மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலையில் திக்ர் செய்யும் வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் தனிப் பெருங் கருணை உண்டாவதாக
اللهم إني أسألك في صلاتي ودعائي . بركة تطهر بها قلبي، وتكشف بها كربي ، وتغفر بها ذنبي ، وتصلح بها أمري ، وتغني بها فقري ، وتذهب بها شري
யா அல்லாஹ்! என்னுடைய தொழுகையிலும்,என்னுடையதுஆ விலும்
பரக்கத்தைக் கேட்கிறேன் .
அதன் மூலம் என் உள்ளம் பரிசுத்தமடைய வேண்டும்.
என்னுடைய துன்பங்கள் நீங்க வேண்டும்
,என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்,
'என் ஏழ்மை நீங்கி நான் தன்னிறைவு அடைய வேண்டும்'
என்னுடைய காரியங்கள் சீரமைக்கப்படவேண்டும்,
என்னுடைய தீமைகள் போக்கப்படவேண்டும்,
என்னுடைய கவலைகள்,துக்கங்கள் மகிழ்ச்சியாக மாற்றப்படவேண்டும்,
என்னுடை நோய் குணமாக வேண்டும்,
என்னுடைய கடன்கள் நிறைவேறவேண்டும்,
என்னுடைய முகம் பிரகாசமாக வேண்டும்.
யா அல்லாஹ்! யாரஹ்மான்!
என்னுடைய தொழுகை உன்னுடைய பரக்கத்தை கொண்டு வரும் வகையில் முழுமையாக அமைய தவ்பீக் செய்வாயாக!
ஸல்லல்லாஹு அலா கைர கல்கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வ ஸல்லிம் அலைஹி.
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஆமீன்
No comments:
Post a Comment