اللهم اجعلنا ممن عفوت عنهم
اللهم اجعلنا ممارضيت عنهم
اللهم اجعلنا مماغفرت لهم وحرمتهم من النار
اللهم يمن كتابي ويسر حسابي
اللهم احسن وقوفي بين يديك
اللهم ارزقنى جنتك
அல்ஹம்துலில்லாஹ்! அருள் இறங்கும் அதிகாலை நேரத்தில் உன்னை வணங்க அருள் புரிந்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும் .
யா அல்லாஹ்! நீ மன்னிப்பளித்தவர்களில்
ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! உன் திருப்தியை பெற்றவர்களில் ஒருவனாக என்னையையும்
ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! உன் மன்னிப்பைப் பெற்று நரகம் ஹராமாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக
என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! மறுமையில் வலது கையில் குறிப்பேடு அளிக்கப்பட்டு,கேள்விகணக்கும்
லேசாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!மறுமையில் உன் முன்னால் நான் நிற்பதை சிறப்பாக்குவாயாக!!
யா அல்லாஹ்! எனக்கு சொர்க்கத்தை வழங்குவாயாக!
யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் எவரின் முன்பும் என்னைக் கேவலப்படுத்துவிடாதே!
யா அல்லாஹ்! இன்று லட்சக்கணக்கான உன் நல்லடியார்கள் அரபா மைதானத்தில்
கூடி உன் அருளைத் தேடுகிறார்கள்
அவர்களின் துஆக்களை ஏற்றுக் கொள்வாயாக!
வரும் ஆண்டு அரபா நாளில் அந்த மைதானத்தில் உன் பாவமன்னிப்பை தேடுபவர்களில் ஒருவனாக எங்களையையும் ஆக்குவாயாக!
ஆமீன்.
No comments:
Post a Comment