Thursday, 14 September 2017

ஜும்மா நாளில் துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.

கருணையாளனே! பரக்கத்தான ஜும்மா நாளில் உன்னிடம் கையேந்தி கேட்கிறோம்
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்!
நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே!
நீ அதை வாழச் செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.

யா அல்லாஹ்! நல்லறிவால்   எனக்கு உதவி செய்வாயாக!.
சகிப்புத்தன்மையால்  எனக்கு அழகை கொடுப்பாயாக!.
தக்வாவால் எனக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை  எனக்கு அலங்காரமாக அளிப்பாயாக!

யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன்.
நான், ஒரு மனிதன் எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக!
அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர் உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!

அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக!
எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!

என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களைக் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளைமன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

ஆமீன்

No comments:

Post a Comment