Sunday, 10 January 2016


அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா வஅமாத்தனா வஇலைஹிந் நுஷுர்
மீண்டும் எங்களுக்கு உயிர் கொடுத்த அல்லாஹ்வே!, உனக்கே எல்லாப் புகழும்.

கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என உனது தூதர் தனது நண்பரிடம் சொன்னதாக அருள்மறையில் கூறியுள்ளாய். அதனை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம்.

நீ எங்களுடன் இருக்கின்றாய் என்ற நம்பிக்கைத் தான் எங்களை வாழ வைக்கின்றது.அந்த நம்பிக்கையை உறுதிப் படுத்துவாயாக!

துன்யாவில் ஃபித்னாக்களும் ஃபஸாதுகளும் எங்கள் ஈமானை பலகீனமாக்கி தடுமாற வைக்கின்றன.
உன் அருள் இல்லாவிட்டால் எப்பொழுதோ நாங்கள் ஈமானை நழுவ விட்டிருப்போம்.

ஒவ்வொரு நேர பாங்கு அழைப்பும் எங்கள் ஈமானை புதுப்பிக்கிறது

என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் தொழுபவர்களாக ஆக்குவாயாக!
இந்த உலகத்தின் ஃபித்னாவில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக!

தீய நண்பர்களை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
தீய அண்டை வீட்டாரை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
தீய ஆட்சியாளரை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
தீய அதிகாரிகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
இந்த உலகத்தின் வாழ்வாதரங்களுக்காக மறுமை வாழ்வை மறந்து வழி தவறி செல்லாமல் எங்களை பாதுகாப்பாயாக!
ஒரு நிமிடம் கூட எங்கள் நஃப்ஸின் பக்கம் எங்களைத் தள்ளி விடாதே!
எப்பொழுதும் எங்களுடன் இருந்து நேரிய பாதையில் எங்களை செலுத்துவாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய ரஸூலுடைய கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு மரணிக்கின்ற பொழுது கூட உனக்கு கட்டுப்பட்டவர்களாகவே எங்களை மரணிக்க செய்வாயாக!
இன்றைய நாளை எங்களுக்கு பலன் உள்ளதாக ஆக்குவாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

No comments:

Post a Comment