங்கள் பாதையை லேசாக்குவாயாக!
எங்களின் எதிர்பார்ப்புகளை
 உறுதிப்படுத்துவாயாக!
எங்களின் துஆக்களுக்கு
 பதிலளிப்பாயாக!
கவலைகள்,நிராசைகளுக்கு
 எங்கள் உள்ளங்களில் வழி
 ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

dua

ربي ، طهر قلبي ، واغفر ذنبي
 استر عيبي ، بارك وقتي
 و “أنر دربي ”

اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب

என் இரட்சகனே!
என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!
என் பாவத்தை மன்னிப்பாயாக!
என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!
என்னுடைய குறையை மறைப்பாயாக!
என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!
எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!
எங்கள் பாதையை லேசாக்குவாயாக!
எங்களின் எதிர்பார்ப்புகளை
 உறுதிப்படுத்துவாயாக!
எங்களின் துஆக்களுக்கு
 பதிலளிப்பாயாக!
கவலைகள்,நிராசைகளுக்கு
 எங்கள் உள்ளங்களில் வழி
 ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

Monday, 11 January 2021

ஜும்மா துஆ

اللهم في يوم الجمعه أرزقنا نوراً في القلب وضياء في الوجه وسعةَ في الرزق وثباتاً على الحق  ومحبة في قلوب الخلق واستجابة للدعاء ياالله ❤
யா அல்லாஹ்! இந்த ஜும்மா நாளில் எங்கள் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக!
எங்கள் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துவாயாக!
சத்தியத்திலேயேநிலைத்து நிற்கச் செய்வாயாக!
உன்னுடைய படைப்பினங்களில் உள்ளங்களில் எங்களின் மேல் அன்பை உருவாக்குவாயாக!
இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக!

‏اللهم أني أستغفرك من جميع الذنوب والخطايا التي أعلمها والتي لا أعلمها سبحانك تعلم مافي نفسي ولا أعلم مافي نفسك وأنت علام الغيوب
அல்லாஹ்வே!நான்  அறிந்த,நான் அறியாமல் செய்த பாவங்கள்,தவறுகள்  அனைத்திற்காகவும் உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்.
 
நீ பரிசுத்தமானவன் ,என் உள்ளத்தில் உள்ளவற்றை நீ அறிவாய். நீ நினைப்பதை என்னால் அறியமுடியாது.
நீ அனைத்து ரகசியங்களையும் நன்கு அறிந்தவன்.
يارب من كان في قلبه ألم فخفف عنه و اقض حاجته إن كان بها خيرا له ولا تجعل حاجاتنا عند أحد من خلقك 
என் ரட்சகனே! எவருடைய உள்ளத்தில் வேதனை இருக்கிறதோ அதை அவருக்கு லேசாக்குவாயாக!
அவருடைய தேவைகளை அவை அவருக்கு பலன் தருமானால் அவற்றை நிறைவேற்றுவாயாக!
எங்கள் தேவைகளுக்காக உன்னை அல்லால் யாரிடமும் கெஞ்சவைத்துவிடாதே!
اللهم افتح لي أبواب الخير والرزق والسعادة من حيث لا أحتسب

யாஅல்லாஹ்!எனக்கு உன்னுடைய நன்மைகள்,ரிஜ்க் மற்றும் பாக்கியங்களின் வாசல்களை நாங்கள் அறியாத புறத்திலிருந்து திறந்துவிடுவாயாக!
ஆமீன்

Monday, 4 January 2021

சுப்ஹுத் தொழுகை துஆ

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ
. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا

. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا

. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِ يَاكَرِيْمُ يَارَحِيْمُ.
 اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ.
 وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ.

 وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.
பொருள்:இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

  எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

   சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!
! அல்லாஹ்வின் சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.
 (ஆமீன்)