Thursday, 4 May 2017

துஆ

அல்லாஹ்வே !என் எஜமானே !படைத்தவனே !ரிஜ்க் அளிப்பவனே !மன்னிப்பவனே !

அருட் கொடையாளனே !
நீ தான் என் பாதுகாவலன் !
நீ தான் வணக்கத்துக்குரியவன்

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!
என்னுடைய தவறுகளை
பொருட்படுத்தாமல்
விட்டுவிடு வாயாக !

குறைவாக இருந்தாலும் உன் மார்க்க சேவையில் ஈடுபட தவ்பீக்
செய்வாயாக !

நீ என்னை படைத்தவன் !நான் படைக்கப்பட்டவன்

நீ ரிஜ்க் அளிப்பவன் ,நான் ரிஜ்க் அளிக்கப்படுபவன்

நீ மன்னிப்பவன் நான் உன்னிடம் மன்னிப்பை தேடுபவன் .

நீ அருட்கொடையாளன் ,
நான் உன்னிடம் யாசிப்பவன்

இந்த ஏழை.உன்னுடைய தர்பாரில் கை யேந்தி நிற்கிறேன்

நாங்கள் எந்த நிலையிலும் நீ மட்டுமே எங்களின் வணக்கத்துக்குரியவன் ,
என உன்னை மட்டுமே
வணங்கிவருபவர்கள்

எங்கள் பாவங்களை மன்னித்து எங்களின் இம்மை மறுமை தேவைகளை நிறைவேற்று வாயாக !
ஆமீன்

No comments:

Post a Comment