#அண்ணல் நபிﷺ அவர்களின் அழகிய பிரார்த்தனைகள் (4)
---------
அல்ஹம்துலில்லாஹ.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா
ரசூலில்லாஹ்
யாஅல்லாஹ்!நிச்சயமாக நான் மார்க்க காரியங்களில் உறுதியோடிருப்பதையும், நேர்வழியில் முனைப்புடன் இருப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.
உனது கருணையை உறுதிப்படுத்துபவைகளையும்,
உனது பாவமன்னிப்பின் பால் இழுத்துச் செல்பவைகளையும் உன்னிடம் கேட்கிறேன்.
உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல், உன்னை வணங்குவதுலே நேர்த்தி, உண்மையே உரைக்கும் நாவு, ஸலாமத்துப் பெற்ற இதயம், செவ்வையான குணம் ஆகியவற்றையும் உன்னிடம் கேட்கிறேன்
நீ அறிந்த நலன்களை வேண்டுகிறேன். நீ அறிந்த ( பாவங்கள்) அனைத்தை விட்டும் மன்னிப்பு தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைந்தவற்றை மிக அறிபவன்.
யா அல்லாஹ்!எங்களுக்கு அதிகரிசெய் குறைத்துவிடாதே!
எங்களுக்கு கண்ணியத்தை அளி!எங்களை இழிவு படுத்திவிடாதே!
உன அருளை எங்களுக்கு கொடு தடுத்து விடாதே!்
எங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள் ்எங்களுக்கு எதிராக யாரையும் தேர்ந்தெடுத்து விடாதே
எங்களை உன் மீது திருப்தியுள்ளவர்களாகவும நீயும் எங்களின் மீது திருப்தி கொண்டவர்களாகவும்
எங்களை ஆக்குவாயாக!
فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக
உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101
No comments:
Post a Comment