Thursday, 27 April 2017

நீ திருப்தி கொள்ளும் பாதையில்

الحمد لله  الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ 
اللهم استعملني لما يرضيك
اللهم اجعل سمعي لا يسمع إلا ما يرضيك
اللهم اجعل بصري لا يرى إلا ما يرضيك
اللهم اجعل يدي لا تبطش إلا بما يرضيك
اللهم اجعل رجلي لا تمشي إلا لما يرضيك
اللهم اجعل عقلي لا يفكر إلا فيما يرضيك
اللهم اجعل قلبي لا ينبض إلا بما يرضيك
اللهم اجعل لساني لا ينطق إلا بما يرضيك
اللهم اجعلني وأهلي وأصدقائي وإخواني والمسلمين والمسلمات لما يرضيك وبما يرضيك وفيما يرضيك
اللهم ءامين

யா அல்லாஹ் நான் செய்த அனைத்து பாவங்களிலிருந்து தவ்பா செய்கிறேன்.
என்னுடைய சிறிய,பெரிய, பாவங்களையும்,தெரிந்தும்,தெரியாமாலும் செய்த அனைத்து தவறுகளையும் மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்!
நீ திருப்திகொள்ளும் நல்லமல்களுக்கு என்னை பயன்படுத்துவாயாக!
நீ திருப்திப்படுபவைகளை தவிர வேறு எதனையும் கேட்காமல் என் செவியை ஆக்குவாயாக!

யா அல்லாஹ் நீ திருப்தி கொள்பவைகளைத் தவிர வேறு எதையும்
பார்க்காமல் என் கண்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! நீ திருப்தி கொள்பவைகளைத் தவிர வேறு எதனையும் பிடிக்காமல் என் கரங்களை
ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! நீ திருப்தி கொள்ளும்
பாதையிலேயே தவிர வேறு பாதையில் செல்லாமல் என் கால்களை ஆக்குவாயாக!
நீ திருப்தி கொள்ளும் விஷயங்களைத் தவிர வேறெதனையும் சிந்திக்காமல் என் அறிவை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!நீ திருப்தி கொள்ளுபவைகளுக்காகவே தவிர
வேறெதற்கும் துடிக்காமல் என் உள்ளத்தை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! நீ திருப்தி கொள்பவைகளைத் தவிர வேறெதனையும் பேசாமல் என் நாவை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! என்னையையும்,என் குடும்பத்தாரையும்,என் நண்பர்களையும்,
என் சகோதரர்களையும்,அனைத்து முஸ்லிம்களையும் நீ திருப்தியடையும் வழியில் நடத்தாட்டுவாயாக!
ஆமீன்

No comments:

Post a Comment