Saturday, 25 February 2017

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ  رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; நரகநெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்களுடைய ஆன்மாக்களைச் சான்றோர்களுடைய ஆன்மாக்களுடன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.

      يارب يارب يارب  اللهم  ياكبير  ياسميع يابصير  يامن لا شريك له ولا وزير له

என்னைப் பராமரிப்பவனே!எனது இரட்சகனே!எனது ரப்பே!யா அல்லாஹ்!
வலுப்பமுடையவனே! எதனுடைய துணையுமின்றி கேட்கும் ஆற்றலுடையவனே! எதனுடைய துணையுமின்றி பார்க்கும் சக்தியுடையவனே! இணை என்பதே இல்லாதவனே! ஆலோசனை அளி்ப்போரும் இல்லாதவனே!
சூரியனையும்,பிரகாசிக்கும் சந்திரனையும் படைத்தவனே!
சோதனைகள் சூழப்பட்டு அச்சப்பட்டு அடைக்கலம் தேடுபவனுக்கு அடைக்கலமானவனே!
   எங்களை இவ்வுலக ஆபத்துகளிலிருந்து காப்பாயாக!
எங்களின் தேவைகளை நிறைவேற்றுவாயாக!
எங்களை யாரிடமும் கையேந்தாதவர்களாக ஆக்குவாயாக!
என்றென்றும் உன் திருப்தியை பெற
வணங்கும நல்லடியார்களா எங்களை ஆக்குவாயாக!
யா ரப்பல் ஆலமீன்
ஆமீன்

No comments:

Post a Comment