எங்களின் இரட்சகனே!முடியாததையும் முடித்து வைக்கும் வல்லவனே!"என் வீட்டிற்கும் என் மின்பருக்குமிடையே சொர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா இருப்பதாக எங்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்எந்த இடத்தை சொன்னார்களோ அந்த இடத்தில் தொழுவதற்கு எங்களுக்கு தவ்பீக் செய்து அருள்புரிவாய் எங்கள் ரஹ்மானே!
முகநூலில் நான் பதிவு செய்த துஆக்கள். ஒவ்வொரு நாளும் என் மன நிலையை பிரதிபலிக்கும் பிரார்த்தனைகள்
Friday, 19 March 2021
Wednesday, 3 March 2021
தேர்வெழுதும் மாணவர்களுக்காக துஆ
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜஅல்த்தஹு ஸஹ்லன் வ அன்த்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்
யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.
(ஆதாரம் : இப்னுஹிப்பான்)
பேனாவின் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தவனே! அல்லாஹ்வே!
இன்று தேர்வெழுதும் எங்கள் மாணவச் செல்வங்கள் எவ்வித பதட்டமுமின்றி, நல்ல நினைவாற்றலுடன் தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற உதவி செய்வாயாக!
எங்கள் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் நீண்ட வாழ் நாட்களைப் பெற்று சிறந்து விளங்க தவ்பீக் செய்வாயாக!
பள்ளிக்கும்,கல்லூரிகளுக்கும் செல்லும் எம் பிள்ளைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் அவர்களைப் பாதுகாப்பாயாக!
கெட்ட நண்பர்களை அணுகாமல் அவர்களை தூரமாக்குவாயாக!
என்றென்றும் எங்களின் கண்குளிர்ச்சியாக அவர்களை ஆக்குவாயாக!
நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் உன்னிடம் இறைஞ்சிய
رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَۚ
“என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89
என்ற பிரார்த்தனையை உன் முன் வைக்கிறோம்.
எங்களில் யாருக்கும் வாரிசுகள் இல்லாமல் தனியாக விட்டுவிடாதே!
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு உன் பெருங்கருணையினால் அவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை அருள்வாயாக!
எங்களையும்,எங்கள் பிள்ளைகளையும் இம்மையிலும்,மறுமையிலும் இணக்கமாக வாழவைப்பாயாக!
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14:40
ஆமீன்
Monday, 1 March 2021
நபிகளாரின் அழகிய துஆ
அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை.
நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை . நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை.
நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை
நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை.
நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை.
நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை.
அல்லாஹ்வே! உனது வளங்களை , உனது கருணையை ,உனது அருட்கொடையை, உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!
அல்லாஹ்வே! நீங்காத, விலகி விடாத , நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!
அல்லாஹ்வே! நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்,
அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்.
அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அல்லாஹ்வே! ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக!
அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக!
இறை நிராகரிப்பை, உன்கட்டளைக்கு மாறு செய்வதை, உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதை எங்களுக்கு வெறுப்பாக்கிவைப்பாயாக!
எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கிவிடுவாயாக!
அல்லாஹ்வே! எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக!
முஸ்லிமாகவே வாழ வைப்பாயாக!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைகளுக்கு ஆளாகதவர்களாக,எங்களை நல்லோர்களுடன் சேர்த்துவைப்பாயாக!
அல்லாஹ்வே! உன் தூதர்களை பொய்யாக்கி உன் வழியிலிருந்து தடுக்கும் இறை நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடுவாயாக!.
அவர்களின் மீது உனது தண்டனையையும்,வேதனையையும் இறக்கிவைப்பாயாக!
அல்லாஹ்வே! வேதங்கொடுக்கப்பட்டவர்களிலிருக்கும் இறைநிராகரிப்பாளர்களை அழித்தொழிப்பாயாக!
உண்மையான இரட்சகனே!
*****-----*******-*-----
Subscribe to:
Posts (Atom)