Monday, 3 October 2022

من أروع ما قرأت عن السجود :

إذا أردت قبول عملك 
قل وأنت ساجد : (ربنا تقبل منا إنك انت السميع العليم) 

إذا خفت من أن يزوغ قلبك 
قل وأنت ساجد : 
(ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب) 

إذا أردت الذرية الصالحة 
قل وأنت ساجد : 
(رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء) 
(رب لا تذرني فردا وانت خير الوارثين) 

إذا أردت البركة في بيتك 
قل وأنت ساجد : 
(رب أنزلني منزلا مباركا وانت خير المنزلين) 

إذا أردت الشهادة قل وأنت ساجد : 
(ربنا ءامنا فاكتبنا مع الشاهدين) 

واذا تريد الله يلهمك الصبر 
قل وأنت ساجد: 
(ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين) 

هل أنت مهموم 
قل وأنت ساجد:
(حسبي الله لا إله إلا هو عليه توكلت وهورب العرش العظيم)

لست موفقا في حياتك 
قل وأنت ساجد : 
(وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب) 

هل أنت حزين : 
قل وأنت ساجد : 
(إنما أشكو بثي وحزني إلى الله) 

تريد المحافظة على الصلاة انت وذريتك 
قل وأنت ساجد : ي
(ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء) 

تحس بضيق في صدرك 
قل وأنت ساجد : 
(قال رب اشرح لي صدري ويسر لي أمري) 

تجهل كثيرا من الأمور قل وأنت ساجد : 
(رب زدني علما) 

لتبعد الشياطين عنك 
قل وأنت ساجد : 
(وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون) 
و
إذا كنت مريضا 
قل وأنت ساجد : 
(وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين) 

تخاف من عذاب جهنم 
قل وأنت ساجد : 
(ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما) 

هل تريد زوجة محبة ( هل تريدين زوجا محبا ) وأولادا بارين ومطيعين 
قل وأنت ساجد : 
(ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين و اجعلنا للمتقين إماما) 

اللهم ارزقنا حسن الخاتمة واجعل خير اعمالنا خواتيمها واجعل خير ايامنا يوم نلقاك يارب يا ارحم الراحمين

Monday, 7 February 2022

ஜுமுஆ துஆ

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா அமாத்தனா வஇலைஹிந் நுஷுர்
  எங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலை நேரத்தில் தொழ
வாய்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும்.
  யா அல்லாஹ் இந்த பரக்கத்தான ஜும்மா நாளில் உன்னை பணிந்து 
கேட்கிறேன் ,இந்த நாளின் அனைத்து நன்மைகளையும் எங்களுக்குத் தருவாயாக !
எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக! 
எங்களின் ரப்பே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதையே அளிப்பாயாக! 
அல்லாஹ்வே எனது காரியங்களுக்குப் பாதுகாவலாய் அமையும் எனது தீனை செம்மைப்படுத்துவாயாக! எனது வாழ்வு கழியும் இந்த துன்யாவை எனக்கு முறைப்படித்துத்  தருவாயாக நான் மீண்டு எழும்      
மறுமை வாழ்வை செம்மையாக்குவாயாக நற்காரியங்களைச் செய்வதில் எனது வாழ்நாளை அதிகப்டுத்துவயாக தீய காரியத்தை விடுவதில் மரணத்தை எனக்கு சுகமாக்குவாயாக
 நீ யாருக்கெல்லாம் நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக,
 நீ யாருக்கெல்லாம் சுகத்தைத்தந்தாயோ அவர்களுடன் எனக்கும் சுகத்தைத் தருவாயாக     
நீ யாரையெல்லாம் நண்பனாக ஆக்கி கொண்டா யோ அவர்களில் என்னையும் இணைத்துக் கொள்வாயாக 
 நீ கொடுத்ததில் பரக்கத்தைத் தருவாயாக 
நீ நிர்ணயத்தில் தீங்கை விட்டும் என்னைக் காப்பாயாக 
 யா அல்லாஹ்! உன்னிடம் நிரந்தரமான ஈமானைக் கேட்கிறேன்.
என்றும் உன்னை அஞ்சும் உள்ளத்தைக் கேட்கிறேன்.
இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் கல்வியைக் கேட்கிறேன்.
உண்மையான நம்பிக்கையைக் கேட்கிறேன்.
உறுதியான நேர்வழியைக் கேட்கிறேன்.
ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் சுகத்தைக் கேட்கிறேன்.
எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவைகளின் காரணமாக உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்துவிடாதே!
எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக உன்னிடம் உள்ள அபரிதமான நன்மைகளை தடுத்துவிடாதே!
எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக கேள்விக்கணக்கு கேட்கும் நாளில் எங்களை தண்டித்துவிடாதே!
எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக எங்களுக்கு எந்த இழப்பையும்  செய்துவிடாதே!
நீ சங்கைக்குரியவன்! உன்னுடைய கருணை அனைத்துப் பொருட்களின் மீது பரவி இருக்கிறது!
எங்களின் துஆவை ஏற்றுக்கொள்வாயாக!
اللهم صَــــــل وَسَلَّم علَےَ مُحمَّــــــــدْ و علَےَ آل مُحمَّــــــــدْ كما صَــــــلٌيت وَسَلَّمْتَ علَےَ إِبْرَاهِيمَ و علَےَ آل إِبْرَاهِيمَ إِنَّك حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك علَےَ مُحمَّــــــــدْ و علَےَ آل مُحمَّــــــــدْ كما باركت علَےَ إِبْرَاهِيمَ و علَےَ آل إِبْرَاهِيمَ فى الْعَالَمِينَ إِنَّك حَمِيدٌ مَجِيد

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

Sunday, 16 January 2022

ஏக இறைவனே!

அல்ஹம்துல்லில்லாஹ்!  ஆழ்ந்து உறக்கத்தில் இருந்த எனக்கு உயிர் கொடுத்து புனிதமான  அதிகாலை தொழுகையை நிறைவேற்ற அருள் புரிந்த  அல்லாஹ்வே உனக்கே எல்லாப் புகழும்!எப்பொழுதும் உன்னை தொழுகின்ற பாக்கியத்தை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அருள்வாயாக!

அண்ணல் நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அருளைப் பொழிவாயாக!

           யா அல்லாஹ்! என்னைப் பராமரிப்பவனே !எனது இரட்சகனே! எனது ரப்பே! சக்தியுடைவனே! எக்கருவியுமின்றி கேட்கும் சக்திபடைத்தவனே! ‘இணை’ என்பதே இல்லாதவனே! எவருடைய ஆலோசனைக்கும் தேவையில்லாதவனே! சூரியனையும்,பிரகாசிக்கும் சந்திரனையும் படைத்தவனே!

 சோதனைகள் சூழ, அச்சப்பட்டு அடைக்கலம் தேடுபவனுக்கு அடைக்கலமானவனே!

 சின்னஞ்சிறு குழந்தைக்கு(ம்) இரணமளிப்பவனே! உடைந்த எலும்பை ஒன்று கூட்டுபவனே! சோதனைகள் சூழப்பட்ட இவ்வேளை உன்னை அழைக்கிறேன். ஆபத்துகள் நிறைந்த நிலைகுலைந்தவன் அழைப்பது போல உன்னை அழைக்கிறேன்

உனதுகுர்ஆனை எனது இதயத்தின் வசந்தமாகவும்,எனது கவலைகளைப் போக்கும்படியும் கேட்கிறேன்.

              எங்கள் ரப்பே! இவ்வுலகில் எங்கள் உள்ளத்தில் சூழ்ந்து இருக்கும் கவலைகளை போக்குவாயாக! நாங்கள் கேட்பதையும் கேட்க நினைப்பதையும் எங்களுக்கு எது நலம் பயக்குமோ அவைகளையும் அளிப்பாயாக! தனித்தோரின் கவலைப் போக்கும் சிறந்த நண்பனே!  துணையற்றவரின் துணைவனே! தூரத்திலன்றி அண்மையிலே இருப்பவனே! மறையாமல் முன்னாலேயே இருப்பவனே! 
         யாராலும் மிகைக்க முடியாதவனே!

 நித்திய ஜீவனே! நிலையாக இருப்பவனே! கண்ணியமும்,கம்பீரமும் நிறைந்தவனே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளியானவனே! அவற்றை அழகாக அமைத்தவனே! அவற்றை தாங்கி நிற்பவனே! அவற்றை முன்மாதிரி இன்றியே படைத்தவனே!

 அவற்றை நிலையாய் பராமரித்து வருபவனே! 
வலுப்பும் சங்கையும் உடையவனே!

 முறையிடுவோரின் முறையீட்டை கேட்பவனே! பாதுகாப்பு வேண்டுவோரின் எல்லையானவனே! துன்பப்பட்டோரை விடுவிப்பவனே! கவலை கொண்டோருக்கு நிம்மதியளிப்பவனே! நிலைக்குலைந்தவரின் அழைப்பை ஏற்பவனே! கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை நீக்குபவனே! உலகத்தாரின் இலாஹே! கருணை புரிவோரில் மாபெரும் கருணையாளனே! தேவைகள் அனைத்தும் உன் முன்னாலேயே வைக்கப்படுகின்றன.அவைகளை நிறைவேற்றி அருள் புரிவாயாக! ஆமீ ன்.
أستغفر الله العظيم وأتوب إليه
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحمَّد وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ