Sunday, 16 January 2022

ஏக இறைவனே!

அல்ஹம்துல்லில்லாஹ்!  ஆழ்ந்து உறக்கத்தில் இருந்த எனக்கு உயிர் கொடுத்து புனிதமான  அதிகாலை தொழுகையை நிறைவேற்ற அருள் புரிந்த  அல்லாஹ்வே உனக்கே எல்லாப் புகழும்!எப்பொழுதும் உன்னை தொழுகின்ற பாக்கியத்தை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அருள்வாயாக!

அண்ணல் நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அருளைப் பொழிவாயாக!

           யா அல்லாஹ்! என்னைப் பராமரிப்பவனே !எனது இரட்சகனே! எனது ரப்பே! சக்தியுடைவனே! எக்கருவியுமின்றி கேட்கும் சக்திபடைத்தவனே! ‘இணை’ என்பதே இல்லாதவனே! எவருடைய ஆலோசனைக்கும் தேவையில்லாதவனே! சூரியனையும்,பிரகாசிக்கும் சந்திரனையும் படைத்தவனே!

 சோதனைகள் சூழ, அச்சப்பட்டு அடைக்கலம் தேடுபவனுக்கு அடைக்கலமானவனே!

 சின்னஞ்சிறு குழந்தைக்கு(ம்) இரணமளிப்பவனே! உடைந்த எலும்பை ஒன்று கூட்டுபவனே! சோதனைகள் சூழப்பட்ட இவ்வேளை உன்னை அழைக்கிறேன். ஆபத்துகள் நிறைந்த நிலைகுலைந்தவன் அழைப்பது போல உன்னை அழைக்கிறேன்

உனதுகுர்ஆனை எனது இதயத்தின் வசந்தமாகவும்,எனது கவலைகளைப் போக்கும்படியும் கேட்கிறேன்.

              எங்கள் ரப்பே! இவ்வுலகில் எங்கள் உள்ளத்தில் சூழ்ந்து இருக்கும் கவலைகளை போக்குவாயாக! நாங்கள் கேட்பதையும் கேட்க நினைப்பதையும் எங்களுக்கு எது நலம் பயக்குமோ அவைகளையும் அளிப்பாயாக! தனித்தோரின் கவலைப் போக்கும் சிறந்த நண்பனே!  துணையற்றவரின் துணைவனே! தூரத்திலன்றி அண்மையிலே இருப்பவனே! மறையாமல் முன்னாலேயே இருப்பவனே! 
         யாராலும் மிகைக்க முடியாதவனே!

 நித்திய ஜீவனே! நிலையாக இருப்பவனே! கண்ணியமும்,கம்பீரமும் நிறைந்தவனே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளியானவனே! அவற்றை அழகாக அமைத்தவனே! அவற்றை தாங்கி நிற்பவனே! அவற்றை முன்மாதிரி இன்றியே படைத்தவனே!

 அவற்றை நிலையாய் பராமரித்து வருபவனே! 
வலுப்பும் சங்கையும் உடையவனே!

 முறையிடுவோரின் முறையீட்டை கேட்பவனே! பாதுகாப்பு வேண்டுவோரின் எல்லையானவனே! துன்பப்பட்டோரை விடுவிப்பவனே! கவலை கொண்டோருக்கு நிம்மதியளிப்பவனே! நிலைக்குலைந்தவரின் அழைப்பை ஏற்பவனே! கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை நீக்குபவனே! உலகத்தாரின் இலாஹே! கருணை புரிவோரில் மாபெரும் கருணையாளனே! தேவைகள் அனைத்தும் உன் முன்னாலேயே வைக்கப்படுகின்றன.அவைகளை நிறைவேற்றி அருள் புரிவாயாக! ஆமீ ன்.
أستغفر الله العظيم وأتوب إليه
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحمَّد وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ

No comments:

Post a Comment