Saturday, 3 March 2018

தேர்வெழுதும் மாணவ,மாணவிகளுக்காக

اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ولك الحمد اذا رضيت.

யா அல்லாஹ்!யா ரஹ்மான்!யாரஹீம்!
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இவ்வேளையில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தொழ வாய்ப்பளித்த உனக்கே  எல்லாப்புகழும்
 
எங்கள் இறைவா! எங்களுக்கு நீ அளித்துள்ள மக்கள் செல்வத்திற்கு எத்துனை கோடிமுறை உனக்கு நன்றி செலுத்தினாலும் அவை உனது இந்த கொடைக்கு ஈடாகாது.
உனக்கு எங்களால் இதற்கு இணையான நன்றி செலுத்தவே முடியாது !
   அனைத்தையும் அறிந்தவனே!
இன்று எங்கள் பிள்ளைகள் இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியமான தேர்வு எழுத இருக்கின்றனர்.
    இரட்சகனே! அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தருவாயாக!
நல்ல நினைவாற்றலைத் தருவாயாக!
பதட்டமில்லாமல் தேர்வெழுதும் மன உறுதியைத் தருவாயாக!
  உயர் கல்வியைக் கற்கும் அளவிற்கு நல்ல மதிப்பெண்கள் பெற அருள் புரிவாயாக!
   எங்கள் ரப்பே! எங்கள் பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக,உனக்கு நன்றி உள்ள அடியார்களாக வாழ வைப்பாயாக!
அவர்கள் பெறும் கல்வி இம்மைக்கும்,மறுமைக்கும்,நாட்டிற்கும்,வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பலனுள்ளதாக ஆக்குவாயாக!
  யா அல்லாஹ்!நீ அளித்த இந்த பிள்ளைகள் பெற்றோர்களான நாங்கள் வாழும் காலமெல்லாம் எங்கள் கண்களையும்,உள்ளங்களையும் குளிரச்செய்யும் வகையில் நற்செயல்கள் செய்பவர்களாக ஆக்குவாயாக!
எங்கள் மறைவிற்குப் பிறகும் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களைத் தருவாயாக!
   எதிர்பாரமல் வரும் ஆபத்துகளிலிருந்து எங்களையும் அவர்களையும் காப்பாயாக!

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்

No comments:

Post a Comment