Friday, 15 September 2017

சஹர் நேர துஆ

அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லாஹும்ம லகல் ஹம்து வலக் ஷுக்று

கருணையாளனே !
உன் கருணையினால் அதிகாலை தொழுகையை தொழுதோம்

யா ரப் !எங்கள் அமல்கள் எவ்வளவு குறைபாடாக இருந்தாலும் ஏற்றுக்கொள்

!நாங்கள் பலவீனமானவர்கள்,நீ கொடுத்த அருட்கொடைகளுக்கு நிகராக எங்களால் வணங்கமுடியாது

நாங்கள் உன்னையே வணங்கிறோம் உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம்

உன் அருள் இரங்கும் சஹர் நேரத்தில் கேட்கிறோம் எங்கள் துஆ வை ஏற்றுக்கொள்வையா க !

உன் நபி உன்னிடத்தில் எதையெல்லாம் கேட்டார்களோ அவைகளை எங்களுக்கும் கொடுப்பாயாக

எதை எதையெல்லாம் விட்டும்  பாதுகாப்பு கேட்டார்களோ அவற்றை எல்லாம் விட்டு எங்களை பாதுகாப்பாயாக

ஏக இறைவா!

வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!

வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் 

யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே!

என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக!

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.
வ ணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை

நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாயகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

யா அல்லாஹ் ! என்னை மன்னித்து விடு!

யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு!

யா அல்லாஹ் !என்னை மன்னிப்பாயாக!

எனக்கு அருள் புரிவாயாக!

எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக!

எனக்கு ரிஜ்க் அளிப்பாயாக!

என்னை உயர்த்துவாயாக!

இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.

என் ரப்பே  பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக.

நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து

இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

என் இரட்சகனே!
என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக.

நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்!

முஸ்லிமான மக்களுக்கு பாது காப்பளிப்பாயாக ! எதிர்படைகளை தோற்கடிப்பாயாக!

இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.

இ றைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.

இ றைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக.

நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக.

எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!

இ றைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.

இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு!

அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன்.

இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்.

எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ கருணை புரிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் கருணை புரிவாயாக!

நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்கள் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்.
ஆமீன்

No comments:

Post a Comment