Monday, 26 March 2018

காலை துஆ

காருண்யநபி ﷺ அவர்கள் தினந்தோறும் கேட்ட துஆ
**************------*************----***-----------------

: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ القَبْرِ، وَعَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغرب

, 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃக்ரமி, வல்மஃஸம். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபிந் நாரி, வ ஃபித்னத்திந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். வபாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷரிக்கீ வல்மஃக்ரிப்'

அல்லாஹ்வே! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, பெருங்குழப்பவாதியானமஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.
ஏகஇறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என்னிலிருந்தும் என் தவறுகளைக் கழுவிடுவாயாக!மேலும், வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக!.)'
அறிவிப்பாளர்:அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்

Saturday, 3 March 2018

தேர்வெழுதும் மாணவ,மாணவிகளுக்காக

اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ولك الحمد اذا رضيت.

யா அல்லாஹ்!யா ரஹ்மான்!யாரஹீம்!
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இவ்வேளையில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தொழ வாய்ப்பளித்த உனக்கே  எல்லாப்புகழும்
 
எங்கள் இறைவா! எங்களுக்கு நீ அளித்துள்ள மக்கள் செல்வத்திற்கு எத்துனை கோடிமுறை உனக்கு நன்றி செலுத்தினாலும் அவை உனது இந்த கொடைக்கு ஈடாகாது.
உனக்கு எங்களால் இதற்கு இணையான நன்றி செலுத்தவே முடியாது !
   அனைத்தையும் அறிந்தவனே!
இன்று எங்கள் பிள்ளைகள் இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியமான தேர்வு எழுத இருக்கின்றனர்.
    இரட்சகனே! அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தருவாயாக!
நல்ல நினைவாற்றலைத் தருவாயாக!
பதட்டமில்லாமல் தேர்வெழுதும் மன உறுதியைத் தருவாயாக!
  உயர் கல்வியைக் கற்கும் அளவிற்கு நல்ல மதிப்பெண்கள் பெற அருள் புரிவாயாக!
   எங்கள் ரப்பே! எங்கள் பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக,உனக்கு நன்றி உள்ள அடியார்களாக வாழ வைப்பாயாக!
அவர்கள் பெறும் கல்வி இம்மைக்கும்,மறுமைக்கும்,நாட்டிற்கும்,வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பலனுள்ளதாக ஆக்குவாயாக!
  யா அல்லாஹ்!நீ அளித்த இந்த பிள்ளைகள் பெற்றோர்களான நாங்கள் வாழும் காலமெல்லாம் எங்கள் கண்களையும்,உள்ளங்களையும் குளிரச்செய்யும் வகையில் நற்செயல்கள் செய்பவர்களாக ஆக்குவாயாக!
எங்கள் மறைவிற்குப் பிறகும் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களைத் தருவாயாக!
   எதிர்பாரமல் வரும் ஆபத்துகளிலிருந்து எங்களையும் அவர்களையும் காப்பாயாக!

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்