அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மாஅமாஅத்தனா வ இலைக்க ந்நுஷூர்
யா ரப் இன்று எங்களுக்கு உயிர் கொடுத்து புதிய நாளைக் கொடுத்துள்ளாய் அதன உன்னுடைய வணக்க வழிபாடுகளில் தொடங்கி உன்னுடைய கருணையையும்
் மன்னிப்பையும் திருப்தியையும் பெற்ற நாளாக முடித்து வைப்பாயாக!
எங்களின் இம்மை மறுமை தேவைகளை பூர்த்தி செய்வாயாக!
எங்களின் கவலைகளைப் போக்குவாயாக
اللهم اكتب لنا تغيرا للأفضل، في نفوسنا و أحوالنا و حقق لنا ما نتمنى، يارب إنا نستودعك كل ما نخشى فقدانه، ف أنت خير الحافظين
யா அல்லாஹ்! எங்கள் நப்ஸிலும், எங்கள் நிலைமைகளிலும்,நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவாயாக!
எங்களின் கற்பனைகளை உண்மையாக்குவாயாக!
எங்கள் இரட்சகனே! நாங்கள் எதனை இழந்துவிடுவோம் என அஞ்சுகிறோமோ அவற்றை உன்னிடமே ஒப்படைக்கிறோம்.
நீ தான் சிறந்த பாதுகாவலன்.
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!னன எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட எங்களால் தாங்க முடியாதசுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக!
எங்கள் மீது கருணை புரிவாயாக!
நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளரான கூட்டத்தாரின் மீது எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
ஆமீன்
No comments:
Post a Comment