Thursday, 5 October 2017

ஈத் பெருநாள் வாழத்து

முகமறியாமல் முக நூல் வழியாக உள்ளங்களில் சகோதர பாசத்தை ஏற்படுத்தும் என் அன்பு சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

ஈத்عيد என்றஅரபி வார்த்தை க்கு திரும்ப திரும்ப வருதல் என்பது  பொருளாகும் .மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் அவன் வாழ்கின்ற காலமெல்லாம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.  அளவற்ற ஆனந்தத்தை தரும் நாளை அரபியர் இது போன்ற நாள் திரும்ப திரும்ப வரவேண்டும் என்பதற்காக ஈத்  என அழைத்தனர்

قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ  ﴿5:114﴾
5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

இந்த வசனத்தில் ஈத் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது

ஜும்மா நாளையும் ஈத் என்று  ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை ஒரு தகவலுக்காக இங்கு குறிப்பிட்டேன்

எல்லாம் வல்ல அல்லாஹ்  உங்கள் அனைவரின் வாழ்க்கையில் இது போன்ற பல ஈத்களை கொண்டாட அருள் புரிவானாக!

இன்று போல் என்றும் உங்கள்  குடும்பத்தில் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் நிரப்புவானாக!

இன்றைய பெருநாளில் எப்படி தோளோடு தோளாக நம் சகோதரர்கள் நின்று தொழுதார்களோ  அதே போன்று வாழ்கின்ற காலமெல்லாம்  அல்லாஹ்வும் ரசூலும் காட்டிய வழியில் ஒன்றாக இணைந்திருக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

ஆமீன்

No comments:

Post a Comment