يارب ياعالم بحالي اليك اشتكى مني ومن ضعفي فأعني على نفسي وقوني بك واعذني من شر خلقك وكيدهم وارزقني سعادة اضعاف ما اتمنى واحبتي
யா ரப்! என்னுடைய நிலைமையை அறிந்தவனே!
உன்னிடமே என்னைப்
பற்றி,என்னுடைய பலவீனத்தைப் பற்றி
முறையிடுகிறேன்.
என்னுடைய நப்ஸிற்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!
உன்னைக் கொண்டு என்னை உறுதிப் படுத்துவாயாக!
உன்னுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்தும்,அவைகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக!
என் இரட்சகனே!
நான் கற்பனை செய்வதை விட என் நேசத்திற்குறியவர்கள் விரும்புவதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியை எங்களுக்கும் அவர்களுக்கும் அருள்வாயாக"
எங்களின் பாவங்களையும் ,தவறுகளையும் மன்னித்து அவைகளை எங்களின் பதிவேட்டிலிருந்து நீக்குவாயாக!
எங்களின் மீது கருணைகாட்டுவாயாக
யா ஹய்யு யா கய்யூம்! அஸ்தஙீசு பிரஹ்மத்திக.
நித்திய ஜீவனே! நிலைத்திருப்பவனே!
உன்னுடைய கருணையை க்கொண்டு உன்னிடம் உதவி தேடுகிறேன்.
ஏங்களின் பிரார்த்தனைகளை,எங்களின் வேண்டுதலை, நிராகரித்து விடாதே!
எங்களின் ரப்பே!
ஆமீன்.
No comments:
Post a Comment