Thursday, 27 April 2017

ஷஃபான் மாத முதல் பிறை துஆ

பரக்கத்தான ஷஃபான் மாத முதல் ஜும்மா இரவில் உன்னிடம் கையேந்திக் கேட்கிறோம்
யா அல்லாஹ்!யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!
உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!
அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்.
அப் பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்.
அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட  வேண்டும்.
அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்.
அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்.
அப்பார்வையினால்  எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்.
அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்.
அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்.
அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்.
அப்பார்வையினால்  எங்கள் இம்மை,மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்.
ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

No comments:

Post a Comment